பாரதம் என்பதோர்ப் பெருங்கடல் அதனுள்,
ஆழ்ந்தும் முத்தெடுத்தல் ஆகும் உத்தமர்க்கு,
வேதம் வேதாந்தம் வழங்கும் கருத்துக்கள்,
முழுதும் விரவிய மாண்புடையக் காவியம்,
கற்பதும் உரைப்பதும் கேட்பதும் களிப்பாகும்,
தற்பரன் நாரணன் தன்னுள் உலகுற்று,
உற்பத்தியும் அழிவும் உண்டாக்கும் திறங்கூறி,
மனத்தையும் சாந்தியில் மிகைக்கவே வைக்கும்.