மனிதனின் சுதந்திரத்தைப் பறித்து அவனை அடிமையாக்கி விலங்கினும் கீழ்த்தரமாய் நடத்தி தன் சுயநலங்களை பூர்த்தி செய்து கொள்ளும் கூட்டங்கள் பெருவாரியானவை ஐரோப்பிய நாடுகளே. பதினாறாம் நூற்றாண்டு துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இவர்கள் பல நாடுகளில் காலனி அமைத்து அந்நாட்டுச் செல்வங்களைச் சூறையாடினார்கள், அது மட்டுமல்லாது அந்நாட்டு மக்களையும் அடிமையாக்கி மிகவும் கீழ்தரமாக நடத்தினார்கள், இப்படிப்பட்ட இழிநிலையை அனுபவித்து மாண்டவனே மாவீரன் ஓருநோக்கோ. அவனது அவலக்கதையை நேரில் கண்ட ஆஃப்ரா பென் எனும் அம்மையார் அவனது சரிதத்தை நூலாக வெளியிட்டார் அதனைத் தழுவியே இந்தத் தமிழ் காவியம் புதுக்கவிதை வடிவில் உருவானது.
இதனைப் படிப்பவர் நிச்சயம் உணர்ச்சி வசப்படுவர். கண்முன் நடக்கும் ஆராஜக அநீதிகளைத் தட்டிக் கேட்க முன்வருவர்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners