Share this book with your friends

Vetkai / வேட்கை Iyarkayin neenda vetkayil nenaiya

Author Name: Dr.Imalayen, Sundaramurthy | Format: Paperback | Genre : Poetry | Other Details

வேட்கை என்னும் இந்த கவிதை தொகுப்பு இயற்கையோடு மனிதன் இணைந்து இசைத்து வாழ வேண்டியது அவசியத்தை உணர்த்தும் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும். இரவு வானத்தின் இதமான காட்சி, மலைகள் இசைக்கும் மொழி, கடல்கள் தரும் அமைதி, குருவிகள் கோயில்கள் சத்தத்தில் கொஞ்சம் உறைந்து போகும், ஆறு குளம் ஏரிகளின் மீது நாம் வைக்க வேண்டிய அக்கறை, மழையை ரசித்து மழை நீரை சேகரித்து நம் வாழ்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், குழந்தைகளையோடு இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சி கொள்ளும் ஆனந்தமயமைக்க வாழ்வு, ஆகிய அனைத்தையும் கவிதைகளாக தாங்கி வரும் இந்த கவிதை தொகுப்புக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்கி எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

திரு. Dr. இமாலயன், Sundaramurthy

உலகத்தின் முதல் மொழியான தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று தமிழாலும் கவி எழுதும் திறனாலும் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டவன்.

Dr. இமாலயன், ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பிரசன்டேஷன் கான்வென்ட் ஸ்டெல்லா மேல்நிலைப் பள்ளியில் படித்து, எட்டாம் வகுப்பை அன்னை தெரசா பள்ளியில் படித்து, பதினோராம் பன்னிரண்டாம் வகுப்பை சி எஸ் ஐ தூயத்துவமா பள்ளியில் நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த கல்லூரி ஆன சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளியல் படிப்பை முடித்து, கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகம் மற்றும் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்று, சிக்கிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளியல் முடித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணியை இறைவனின் ஈடு இணையற்ற அருளால் நிறைவு செய்துள்ளேன். கடந்த ஆண்டு மதுரை ஆத்மா யூனிவர்சிட்டி எனக்கு இலக்கியத்திற்கான கௌரவ டாக்டர் பட்டத்தை அழித்து சிறப்பித்தது. தமிழ் ஆர்வமும் தமிழ் பற்றும் படைப்புலகுக்கு ஏதேனும் படைப்புகளை செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தையும் இளம் வயதிலேயே எனக்கு ஊட்டிய என்னுடைய ஆசான்கள் திருமதி உஷா, திரு. செல்வமணி திரு ஆல்செட் தேவனேசன், திரு பர்ணனாஸ் பாஸ் ஆப்ரகாம்,  பேராசிரியர் பெருந்தகை முனைவர் திரு அமல்ராசு ஐயா அவர்கள், பெற்றோர்கள் உடன் பிறந்த சகோதரிகள் என் மனைவி மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் என் இலக்கியப் பணி செவ்வனே தொடர்கின்றன. படைப்புகளை வெளிப்படுத்துவதில் எனக்கு பெரிதும் துணையாக இருந்து அவற்றை சிறப்புற செய்து கொண்டு இருக்கும் தம்பி ராஜ் பிரகாஷ், புதுச்சேரி அவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் படைப்புகளை வாங்க என்னைப் பற்றிய விவரங்களை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Read More...

Achievements

+3 more
View All