கண்ணீர் துளிகள்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (58 )

கார்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடைப்பட்ட நாட்கள் அது. ஊட்டியில் அன்று குளிர் அதிகமாகவே இருந்தது. இறை தேடிச் செல்லும் பறவைகளும் புலரும் பொழுதில் குளிரைக் கண்டு அஞ்சி கூட்டை விட்டு வெளியேறாமல் குஞ்சுகளை அணைத்தவாறு இருந்தன. மீனா மட்டும் படுக்கையை விட்டு எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து லட்சணமாக மாகோலமிட்டு அடுக்கலைக்குள் புகுந்து கொண்டாள். இது அவளுக்கு பழக்கப்பட்ட ஓர் வேலைதான் ஆனால் சமிபமாக அவளுக்கே இதெல்லாம்; சலித்து போய்விட்டது. காபி போட்டு வந்து ஹாலில் அமர்ந்து சுவற்றில் இருக்கும் அவள் திருமண போட்டோவை உற்றுப் பார்த்தவாறு காபியைக் குடித்தாள். காபி குளிர்ந்து விட்டது ஆனால் அந்த பார்வை மட்டும் மாறவே இல்லை. அந்த பார்வையில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவள் கடைசியாக சந்தோசமாக இருந்த நாட்கள் அது என எண்ணிப் பார்கிறாளே! என்னவோ? ஏதோ சிந்தனையில் திளைத்திருந்த அவள் மனதைக் கலைத்தது ஒரு குரல் “மீனா காபி கொண்டுவாமா” என்றார் பிரகாசம். பிரகாசம்இ முன்னாள் அஞ்சல் துறை அலுவலர் 67 வயது மதிக்கத்தக்க முதியவர் “இதோ வரேன் மாமா” என்று மறுகுரல் கொடுத்தாள் மீனா. பிரகாசத்திற்க்கு அந்த வீட்டில் பிடித்தது அவரது சாய்வு நாற்காலியும் தாழ்வாரமும் தான். செய்திதாளும் வந்தது தினமும் ஒரே செய்திதான் பெயரும் தேதியும் மட்டும் தான் மாறுகிறது என்று சலித்துக் கொண்டே செய்திதாளை விரித்தார்.


பேப்பர் வந்த சத்தம் கேட்டதும் சத்யவானும் எழுந்து வந்தான். அவனை பார்த்ததும் பிரகாசத்தின் முகத்தில் ஓர் சுழிற்ச்சி. இது தான் வளர்த்தப் பிள்ளை தானா என அவருக்கே சந்தேகம். இருவரும் காபி குடித்து முடிப்பதற்குள் மீனா சமையல் வேலைகளை துவங்கி விட்டாள். “ஜானவி எழுந்திரி அப்பா எழுந்துட்டார்” என்று மீனாவின் குரல் கேட்டதும் கனவு கலைந்ததுத் துள்ளி எழுந்தாள் ஜானவி. அன்றும் அப்பாவிடம் அடி வாங்கும் கனவுதான். அப்பா என்று சொன்னதும் அடுத்த அரைமணி நேரத்தில் அவசர அவசரமாக கிளம்பி ஹாலுக்கு வந்தாள். சாப்பிடும் போதும் கூட கையில் புத்தகம் இருந்தது எல்லாம் நேற்று வாங்கிய பெல்ட் அடியின் வண்ணம்தான். கணக்கில் 4 மதிப்பெண் குறைந்து விட்டதாம் அதற்கு அவ்வளவு கோவம். குழந்தையின் மீது. குழந்தையை பார்த்து கொள்வது தான் உன் வேலை வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று மீனாவிடம் கத்தினான். புத்தகம் கையில் மட்டும் தான் இருந்தது ஆனால் கவனம் எல்லாம் டி.வியில்தான். செய்தி பார்த்துக் கொண்டிருந்த ஜானவி தீடீரென சாப்பிடுவதை நிறுத்தினாள் சரியாக பள்ளி வேன் ஹாரன் அடித்தது. மீனாவிடம் கூட சொல்லாமல் வேகமாக பையை எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள். அவளை பார்த்த பிரகாசம் “டாடா” என்றார். ஏதோ யோசனையில் இருந்த அவள் காதுகளிள் அது விழவில்லை. வேனில் ;ஜானவியின் அமைதியைக் கண்ட பிரதீப் அவளுக்கு சாக்லேட் கொடுத்தான். அவள் அதை வாங்க மறுத்து சன்னல் வழியே பார்த்தவாறு வந்தாள். குழந்தைகளை வேனிலிருந்து தினமும் இறக்கி விடும் சின்னாவின் கையைக் கூட பிடிக்காமல் அவளே இறங்கி பள்ளியினுள் சென்றாள். வகுப்பிலும் அதே அமைதி. அன்று தமிழ் தேர்வுக்கான விடைத்தாளை ஆசிரியர் வழங்கினார். ஜானவி முழுமதிப்பெண் பெற்றிருந்தும் அவளுக்குக் சந்தோசம் இல்லை. அவள் அப்பாவிடம் கூறினாள் திரும்பவும் கணக்கில் குறைந்த 4 மதிப்பெண் பற்றி கூறித் திட்டுவார் என எண்ணினாள். அவளைத் தட்டிக்கொடுத்து பாராட்டிய ஆசிரியரைக் கூட வெறித்துப் பார்த்தாள்.


ஜானவி கிளம்பியதும் சத்யவானும் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான். ரயில் பயணம் முழுவதும் ஆயிரம் கேள்விகள் ஏன் இந்த வாழ்க்கையெனஇ சத்யவான் அரசாங்கத்தின் ஓர் நேர்மையான ஊழியராக இருந்தவன். தந்தையைப் போலவே நேர்மையாக வாழ வேண்டும் என எண்ணி அரசாங்க வேலையில் சேர்ந்தான் சத்யவான். ஆனால் காலம் அவனது அந்தக்கனவை கலைத்து விட்டது. நேர்மையாக இருந்த போது அவனைப் பிழைக்க தெரியாதவன் என்றார்கள். அவன் கூட தற்சமயம் குடும்பத் தேவைக்காக ஓர் ஊழல் செய்து விட்டான். மீனா வேலைக்குப் செல்வதன் மூலமே தீர்த்திருக்க முடியும்;. ஆனால் அவள் வேலை பார்ப்பதில் அவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அவனது இந்த ஊழல் விபரம் சக ஊழியர்களுக்கு தெரிந்ததும் கேலிப் பேச்சுக்கு அளவில்லை. “என்னப்பா நேர்மை சிகாமணி இப்படி பண்ணிட்ட” எனக் கூறி அவனை எரிச்சல் அடைய செய்தார்கள். தன் தவறை எண்ணி தன் மீதே சினத்தோடு இருக்கும் அவனுக்கு இது எரிகிற தீயில் எண்ணெயெய் ஊற்றுவது போல் இருந்தது. யார் மீது இந்த சினத்தைக் காட்டுவது மீனா எவ்வளவு தான் பொறுத்துப் போவாள். தினமும் அவள் மீது எரிச்சல் காட்டுவான். இப்போது அது ஜனாவியிடமும் தொடங்கி விட்டது . “குழந்தையை அடிக்காதே” என்ற பிரகாசத்தை அவள் என் குழந்தை எனக் கூறி வாயை அடைத்து விட்டான். இப்பொழுதெல்லாம் அவன் திட்டுவதற்காக மீனா அழுவதே இல்லை. அவள் மனம் கல்லாகி விட்டது.தான் அவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறோம் என எண்ணி வெட்கப்பட்டான். அவன் அலுவலகத்திற்கு சென்றதும் மேசையில் இருந்த ஜனாவியின் போட்டோவை பார்த்து மன்னிப்பு கேரும்; விதம் புன்னகைத்தான்.
ஜானவிக்கு அன்று மதியம் தொடுதல் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் எது என மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது. அதைக் கவனித்த அவளுக்கு ஏதேதோ எண்ணங்கள். எட்டு வயது குழந்தைக்கு எட்டாத எண்ணங்கள் அது. பள்ளி முடித்து வந்ததும் தன் அறைக்கு ஓடிச் சென்று பொம்மைகளை விசி எறிந்து அழுதாள். மீனா எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் தோற்றாள். அதே நேரம் சத்யவான் வீடு வந்து சேர்ந்தான்.
ஜானவியின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செருப்பு அவனுக்கு வித்தியாசமாய் இருந்தது. வீட்டினுள் குழந்தை அழும் சத்தம் கேட்டு அறை வாசலிலேயே நின்றுவிட்டான். வெகு முயற்சிக்கு பிறகு ஜானவி அழுது கொண்டே காலையில் பார்த்த செய்தியிலிருந்து தொடர்ந்து சிறப்பு வகுப்பு வரை கூறி முடித்தாள். 10 வயது குழந்தைக்கு நடந்த வன்கொடுமை அத்துமீறல் தொடர்பான செய்தி அது. அவள் மீனாவை பார்த்து “சிறப்பு வகுப்பு எடுக்குற மிஸ் சொன்னாங்க இதெல்லாம் இப்ப அதிகம் ஆயிடுச்சினு எனக்கும் இது மாதிரி எதாவது நடக்குமா அம்மா” எனக் கேட்டதும் இடிவிழுந்தது போல் இருந்தது மீனாவுக்கு. குழந்தையின் கேள்விக்கு பதில் இல்லாமல் அவளும் அழுதாள். பல நாட்களாக் தேக்கி வைத்த கண்ணீர் அது.


இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சத்யவானுக்கும் கண்களில் கண்ணீர் கசிந்தது. அப்பா என்று அதட்டி வளர்க்கப்பட்ட குழந்தையின் கண்ணீர் அவன் மனதைக் கரைத்தது. வெளியிலிருந்து வந்த பிரகாசத்தை பார்த்ததும் அப்பாயெனக் கூறி கட்டியணைத்தான். “என்னாச்சு” என்ற பிரகாசத்தின் கேள்விக்கு கண்ணீர் துளிகளே பதிலாக கிடைத்தது. மகனின் கண்ணீர் கண்ட அவர் செய்வதறியாது நின்றார். இரவு உணவுக்குப் பிறகு ஜனாவி வீட்டுப் பாடங்களைச் செய்தாள். சத்யவான் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் அமைதியாக இருந்தாள். சத்யவான் அருகில் இருந்த அவள் தமிழ் தேர்வுத்தாளைப் பார்த்து பாராட்டினான். இது அவள் எதிர் பாராதது. அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவள் “அப்பா இனி என்ன அடிக்க மட்டிங்கல்ல” என கேட்டாள். நிச்சயமாக மாட்டேன் என்றவன் அவளி;டம் “பாப்பா உன்னுடன் நான் இருக்கிறேன். என்னை விட மனவலிமை மிக்க அம்மா உன்னுடன் இருக்கிறாள். நீ எதற்காகவும் யாரைக்கண்டும் பயப்பட கூடாது” என்றான். அவள் அப்பா எனக் கூறி அவனைக் கட்டியணைத்தாள். இழந்தது திருப்பிக் கிடைத்தது போல் இருந்தது அவனுக்கு.


சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரகாசத்தை சென்று பார்த்தான். அவர் கண் முடி ஏதோ சிந்தனையில் இருந்தார். சத்யவான் வந்ததும் கண் திறந்து பார்த்தார். அவனை அருகில் அமரச் சொன்னார். அவர் புன்னகைத்தார். சத்யவான் என்னப்பா என்று கேட்டான். “இன்னைக்கு சாய்ந்தரம் மார்கட் போய்ட்டு வரும் போது உன்னோட நண்பர பாத்தேன் உன்னோட நிலமையயும் அந்த ஊழல் விபரம் மற்றும் சக ஊழியர்கள் நடந்துக்குற விதம் பற்றியும் சொன்னார்” என்றார். அவன் தலைக்கவிழ்ந்தான். பிரகாசம் தொடர்ந்தார் “நீ என்னோட மகன்பா நான் உன்ன ரெம்ப நேர்மையாதான் வளர்த்தேன். எல்லார் வாழ்க்கையிலையும் தவறுகள் நடக்கும் இதேல்லாம் பெருசா எடுத்துக்காத அவங்களாள பேச மட்டும் தான் முடியும். இனி இந்த தப்ப இப்பவும் பண்ணாத” என்றார். இனி இப்படி நடக்காது எனக் கூறி மன்னிப்புக் கேட்டான்.
மறுநாள் காலையில் மீனா எழுந்தரித்த போது வாசல் தெளித்து கோலமிட்டு இருந்தது. சமையலறைக்கு சென்று சத்யவான் காபிப் போட்டுக் கொண்டு இருந்தான். அவளிடம் காபியைக் கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்டான். மீனா “எதற்கு” என்றாள். நான் செய்தது மிகப் பெரிய தவறு உன் விருப்பத்தை நான் கேட்டதே இல்லை. உன் உணர்வுகளுக்கு மதிப்பலிக்காமல் இருந்தேன். ஏன் கோபத்தை உன்னிடம் காட்டி விட்டேன். மீனா “எனக்கு நன்றாக தெரியும் உங்களப் பத்தி இனி உங்க பிரச்சனைகளை என்னிடமும் சொல்லுங்க” என்றாள். இருவரும் காபியைக் குடித்ததும் மீனா அவனிடம் தான் வேலைக்கு செல்லலாமா எனக் கேட்டாள். அவனும் இனி உனது முடிவுகளை நீயே எடுக்கலாம் என்றான்.


அன்று விடுமுறை தினம் ஜனாவி டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றும் அதே போல் ஓர் செய்தி இருவரும் அவளைப் பார்த்தனர். இன்று அவள் முகத்தில் பயம் இல்லை. அதைக் கண்ட சத்யவான் கண்களில் சிறு துளி எட்டிப் பார்த்தது சந்தோஷத்தில்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...