Current View
பாண்டிய பேரரசர்கள்
பாண்டிய பேரரசர்கள்
₹ 625+ shipping charges

Book Description

முதலாம் தமிழ் சங்க காலம் முதல் 10ம் நூற்றாண்டு பிற்பகுதி முடிய மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வரலாற்று சம்பவங்களை தொகுத்து நூலாசிரியர் புத்தகமாக வழங்கியுள்ளார். மதுரை தோன்றிய விதத்தையும் , பாண்டிய மன்னர்கள் வீரத்தையும் , மக்கள் நலப் பணியையும் , கட்டிடக் கலை [ எல்லோரா மற்றும் குடவரை கோவில்] நுணுக்கங்களையும், சமயம் சார்ந்த அதிசய நிகழ்வுகளையும் இந்த நூல் விளக்குகிறது.   அந்த காலக் கட்டத்தில் நிகழ்ந்த சளுக்கியர் படையெடுப்புக்களை எவ்வாறு மாறவர்மன் அரிகேசரி மற்றும் அவன் மைந்தன் கோச்சடையன் தோற்கடித்தார்கள் என்பதை பற்றி இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது, பல்லவர் --பாண்டியர் இடையே நிகழ்ந்த அரசியல் மோதல்களும் அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.   சேர ,சோழ, பாண்டியர்களை தவிர புதுப் புது அரசுகள் எவ்வாறு தோன்றின ? என்றும் விளக்கப்பட்டுள்ளது.   பல்லவர்களின் வீழ்ச்சியையும் , பிற்கால சோழைர்களின் எழுச்சியையும் இந்த புத்தகம் நன்கு விளக்குகிறது   இந்த புத்தகம் 10ம் நூற்றாண்டு முடிய தமிழ் நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.