Current View
சர்வதேச அரசியல்
சர்வதேச அரசியல்
₹ 255+ shipping charges

Book Description

சர்வதேச அரசியல் என்பது உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை ஒட்டி மாறி கொண்டும், வளர்ந்துகொண்டிருக்கும் பாடமாகும். அரசியல் அறிவியலின் துணை பாடமான சர்வதேச அரசியல், பன்னாட்டு மற்றும் உலக அரசியல் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கபெருகிறது. இந்திய நாட்டிற்கு எந்தளவிற்கு அதன்அரசியல் சாசன சட்டம் அவசியமாக திகழ்கிறதோ, அதே அளவிற்கு உலக அமைதிக்கு நாடுகள் இடையேயான சுமூக உறவுகள் அவசியமாகிறது. மனித வாழ்வில் அத்தியாவசியமான தேவைகளான;குடிநீர், மருத்துவம், உணவுபொருட்கள், வாணிபம், பொருளாதார முன்னேற்றம், சமூக வளர்ச்சி, நல்லியல்பு அரசியல், பொது விநியோகம் ஆகியவை அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உலக முறைமையின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. தனித்த பொருளாதார கொள்கை என்பது தாராளமயமாக்கல் உலகில் சாத்தியமில்லாத ஒன்றாகும். ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னைய காலகட்டங்களில் தனித்த பொருளாதாரமாக விளங்கின. ஆனால் தற்ச்சமயம் அந்நிலை இயலாத நிலையாக உள்ளது. நவீன கால யுகத்தில் நாடுகளிடையே, சுமூக உறவுகள் மட்டுமே உலக அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. உலக போர்கள், பனிப்போர், நாடு பிடிக்கும் அரசியல், பொருளாதார சூறையாடல், ஏகாதிபத்தியம், இயற்கை வளங்களை சொந்தம் கொண்டாடுதல், இனப்போர், மொழிப்போர், மதப்போர், கொள்கைப்போர் போன்ற பல்வேறு உலக நிகழ்வுகள் வளரும் மனித நாகரீகங்களை சிதைக்கும் வண்ணம் உள்ளன. சுருங்க கூறின், அமெரிக்கா என்ற ஒரு தனி நாடு ஆட்டம் காணும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலக அமைதியே பாதிக்கும்படியான முறைமை தற்போது காணப்படுகிறது. போட்டி தேர்வுகளுக்கு மட்டுமின்றி சராசரி மனிதர்களும் உலக அரசியலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.