2.68 K Views

PULI - MAKKAL KAPPIYAM PESUGIRADHU-3

Literature & Fiction | 12 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

2.68 K Views

Among the important creators of the eastern region K. Arul Subramaniam is important. A collection of his short stories Ammachi collection and Vidyum novel.

திருகோணமலை

ஈழ இலக்கியப்போக்கில் திருகோணமலை
கலை இலக்கியம் ஒரு வரலாற்றுப்பதிவு.

கலாபூஷணம், திருமலை நவம்.

ஈழத்தின் கிழக்கு கரையில் அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வனப்புடன் கூடிய நகரம் திருக்கோணமலை. மிக நீண்ட வரலாற்றையும் இலக்கிய மற்றும் சமூகத் தொன்மையும் கொண்ட திருகோணமலை வெளிநாட்டவர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட மிக முக்கியம் வாய்ந்த பிரதேசமாகவும் வடக்கு கிழக்கு மக்களின் பூகோள நடுநாயகமாகவும் விளங்கிவருகிறது.

கிழக்கு மக்களின் வாழ்க்கை முறைகளையும், வடக்கு மக்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இணைக்கும் பாலமாக விளங்கிவரும் திருக்கோணமலைப் பிரதேசம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக அதன் பூகோள அமைப்புக்கள், கலாச்சாரங்கள் வாழ்வு முறைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திருமலை நாகரீகமும் மெகாஹஞ்சதாரோ நாகரீகமும் ஏறக்குறைய ஒரே காலத்தவை என வரலாற்று ஆய்வாளர்களால்; குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

திருக்கோணமலைப் பிரதேசத்தின் முக்கிய அடையாளங்களாக ;காணப்படுபவை கோணேசர் ஆலயம், கன்னிய வெந்நீருற்று, துறைமுகம், கந்தளாய்க்குளம், வெருகலம்பதி, தம்பலகமம் கோணேசர் ஆலயம், கங்குவேலிஅகத்தியர்ஸ்தாபனம், வில்கம் விகாரை, முத்து விளையும் கிண்ணியா, நிலாவெளி போன்ற இன்னோரன்ன அடையாளச் சின்னங்களிலிருந்து உருவாகியதே இப்பிரதேசத்தின் தொன்மைமிகு இலக்கியங்களும், கலைகளும், மரபுகளும், வரலாறுகளுமாகும்.

இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே போற்றப்பட்டுவரும் கோணேசர் ஆலயத் தொன்மங்களிலிருந்துதான் திருகோணமலை மண்ணுக்கான கலையும், இலக்கியமும் முகிழ்விடத் தொடங்கியதை முன்னைய கால புராணங்கள் இதிகாசங்கள், மற்றும் கல்வெட்டு ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தோன்மையான கோணேசர்மரபை விளக்கும் அதன் புகழ்பாடும் புராணங்களான தட்ஷண கைலாசபுராணம், திரிக்கோணாசல புராணம், வாயு புராணம், கோணேசர் கல்வெட்டு திருகோணமலை அந்தாதி கோணேசர் கல்வெட்டு என்பவற்றுடன் சோழர் பாண்டியர் கால கல்வெட்டுக்கள் என்ற வகையில் பெரியகுளக்கல்வெட்டு, மாங்கணாய்க் கல்வெட்டு, பளமோட்டைக் கல்வெட்டு, கந்தளாய்க் குளக்கல்வெட்டு ( 16ற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள்) மூலம் இச்செய்தியை அறியக்கூடியதாகவுள்ளது.

சிங்கை செகராஜசேகர மன்னன் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் பண்டிதராசர் எனும் புலவரால் இயற்றப் பெற்ற தட்ஷிண கைலாசபுராணம், கவிராசர் எனும் புலவரால் இயற்றப் பெற்ற கோணேசர் கல்வெட்டு மற்றும் திரிகோணாசலபுராணம், திருகோணாசலவெண்பா, திருக்கரசை புராணம் ஆகிய மரபுவழி இலக்கியங்கள் திருக்கோணேஷ்வரத்தின் பெருமைகளை எடுத்துக்கூறுபவை. இவை 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதை பல ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டை திருமலை இலக்கியத்தின் எல்லையாகக் கொண்டாலும் இவற்றின் தோற்றம் ; முன்னைய காலத்திலிருந்தே தொடங்குகிறது.
18ம் நூற்றாண்டில் திருகோணமலையில் எழுந்ததாகக் கருதப்படும் திருக்கரைசைபுராணம், சித்திரவேலாயுதர் காதல், கோணமலை அந்தாதி என்பன முன்னைய காலப் புராணங்களின் தொடர்பரம்பரைப் பாடுகளின் பிறப்புக்களாக, திருமலையிலுள்ள ஆலய வரலாறுகளையும் அவை சார்ந்த முறைகளையும், சம்பவங்களையும், நம்பிக்கை மற்றும் மரபுகளையும் எடுத்து சொல்பவையாக காணப்படுகின்றன.

புராண இதிகாச இலக்கியங்கள் தோன்றிய 17ம், 18ம் நூற்றாண்டை தொடர்ந்து மறுமலர்ச்சி நூற்றாண்டென கூறப்படும் 19ம் நூற்றாண்டின் மாற்றங்கள், இலக்கிய வளர்ச்சிகள் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில்தாக்கத்தை ஏற்படுத்தியதைவிட திருகோணமலைப்பிதேசத்தின் கலை இலக்கியப்போக்கிலும் சமூக மரபு சார்ந்த விடயங்களிலும் கனதியான மாற்றங்களை கொண்டு வந்ததற்கு பல ஆதாரங்களுண்டு.
எனவேதான் 19ம் நூற்றாண்டின் மாற்றங்கள் நேரடியாகவே திருகோணமலைப்பிரதேசத்தில் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்களையும் வளர்ச்சியையும் உடனடியாக தெரிந்துகொண்டவர்களாக திருக்கோணமலை அறிஞர்களாகிய திரு.தி.த.கனகசுந்தரம்பிள்ளை, அவருடைய சகோதரரான பண்டிதர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆகியோரை குறிப்பிடலாம்…
19 நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய மாற்றம் இவர்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று கூறக்கூடிய அளவுக்கு இவர்களுடைய பணி காணப்படுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டை ஈழத்தவர்களின் காலம் என சுட்டிக்காட்டும் அளவிற்கு இவர்கள் இருவருடைய இலக்கியப்பணியும் ஏனைய ஈழத்து தமிழ் அறிஞர்களின் பங்களிப்பும் முக்கியம் பெற்று காணப்படுகிறது.

நவீன வரவுகள் எனப்படும் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மெல்லிசை எனும் வடிவங்கள் தமிழகத்தில் காலூன்றத் தொடங்கிய அதே காலப்பகுதியில் திருக்கோணமலையிலும் அவை வளரத் தொடங்கியதற்கு ஆதாரமாக தமிழின் மூத்த நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம்,(1879) கமலாம்பாள் சரிந்திரம் (1896); எழுந்த அதே முன்பின்னான காலப்பகுதியில் திருகோணமலை அறிஞர்கள் ஆக்கித் தந்தவையே ஊசோன் பாலந்தை (1891), மோகனாங்கி (1895) ஆகிய இரு நாவல்களும்.;

திருக்கோணமலையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி, பண்டிதர் சரவணமுத்துப்பிள்ளை ஆகியோர் இவ்விரு நாவல்களையும் படைத்துள்ளனர்.

தமிழின் மூத்த நாவல்களான பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஆகிய நாவல்கள் போலவே திருக்கோணமலை அறிஞர்களால் எழுதப்பட்ட இவ்விரு நாவல்களும் சரித்திர சான்றுடைய பாத்திரங்களையும் சம்பவங்களையும் வைத்து பின்னப்பட்டுள்ளது. கல்கி, அகிலன் சாண்டிலியன் போன்ற இலக்கிய வல்லுனர்கள், சரித்திர நாவல்களை எழுதுவதற்கு முன்பே திருக்கோணமலையை சேர்ந்த அறிஞர்கள் சரித்திர நாவல்களை எழுதியது ஆச்சரியம் தருகின்ற வரலாற்று ஆதாரங்களாகும். தமிழில் வெளிவந்த முதலாவது வரலாற்று நாவல் என்ற பெருமையை மோகனாங்கிபெறுகிறது.

ஊசோன்பாலந்தை என்ற நாவலானது போர்த்துக்கீச நெடுங்கதையொன்றை ஆதாரமாகக் கொண்டதாகவும், அதே போன்று தஞ்சை திருச்சி நாயக்கர் பரம்பரையை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவலாக மோகனாங்கி நாவலும் காணப்படுகிறது.

இவ்விரு நாவல்களும் எழுந்த காலத்திலிருந்து சுமார் 60 வருட காலம் திருகோணமலையில் நாவல் எழுவதற்கரிய வாப்பில்லாமல் போய்விட்டதோ என்னவோ இந்த இடைவெளியை நிரப்பியவர் வ.அ. இராசரத்தினம் இவர் 1956ம் ஆண்டு எழுதிய கொழுகொம்பு என்ற நாவலே மோகனாங்கி நாவலுக்குப்பின் திருமலையில் எழுந்த நாவலாகும்.

மூதூர் கிராமிய மணம் கமழும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஆதாரமாக வார்த்து வ.அ. கொழுகொம்பு நாவலைப் படைந்துள்ளார். ‘எனது கிராமத்து மாந்தர்களை கதாபாத்திரமாககொண்டு என்னால் படைக்கப்பட்ட முதல் நாவல் இதுதான். அதுவே அதன் பெருமை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்பு வ.அ. எழுதிய துறைக்காரன் (1959) வெளிவந்துள்ளது. வ.அ. ஐந்து நவால்களையும் மூன்று குறுநாவல்களையும் ஈழத்து இலக்கழயத்துக்கு தந்துள்ளார்.

பண்டிதர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை பரம்பரையில் வந்த ந.பாலேஸ்வரிஎன்பார் 1966 ஆம் ஆண்டு சுடர்விளக்கு என்னும் நாவலை படைத்ததுடன் நாவல் இலக்கியத்தின் புதிய பிரவாகமாக பாலேஸ்வரி பார்க்கப்பட்டார்.இவர் 12 நாவல்களுக்கு மேல் எழுதி சாதனைப் படைத்த பெண் படைப்பாளி ஆவார். இவருக்குப்பின் 1973ல் க.அருள்சுப்பிரமணியம் எழுதிய அவர்களுக்கு வயது வந்துவிட்டது என்ற நாவல் திருகோணமலை எழுத்தாளர்களை தேசிய நிலைக்கு கொண்டு சென்றது.

திருக்கோணமலையில் நவீன தமிழ்க்கவிதை போக்கொன்று முளைக்கொள்ளத் தொடங்கிய காலம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். இந்த முனைப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பலர். வே.அகிலேசபிள்ளை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை, தம்பையாப்பிள்ளை, தி.த.பண்டிதர்சரவண முத்துப்பிள்ளை, தம்பலகமம் அ.அழகக்கோன், மா.முத்துக்குமாரு புலவர், சட்டம்பி தம்பையா, சு.தம்பையாபிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்கள் மரபுவழி இலக்கிய வல்லுனர்களாக இருந்த போதிலும் நவீன போக்கை ஆதரித்தவர்களாக காணப்பட்டார்கள்.

மறுமலர்ச்சிக் கவிதை மரபொன்று பாரதியுடன் பிறப்பெடுத்த காலத்தில் வடக்கே நாவற்குழியூர் நடராஜன், அ.ந.கந்தசாமி, சோ.நடராஜா மஹாகவி போன்றவர்கள் நவீக கவிதைகளை எழுதிய அதே சமச்சீரான காலப்பகுதியில் கிழக்கில் நவீன போக்குக்கு அமைவாக கவிதை எழுதியவர்களில் கிண்ணியாவைச் சேர்ந்த அண்ணல்(1930- 1974)பிரதானமானவராக கணிக்கப்படுகிறார்.

1945ம் ஆண்டு முதல் தன்னையொரு கவிஞராக அடையாளப்படுத்திக்கொண்ட அண்ணல் எழுதிய கவிதைகள் 1964 ல் அண்ணல் கவிதைகள் என்ற தலைப்பில் வெளியிப்பட்டது. இவரது கவிதைகளில்; தமிழ்த் தாகமும் வாலிப கனவுகளும் சமய நெறிகளும் விரவிக்காணப்பட்டன. காணப்பட்டன. அதே காலப்பகுதியில் தர்மு சிவராமு என்ற கவிஞரின் வருகை (1939-1997) தமிழ் நவீன கவிதைப் போக்கை புதிய பரிமாணத்துக்கு கொண்டு சென்றது.

கவிஞர் அண்ணலைத் தொடர்ந்து சற்று பிந்திய காலத்தில் திருக்கோணமலைக் கவிராயர் (1930 -1990) தாமரைத்தீவான், கழகப்புலவர் பெ.பொ.சிவசேகரம், கவிஞர் ஈழவாணன் போன்றவர்களின் வருகை திருக்கோணமலையின் நவீன கவிதைக்கு வளம்சேர்க்க தொடங்கியது.

இவர்களில் தாமரைத்தீவானின் பங்களிப்பு கணிசமான முக்கியத்துவம் கொண்டதாக மதிக்கப்படுகிறது. 1932 ல் ஆலங்கேணிக்கருகிலுள்ள தாமரைக்கேணியில்பிறந்த தாமரைத்தீவான் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை எழுதிக்கொண்டேயிருக்கிறார். 1992 இவரது கீறல்கள் என்ற கவிதைத்தொகுதி முதல் முதல் அச்சு வடிவம் பெற்றது தொடர்ந்து (புதிய) எட்டுத்தொகை கவிதைத்தொகுதி வரை. சுமார் 50 மேற்பட்ட கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. பாரதி பாரதிதாசன் வள்ளுவன் கம்பன் மற்றும் சங்க இலக்கியங்களின் கருத்துக்களை அள்ளித்திரட்டி அழகுமிளிர பாடுவதில் வல்லவரான தீவான் நையாண்டிக்கருத்துக்களை நறுக்கு தெறித்தாற்போல் பாடவல்லவர்.மரபுக் கவிதைகள் மீது பற்றுக்கோடும் ஆற்றலும் கொண்ட தாமரைத் தீவான் கவிதைகளில் தமிழ்ப்பற்றும் சமூக தரிசனமும் பரவிக் கிடக்கும்;.

திருக்கோணமலை பிரதேசத்தின் ஆரம்பகால சிறுகதைத்துறையின் வளர்ச்சியை நோக்கின் ஈழத்தின் வடக்கே சி.வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், சிவபாதசுந்தரம் போன்றோர் (1930ம் ஆண்டுக்குப்பின்) இவ் வடிவத்தை ஈழத்துக்கு அறிமுகம் செய்தபோதும் அத்தகையதொரு முயற்சிகள் இதே காலப்பகுதியில் திருக்கோணமலையில் மேற்கொள்ளப்பட்டதற்கு ஆதரமெதுவமில்லை.

1950ம் ஆண்டுக்குப்பின் ஈழத்து சிறுகதை முன்னோடிகள் என்ற வகையில் செ.கணேசலிங்கம் டொமினிக்ஜீவா, கே.டானியல், எஸ்.பொ.,நீர்வைபொன்னையன் போன்றோர் சிறுகதைத்துறைக்குள் நுழைந்த காலத்தில் திருக்கோணமலையின் சிறுகதை முன்னோடியாக திகழ்கிறார். வ.அ.இராசரத்தினம். (1925—2001) இவரை ஈழத்தின் புதுமைப்பித்தன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு திருமலையின் சிறுகதை வரலாறு இவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. 1948ம் ஆண்டு தினகரனில் வெளிவந்த மழையால் இழந்தகாதல் சிறுகதை மூலம் இத்துறைக்குள் நுழைந்த வ.அ. தோணி (1962) என்ற தனது அற்புதமானபடைப்பின் மூலம் திருகோணமலைப்பிரதேச இலக்கியப்படைப்புக்களை உலகத்தரத்துக்கு கொண்டு சென்றார் என்று கூறப்படுகிறது.

இவருக்கு பின்னைய தலைமுறையாக திருக்கோணமலையில் தர்மு சிவராமு, ந.பாலேஸ்வரி, க.சா.அரியநாயகம், தி.அரியநாயகம், த.பி.சுப்பிரமணியம் ராயப்பு போன்றோர் இத்துறைக்கு வளம் சேர்க்க வந்தார்கள். இதில் தர்மு சிவராமு ஒருசில சிறுகதைகளை எழுதியபோதும் அவரின் நாட்டம் கவிதைத்துறையாகவே இருந்தது. இதேவேளை பின்னாளில் தினபதி சிந்தாமணி பத்திரிகைளின் பிரதம ஆசிரியராக பணிபுரிந்த திருகோணமலையில் பிறந்த எஸ்.டி. சிவநாயகம் சுதந்திரனில் 1952 எழுதிய சோமாவதி எனும் சிறுகதை (28.12.1952) திருகோணமலையை அடையாளப்படுத்தும் இன்னொருசிறுகதையாக அமைந்து.

ந.பாலேஸ்வரி இலக்கியப்பிரவேசம் அவர் 1957 ல் தினகரன் பத்திரிகையில் எழுதிய தெய்வம் என்ற சிறுகதையுடன் இலக்கியப்பணி ஆரம்பமாகிறது.இவரது முதலாவது சிறுகதைத்தொகுதி 1973ல் சுமைதாங்கி என்ற தலைப்பில் வெளிவந்தது. தெய்வம் பேசுவதில்லை(2000) இவரது இரண்டாவது தொகுதியாகும்.

திருக்கோணமலையின் நவீன நாடக மரபுகள், நாவல்துறை போல் சற்று மாறுபட்ட முறையில் 19ம் நூற்றாண்டிலிருந்து வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றது.

மரபுவழித் தன்மை கொண்ட கூத்துக்களும், விலாசங்களும் மிக நீண்ட காலமாக திருக்கோணமலை பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். குறிப்பாக 18ம் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந்தே கிராமப்புறங்களிலும், நகரமையப் பகுதியிலும் ஆடப்பட்டு வந்துள்ளதை பல்வேறு ஆதாரங்களின் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் மையமாக திருகோணமலை காணப்படுவதாலும் வன்னியின் அயலாகவும் இருக்கின்ற காரணத்தினாலும் இந்த பிரதேசங்களிற்கு உரிய அரங்குகள் கலந்த வகையில் உதாரணமாக வடமோடி, தென்மோடி யாழ்ப்பாண விலாசம் ஆகிய மரபுவழி கூத்து முறைகள் இப்பிரதேசத்தில் 18ம் நூற்றாண்டில் இருந்தே ஆடப்பட்டு வந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

இத்தகையதொரு கூத்து முறைகளின் தொடர்ச்சியான வரலாறாகவே நவீன நாடக மரபொன்று 19ம் நூற்றாண்டு முற்பகுதியில் திருக்கோணமலையில் தலைதூக்கிய காலம் அண்ணாவி தம்பிமுத்து காலத்திலிருந்து (1900-1960) ஆரம்பமாகின்றது. அவருக்குப்பின் சி.விசுவலிங்கம், எம்.சி.அந்தோனிப்பிள்ளை,அண்ணாவி சின்னையா, யேசுதாசன் போன்ற புதிய பரம்பரையின் வரவோடு நவீன நாடக மரபு திருக்கோணமலையில் உருவாகியதோடு பல்வேறு நாடக மன்றங்கள் உருவாகி நவீன நாடக பாரம்பரியங்கள் ஈழத்தின் எந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு வளர்ச்சிக் கண்டுள்ளது. அதற்கு காரணம் நகரத்திலும், கிராமங்களிலும் பெருந்தொகையான நாடக மன்றங்களும், அரங்குகளும் தோன்றியமையேயாகும்.

இராவண தரிசனம் கொண்ட திருகோணமலையில் கர்நாடகம், மெல்லிசை போன்ற துறைகளின் வளர்ச்சி இன்னொரு துறையாக வளர்ச்சி அடைந்தமையை 19ம் நூற்றாண்டிலிருந்து அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கோணேசர் கல்வெட்டில் கூறியதைப்போல் கோணேசர் கோயிலை மையப்படுத்தி ஓதுவார்கள், நடனமாதர், சங்கீத விற்பன்னர்கள், வாழ்ந்து பாரம்பரியக் கலைளான நடனக்கை சங்கீதக்கலை மற்றும் பல்வேறு வாத்திக்கலைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பதற்கு தட்ஷண கைலாசபுராணம் கோணேசர் கல்வெட்டு போன்ற நால்கள் வாயிலாகவும் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

19ம் நூற்றாண்டின் கடைக்கால் பகுதியில் மரபுரீதியான இசைத்துறைக்கு பங்காற்றியவர்களாக வீரக்கோன்முதலியார், வே.அகிலேசபிள்ளை, கார்த்திகேசு குருக்கள், அப்பாhத்துறைஐயர், சாம்பசிவம் ஐயர் ஆகியோரைக் குறிப்பிட்டு 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இத்துறைக்கு தொண்டாற்றியவர்களாக வே.தில்லையம்பலம்மாஸ்ரர், சிவகாமசுந்தரி விஜயரட்ணம், இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரை குறிப்பிடலாம்.

சங்கீதம் என்னும் பாரம்பரிய கலை நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தலைமையில் தட்ஷணகானசபா தோன்றிய காலத்திலிருந்து (1949ம்) ஆரம்பமாகிறது. செல்வி.இராஜராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தினால் (1920—1972) ஆரம்பித்த தட்ஷாணசபா அதைத் தொடர்ந்து பல்வேறு சங்கீத சபைகள் மரபு ரீதியான சங்கீத வளர்ச்சியை வளர்க்க காரணமாகின.

இதேவேளை காலத்தின் தேவைகருதி மெல்லிசை, துறை வளர்ச்சியும், திருக்கோணமலையில் வளர்சியடைய ஆரம்பிக்கிறது. இத்துறையின் பிதாமகனாக திகழ்பவர் திருமலை தாமோதரம்பிள்ளைபத்மநாதனாகும். இவருடன் இம்மானுவல். பரமேஸ் கோணேஷ் போன்ற கலைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திருகோணமலை இசைக்கழகம் (1964) பரமேஸ் கோணேஷ் இசைக்குழு (1968) கலைவாணி இசைக்குழு, கோணேஸ்வரா இசைக்குழு, (1968) நீரோ இசைக்குழு (1973) துரை இசைக்குழு(1979) ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானது. இதில் ஈழத்து இசைத்துறையின் ஜம்பவானாக கருதப்படும் திருமலை பத்மநாதனின் பங்களிப்பு முக்கிய பெறுமதி கொண்டது.

ஈழத்தில் முதல் முதல் தயாரிக்கப்பட்ட நிர்மலா (1966) தென்றலும் புயலும் (1968) ஆகிய திரப்படங்களுக்கு இசையமைத்த பெருமை இவரையே சாரும். இதே போன்றே 1970 ஆம் அண்டளவில் பரமேஸ் கோணேஷ் இசைக்குழுவினர் ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முதலாவது இசைத்தட்டை வெளியிட்ட பெருமை இவர்களையே சாரும்.

சிறுகதைத் துறையில் வ.அ.இராசரத்தினத்தைத் தொடர்ந்து 1960 பின் ந.பாலேஸ்வரி, க.அருள்சுப்பிரமணியம், தி.அரியநாயம், க.சா.அரியநாயகம் போன்றோர் சிறுகதைத்துறைக்கு வளம்சேர்த்தவர்களாகின்றனர்.

வ.அ.இராசரத்தினத்தின் கதைகளில் மண்வாசனைத் தன்மையும் அருளின் சிறுகதைகளில் தேசியத் தன்மையும், பாலேஸ்வரி அரியநாயகம் புரட்சிபாலன் தா.பி. சுப்பிரமணியம் போன்றோரின் கதைகளில் மெல்லியல் தன்மையும் க.சா.அரியநாயத்தின் கதைகளில் முற்போக்குத் தன்மையும் உள்ளீடாக இருக்க 1970ம் ஆண்டுக்குப்பின் முற்போக்கு சிந்தனை எழுத்தாளர்களான இராஜதருமராஜா, மு.ராஜ்கபூர்,க.சா.அரியநாயகம் ஆகியோர் முன் வருகிறார்கள்.

1970ம் ஆண்டுக்குப் பின் கவிதைத் துறையில் ஓர் தேசிய விழிப்பு மிளிர்வதைக் காணலாம். 1971ம் ஆண்டின் சேகுவரா புராட்சி இடதுசாரி வலுவூட்டல்கள் இந்திய கவித்துறை சஞ்சிகைகளின் வருகைகள், புதிய போக்குடைய கவிஞர்கள் இத்துறைக்கு வருவதற்கு காரணங்களாகின்றன. அதற்கு உறுதுணையாக நிறுவனமயப்படுத்தப்பட்ட சமூக இயக்கங்கள், இலக்கிய மன்றங்கள், அரசியல் விழிப்புணர்வுகள் காரணமாகின. ஊதாரணமாக திருவள்ளுவர்கழகம் 1958 திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1961பின்னாளில் முன்னோடிகள்,சங்கப்பலகை திருகோணமலை மறுமலாச்சி தமிழ் மன்றம், திருகோணமலை கலை வட்டம், முத்தமிழ் வளர்கலை மன்றம், ஈழத்து இலக்கியசோலை தாகம் கலை இலக்கியவட்டம் ஆகிய அமைப்புக்களை குறிப்படலாம்.

திருக்கோணமலையில் நல்லை அமிழ்தன் தலைமையில் இயங்கிய முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழுவைச் சேர்ந்த பல கவிஞர்கள் இக்காலப்பகுதியில் தமது பல்வேறு பரிமாணங்களை கவிதை துறையில் காட்டினார்.

இராஜதர்மராஜா, திருமலை நவம், புஸ்பா கோமஸ் மு.இராஜ்கபூர், தங்க சச்சிதானந்தம், வின்சன்,புதுவை இரத்தினதுரை இரத்தின விக்னேஸ்வரன், ஆசீர்வாதம்,சிவலிங்கம்,மு. ராஜ்கபூர் மட். வெலிங்டன்ஆனந்தபிரசாத் கி.பவானந்தம் பூநகர் மரியதாஸ் தங்கமகேந்திரன் செ.நவசோதிராஜாநூலகர் ஜோன் செல்வராஜா போன்ற இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்ட இளைஞர் குழாம் இலக்கியத்துறையில் பாரிய பங்களிப்பை செய்தார்கள்.பிரதிமாதந்தோறும் நடாத்தப்பட்ட இலக்கி; கலந்துரையாடல்கள், உரைகள், விமர்சனங்கள், படைப்புக்களின் அறிமுகம் என்பன நடைபெற்ற காலத்தில் ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளாகளான செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், என்.கே.ரகுநாதன, செ.கணேசலிஙகம, கே.டானியல், சில்லையூர் செல்வராஜன், இக்பால், கலைவாதிகலீல், வி.ரி இளங்கோ, ஷெல்லிதாசன், ராஜம்புஸ்பவனம், பேனா மனோகரன், வ.அ. இராசரத்தினம், ரெஜினா வில்லியம், கஜதர்மா, ந.பாலேஸ்வரி, போன்ற இலக்கியகர்த்தாக்கள் இந்நிகழ்சிகளில் கலந்துகொண்டு திருகோணமலை கலை இலக்கியத்திற்கு புதிய பரிமாணத்தை பாய்ச்சினார்கள்.

முன்னோடி அமைப்பினால் நடாத்தப்பட்ட கவிதை அரங்கில் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டது இவ்வமைப்பினாலையே புதுவை இரத்தினதுரையின் ஒரு தோழனின் காதல் கடிதம் (1974) என்ற கவிதை நூலை வெளியிட்டு வைத்தது எல்லாம் வரலாற்று பதிவுகளாகும் இதே போன்றே பிற்காலத்தில் மெல்லிய மனவயப்பட்ட கவிதைகளை எழுதிய இளைய தலைமுறையினர் இக்காலப்பகுதியில் காணப்பட்டார்கள். ஆலன், நிலா தமிழின்தாசன், திருமலை அ.சந்திரன் போன்றோரின் கவிதைகள் இதற்கு உதாரணமாகும்.

நாவல் இலக்கியப் படைப்பில் 70ம் ஆண்டுக்குமுன் ந.பாலேஸ்வரி ஆகியோரைத் தவிர வேறு எவரும் இத்துறையில் ஆர்வம் காட்டவில்லை. 1970ம் ஆண்டுக்குப்பின் வ.அ.இராசரத்தினம் அவர்கள் ஐந்து நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும் படைத்திருந்தார்.

சற்றும் பிந்திய காலப்பகுதியில் ந.பாலேஸ்வரி சுடர்விளக்கு,உறவுக்கப்பால்,பூஜைக்கு வந்தமலர் ஆகிய மூன்று நாவல்களை எழுதியிருந்தார். இவரது நாவல்கள் மெல்லிய உறவுகளையும், இளைய துடிப்புக்களையும், எண்ணங்களையும் சொல்லும் நாவல்களாக காணப்பட்டது. ஆனால் 1973ம் ஆண்டு க.அருள்சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்து விட்டது என்ற நாவலுடன் ஓர் தேசிய தரத்தை திருக்கோணமலை இலக்கிய படைப்புக்கள் பெற முற்பட்டன.

மேடை நாடகத் துறையில் 1970ம் ஆண்டு கணிசமான பதிவுகளை வாங்கிக் கொண்ட காலமாக இக்காலம் திகழ்கிறது. பெருந்தொகையான நாடக மன்றங்கள் உருவாகிய காலம் இதுவாகும். இம்மன்றங்களின் பெருக்கத்தின் காரணமாக இயக்குனர்கள், நடிகர்கள், காட்சி அமைப்பு விற்பன்னர்கள் அதிகமாக உள்வரத் தொடங்கிய காலமாக இது காணப்படுகின்றது.

1980ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் கலை இலக்கிய வளர்ச்சியில் ஒரு வரட்சி கொண்ட காலத்தன்மை நிலவியதை சகல துறைகளிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வடகிழக்கு யுத்த நெருக்கடிகள், இடம்பெயர்வுகள், அகதி வாழ்க்கைகள், கோரச்சம்பவங்கள், கொடிய இனநெருக்கடிகள் மலிந்துபோய் கிடந்த சூழ்நிலையில் இலக்கியவளாச்சி ஏற்பட வாய்ப்பில்லாமல் போனபோதும் மென்தன்மையான பொதுவளர்ச்சியே காணப்பட்டது. இக்காலப்பகுதியில் கவிதைகளில் பல்துறை சார்ந்த வளர்ச்சி காணப்பதற்கு அடையாளமாக கலாநிதி சி.சிவசேகரம், (நதிக்கரை மூங்கில், பாலை. போரின் முகங்கள், செப்பனிடப்பட்ட படிமங்கள், கல்லெறிதூரம் வடலி ) என பலகவிதைத்தொகுதிகளை படைத்து ஈழத்து இலக்கியப்பரப்பை வளப்படுத்திய பெருமை இவரைச்சாரும். மூதார்முகைதீன் (முத்து, இழந்துவிட்ட இன்பங்கள் 2003, ஒரு காலம் இருந்தது 2010) மைக்கல் கொலின் போன்றோரின் வீச்சுக்கவிதைகளும் அஸ்ரப்பா நூர்டீன் நில தமிழின் தாசன் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி போன்றவர்களின் நடுத்தன்மையான போக்கும், கவிதை வளர்ந்து வந்துள்ளமையினைக் காட்டுகிறது.இவர்களில் மூதார் முகைதீன் தனக்கென ஒரு தனியான வாசகர்களை சேமித்துவைத்திரு;கும் கவிவாணனாக வலம் வந்தார்.

1980 பின்னைய காலப்பகுதியில் எழுந்த யுத்தம் இனப்போர்,நெருக்கடிகள் சித்திராநாகநாதன் (கிரமத்துமண்கள்சிவக்கின்றன1990) கனகசரை தேவகாட்சம் எழுதிய (காலக்கீறல்கள் 1996) (குமுறல்கள் 1998) (குருதி மண் 2000) எம்.ஐ.எம் தாஹிர் நந்தினி சேவியர் போன்றவர்களின் படைப்புக்கள் தீருகோணமலை சிறுகதை வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை செய்தன.
நாவல் இலக்கிய துறையின் இக்காலம் சற்றும் வேறுபட்ட முறையில் தேசியதரம் அல்லது சர்வதேச பார்வை கொண்ட நாவல்கள் எழுந்த காலமாக இக்காலப்பகுதியைக் கூறலாம். அ.அ.ஜெயராஜாவின் சேகுவரா, (1979) அப்பா (1979) போரும் மனிதனும் (1986) மற்றும் (சூ.நோபேட்) கோவிந்தனின் புதியதோர் உலகம் (1985); ஆகிய நாவல்கள் மிக முக்கியம் கொண்ட நாவல்களாக காணப்படுகின்றது. ஜெயராஜாவின் நாவல்கள் சேகுவரா போராட்டத்தை மையப்பொருளாக கொண்டு எழுந்த நாவல்களாக காணப்பட கோவிந்தனின் நாவல் விடுதலைப் போராட்டத்தில் காணப்பட்ட இயக்க முரண்பாடுகள் ஈழப்போரின் அரசியல் கொதிநிலைகளை சொல்லும் நாவலாக காணப்படுகிறது.

இதேவேளை ந.பாலேஸ்வரியின் கோவும் கோயிலும் 1980 உள்ளக்கோயில் 1983 பிராயசித்தம் 1984 உள்ளத்தினுள்ளே 1990 தத்தைவிடுதூது 1992 வி.தில்லைநாதன் இதய தந்திகள் மீட்டப்படுகின்றன (1978) புரட்சிபாலன் செல்வகுமார், எழிலோன் கா. இரத்தினலிங்கம் வீ.என்.சந்திரகாந்தி ஆகியோரின் நாவல்கள்; பொது வாழ்வை சித்தரிப்பவையாக காணப்படுகின்றன 2000ம் ஆண்டுக்குப் பின்போராட்ட வடிவங்கள் சர்வதேச முக்கியத்துவத்துடன் உலக வல்லரசுகளின் ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் வலுப்பெற்ற போதும் அவற்றின் தாக்கம் திருக்கோணமலை கலை இலக்கியத்தில் சொல்லக்கூடிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. இருந்த போதிலும ஓடையின் நீரோட்டம் போன்ற ஒரு வளர்ச்சி மிக மெதுவாக ஊர்ந்து கொண்டு போவதை பொதுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதிலும் கிண்ணியா, மூதூர் பிரதேசத்தின் புதிய கவிஞர்களின் பங்களிப்பு இக்காலப்பகுதியில் திருக்கோணமலையின் கவிதை துறையை சரியவிடாது காத்து நிற்கின்றது.

சிறுகதை துறையில் திருமலை சுந்தா, ச.அருளானந்தம், வீ.என் சந்திரகாந்தி, கிண்ணியா அமீரலி, கனகசபை தேவகடாட்சம், ராணி சீத்ரன் போன்றவர்கள் போதியளவில் எழுதி வந்தபோதும் தற்கால சூழ்நிலை நெருடல்களை அனுபவ துருவல்களை இவர்களது கதைகளில் காணமுடியவில்லை. இருந்தபோதும் மூதூர் ஏ.எஸ்.உபைத்துல்லா, (ஜலசமாதி 2008) நிழலைத்தேடி 2017) எம். எஸ.; அமானுல்லா (வரால் மீன்கள். 2007 ஒருபெண்ணின் கதை (2017) கனகசபை தேவகடாட்சம் காலக்கீறல்கள்(1996 குமுறல்கள் 1998) சூசைஎட்வேட் இங்கு வீசியது ஒரு சமாதானக்காற்று (2019,) ஆகியோரின் படைப்புக்கள்; பிரதேச மண்வாசைன செழுமைகளையும் இஸ்லாமிய மற்றும் தமிழ் மக்கள் வாழ்வுகலந்த பண்புகளையும் சித்தரிப்பவையாக காணப்படுகின்றன.

2000 ஆம் ஆண்டுக்குப்பின்னுள்ள நாவல் வளர்ச்சியை நோக்கின் மீண்டும் வ.அ.இராசரத்தினத்தின் வருகை புரட்சி பாலன் அன்வர்டீன், மைக்கல் கொலின்காதல் வெண்ணிலா கையில் சேருமா ? (2003) வீணையடி நீஎனக்கு (2021)போன்றவர்களின் ஒரு சில நாவல்கள் பிரதேச வரலாற்றை நிரப்பிய பெருமை கொண்டவையாக இருக்கின்றன. பிற்காலத்தில் திருமலை மதன், ஆனந்தபிரசாத் போன்றோரின் படைப்புக்கள் அவதானம் கொண்டவையாக விளங்கியது.

மேடை நாடக துறையிலும், நாடக இலக்கிய துறையிலும் இக்காலப்பகுதி குறிப்பாக 2000ம் ஆண்டுக்குப்பின் பாடசாலை நாடகங்கள் அதிசயத்தக்க வளர்ச்சியை அமைந்துள்ளமையை பாடசாலை தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக ராணி ஜெகசோதி, பிலிப் ஆனந்த ரமணன் நக்கீரன், தில்லை முகிலன், இரட்ணசிங்கம், எஸ்.பற்குணம், த.அமரசிங்கம், திருமலை நவம் போன்றோரின் உழைப்பினாலும் திருமறைக் கலாமன்றம், கீழைத்தென்றல் கலாமன்றம் போன்றவற்றின் பங்களிப்பினாலும் பாடசாலை நாடகங்கள் காத்திரமான வளர்ச்சியை காணுகின்றது.

நாடக இலக்கியம் என்ற துறையில் 1887ம் ஆண்டு அகிலேசப்பிள்ளை என்பால் எழுதிய கண்டி நாடகத்தில் இருந்து வளர்ச்சி ஒன்று கருக் கொள்கிறது. ஏனைய மாவட்டங்கள் போல் நாடக இலக்கியத்தின் செம்மை சான்ற வளர்ச்சி திருக்கோணமலையில் குறிப்பிடக்கூடியதாக இல்லாது இருந்தபோதும் 1990ம் ஆண்டுக்குப் பின் பாலசுகுமார், த.அமரசிங்கம், த.பி.சுப்பிரமணியம், கா.சிவபாலன், திருமலைநவம் போன்றோர் ஆங்காங்கே எழுதிய நாடக இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளை தவிர நாடக இலக்கியத்தின் நெறி சார்ந்த வளர்ச்சி திருக்கோணமலை பிரதேசத்தில் குறைவாகவே இருந்துள்ளது.

அதேவேளை நாவலின் வரவு மிக அருந்தலாகவே இருந்துள்ளது. ஆனால் சிறுகதையில் தேவகடாட்சம், திருமலை சுந்தா, என்.சித்திரவேல், அ.ச.பாய்வா, வீ.என்.சந்திரகாந்தி கிண்ணியா ஏ.எம்.எம் அலி போன்றோரின் படைப்புக்கள்; திருமலை சிறுகதைகள் இலக்கியத்தை தூக்கிப்பிடிக்கும் கைங்கரியமாக இருந்தது.திருக்கோணமலை கலை இலக்கியத்துறையின் வளர்ச்சி ஓர் மந்தத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும் நாவல், சிறுகதை, நாடகம், தொலைக்காட்சி, மெல்லிசை, சங்கீதம் என்ற தொகை வகைப்பட்ட கலை இலக்கியத்தின் கூட்டுமொத்த வளர்ச்சியையும் ஓரளவு காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கவிதை துறையில் மூதூர், கிண்ணியா போன்ற கிராமங்களில் இருந்து பெருந்தொகையான கவிஞர்கள் எழுத முற்பட்டதும் பல்வேறு கவிதைகள், ஏடுகள் இக்காலப்பகுதியில் வெளி வந்தமையும் இதற்கு அடையாளங்களாகும். எஸ் ஆர். துனபாலசிங்கத்தை ஆசிரியராகக்கொண்ட நீங்களும் ஏழுதலாம் கவிதை ஏடு புதிய தலை முறையினருக்கு களமாக அமைந்தது.

2012 ம் ஆண்டுக்குப்பின், திருக்கோணமலை பிராந்தியத்தில் இலக்கிய வடிவங்களின் உருவாக்கம் அருந்தலாக இருந்தபோதும் கவிதைத் துறையை பெரும்படியாக தேர்ந்தெடுத்த இளைய சமூகமொன்று அதிகமான வரவை பதிவு செய்துள்ளார்கள்; அவ்வகையில், தில்லைநாதன் பவித்திரனின் ரசவாதம் (22010) குறியிடல் (2012) திருமலை அஸ்ரப்பின் கவிதைகள்கிண்ணியாவை சேர்ந்த ஜே. பிரோஸ்கான் என் எல்லா நரம்புகளிலும் 2013. தீ குளிக்கும் ஆ, ண்மரம் 2012, நாக்கு 2017, ஆண்வேசி 2014, இதுவும் பிந்திய இரவின் கனவுதான் 2009, மாயனின் சிறையிலிருந்து மடல்கள் 2016. ஏ. நஸ்புள்ளா காவிநரகம் 2013, கிண்ணியா சபருள்ளா. வியத்தொழுகும் மழைப்பொழுது 2009, கவிஞர் யோகானந்தனின் என்மனவானில் 2009, சுஜந்தன் நிலம் பிரிந்தவனின் கதை 20011, ஷெல்லிதாசனின் செம்மாதுளம் பூ 2010, நகரவீதிகளில் நதிப்பிரவாகம்2013 ஆகிய தொகுதிகளில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் ஈழத்து இலக்கியப்போக்கின் செழுமையையும் வளத்தையும் படம் பிடித்து காட்டுபவையபாக அமைந்துள்ளன.

இதேவேளை புலம் பெயர்ந்து சென்று திருகொணமலை இலக்கிய பார்வையூடாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சோத்து வருபவர்கள் என்ற வகையில் ஆழியாள் அவுஸ்திரேலியா ஆனந்த பிரசாத் கனடா பாரதிபாலன் டென்மார்க் மதிவதனி சுவீஸ்லாந்து சித்திரா நாகநாதன் இங்கிலாந்து மு. வே யோகேஸ்வரன் இந்தியா க.ரமணிதரன் அமெரிக்கா எஸ். சேல்வகுமார்.கனடா புரட்சிபாலன் கனடா .உவர்மலை வி.எஸ். குமார். இங்கிலாந்து. மயில் மகாலிங்கம் ஜேர்மன் த.லிங்கரெட்ணம் நெதர்லாந்துபோன்ற புலம் பேயர் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் திருமலை பங்களிப்பை எடுத்துக்காட்டி நிக்கின்றன.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

பிரபாகரன்-மதிவதினி திருமணம்

தாய் மண்ணை பிரிந்து உலகெங்கும் வாழும் ஈழத்து சகோதரர்களுக்கு நவம்பர் 27 மிகமுக்கியமான நாள். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரையில் தோன்றி இயக்கத்தின் நிலை பற்றியும், தமது எதிர்கால திட்டம் பற்றியும் உரையாற்றுவார். துரோகமும், சர்வதேச சதியும் கைகோர்ததன் விளைவாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு மாவீரர் தினம் என்பது தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் நாளாக உலகத்தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் தலைவர் பிரபாகரனது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த அவரது திருமணத்தைப் பற்றியும், அது எங்கே நடைபெற்றது என்பது குறித்தும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
ஈராயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்து வந்த தமிழ் இன மக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்ப்பாடு ஏற்ப்பட்ட சிங்கள தேசியவாத எழுச்சியின் விளைவாக ஒடுக்கப்பட்டு, உயிரும் உடமைகளும் பறிக்கப்பட்டு சொல்லமுடியாத துயருக்கு ஆளாகியிருந்த போது தமிழினத்தின் அடையாளத்தையே முழுமையாக மாறிய பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன் அக்காள் கல்யாணத்திற்கு போடப்பட்ட மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்கிய பிரபாகரன் தான் பின்னாளில் முப்படைகளையும் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த இயக்கத்தின் தலைவராக உருவெடுத்தார். தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து இயக்கத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து புகை, மது, மாது போன்றவை கூடாது, போராளிகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பது போன்ற கொள்கைகளை கடுமையாக பின்பற்றி வந்த பிரபாகரனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது திருமணம்.
1983 ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டு. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவின் முழு ஆதரவுடன் தமிழர்களுக்கு கலவரங்கள் முடுக்கி விடப்பட்டன. கண்ணில் கண்ட தமிழர்களை எல்லாம் அடித்து, உயிரோடு எரித்து வெறியாட்டம் ஆடினார் சிங்களர்.
இந்த சமயத்தில் பிரபாகரனும் சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தனர் அங்கு பயிலும் நான்கு மாணவிகள். சிங்கள அரசாங்கத்திடம் உண்ணாவிரதத்தின் மூலம் தீர்வு ஏதும் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்திருந்த பிரபாகரன் நான்கு பெண்களையும் உண்ணாவிரதத்தை கைவிட்டு பிற வழிகளில் போராடுங்கள் என்றார். இந்த நான்கு பெண்களில் ஒருவர் தான் மதிவதனி. தகித்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பிரபாகரன் பெண்கள் நால்வரையும் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கத்தின் பாதுகாப்பில் சென்னைக்கு அனுப்பிவைத்தார். பின்னாளில் பிரபாகரனும் பல விடுதலைப்புலிகளும் சென்னைக்கு பயிற்சிக்காக வந்தனர். ஒருநாள் யதேர்சையாக அடேல் பாலசிங்கத்திடம் சொன்னார் நான் மதிவதனியை விரும்புகிறேன் என்று.
பிரபாகரன் திருமணம் செய்துகொள்வதில் இயத்தில் பலருக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தன. அவர்கள் எல்லோரையும் சமாதனம் செய்து இயக்கத்தில் இருப்பவர்கள் தாகத உறவு வைத்துக்கொள்ளக்கூடாதே தவிர திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயக்கத்தின் விதிகள் மாற்றப்பட்டு ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனது. சென்னையிலேயே திருமணம் செய்துகொள்வது என்று முடிவானது. திருப்போரூரில் இருக்கும் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் பிரபாகரன்-மதிவதனி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பிரபாகரனது பெற்றோர் தமிழகத்தில் தான் இருந்தார்கள் என்றாலும் திருமணத்திற்கு வர மறுத்துவிட்டனராம்.
பிரபாகரனுக்கு மாப்பிள்ளை துணையாக இருந்தவர் சிங்கள அரசின் பிடியில் இருக்கும் செல்வராசா பத்மநாபன் ஆவர். எப்பொழுதுமே பணத்தை தொட விரும்பாதவர். தாலி எடுக்க தனது தாய்மாமன் வேலுப்பிள்ளை(இவரது பெயரும் இதுதான்)யிடம் போய் நின்றார். தலைமாட்டில் இயக்க பணமிருக்க தாய்மாமன் உதவியை நாடி தன் நேர்மையை நிரூபித்த ஒழுங்கை மான். இடது கொடுப்பது வலதுக்கு தெரியாத வலங்கை மான்.

நேதாஜி காதல்

சுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்...!

சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான இன்று, அவரது ரகசிய காதல் வாழ்க்கையில் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை அறிய தருகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான நிலைக்கு சென்றது. எனவே, போஸ் குடும்பத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை மேல் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு அழைத்து செல்ல அனுமதித்தது.
வியன்னாவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தபோதிலும் ஐரோப்பாவில் உள்ள இந்திய மாணவர்களை ஒன்றிணைந்து சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அவர் முடிவு செய்தார். அதே சமயத்தில், போஸை அணுகிய ஐரோப்பிய பதிப்பாளர் ஒருவர் "இந்தியாவின் துயரம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத்துவதற்கு பணித்தார். அதை ஏற்றுக்கொண்ட போஸ் இந்த புத்தகத்தை உடனிருந்து எழுதுவதற்கு உதவியாகவும், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கும் ஒரு உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கு முடிவு செய்தார். போஸின் நண்பரான டாக்டர் மாத்தூர் என்பவர் இதற்காக இரண்டு நபர்களை பரிந்துரைத்தார். அதிலுள்ள முதல் நபரை அழைத்து நேர்காணல் செய்த போஸுக்கு திருப்தியில்லை. எனவே, இரண்டாவதாக 23 வயதான எமிலி சென்கல் என்ற பெண் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டார். எமிலியின் பேச்சில் நம்பிக்கை கொண்ட போஸ், அவரை 1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்த்துக்கொண்டார். 1934 ஆம் ஆண்டு இந்த சந்திப்பு நடப்பதற்கு முன்புவரை 37 வயதான சுபாஷ் சந்திர போஸின் முழு கவனமும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியாவை விடுவிப்பதிலேயே இருந்தது. அதுவரை, எமிலி என்பவர் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை அறியாமல் இருந்தார் போஸ்.

போஸின் வாழ்க்கையை தாக்கிய காதல் புயல்

சுபாஷ் சந்திர போஸின் இளைய சகோதரரான சரத் சந்திரா போஸின் பேரனான சுகித் போஸ், ‘அவரது மாட்சிமை பொருந்திய நியமனம் – சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பேரரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்’ என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். அதில், எமிலியை சந்தித்த பிறகு போஸின் வாழ்க்கை தலைகீழாக மாற்றமடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸுக்கு பல காதல் விருப்பங்களும், திருமணத்திற்கான பல வாய்ப்புகளையும் கொண்டிருந்தார். ஆனால், அவர் யாரையும் ஆர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், எமிலியின் அழகு அவரை கவர்ந்துவிட்டது என்று அப்புத்தகத்தில் சுகித் போஸ் குறிப்பிட்டுள்ளார். சுபாஷ் சந்திர போஸே காதலை வெளிப்படுத்தியதாகவும், அவர் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேக்கியாவில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவர்களின் காதல் சிறப்பான நிலையை அடைந்தது என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வாழ்க்கையை ஒப்பீட்டு புகழ்பெற்ற கல்வியாளரான ருத்ரநாஷூ முகர்ஜி ஒரு புத்தகம் எழுதினார். பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட அப்புத்தகத்தில் போஸ் மற்றும் நேருவின் வாழ்க்கையில் அவர்களின் மனைவிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்

"தங்கள் காதலின் தொடக்க கட்டத்திலேயே இது மிகவும் வேறுபட்ட ஒன்று. கடினமான ஒன்று என்றும் அவர்கள் அறிந்திருந்தனர் என்பது அவர்கள் இருவரும் எழுதிக்கொண்ட கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. எமிலி அவரை திரு.போஸ் என்றும், போஸ் அவரை திருமதி. சென்கல் அல்லது ஷெல்லி என்று அழைத்தார்" என்று அப்புத்தகத்தில் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதங்கள் முன்னர் சுபாஷ் சந்திர போஸால் எமிலிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த கடிதங்களை சரத் சந்திர போஸின் மகனான ஷிஷிர் போஸின் மனைவியான கிருஷ்ணா போஸிடம் எமிலியே நேரடியாக அளித்தவையாகும்.
1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி எழுதப்பட்டுள்ள கடிதமொன்று இவ்வாறு தொடங்குகிறது, "என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."
"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மாவின் அன்பு

அந்த கடிதத்தின் கடைசியில், "நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதை படித்ததும் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார். எமிலி மீதான காதலில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டார். இதுகுறித்து சுகித்திடம் பேசிய போஸின் நெருங்கிய நண்பரும் அரசியல் கூட்டாளியுமான ஏசிஎன் நம்பியார், "சுபாஷ் ஒரு யோசனையுடன் இருந்தவர், இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதில் மட்டுமே அவரது கவனம் இருந்தது." போஸின் அந்த எண்ணத்திலிருந்து திசை திரும்புவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு அவர் எமிலியை நேசிக்கும்போதுதான் ஏற்பட்டது. அவர் எமிலியை மிகவும் விரும்பினார்.

திருமணம் நடந்ததா...?
அதற்கடுத்த முறை சந்திக்கும்போது போஸும், எமிலியும் திருமணம் செய்துகொண்டனர். தனக்கு 27 வயதிருக்கும்போது 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் நாள் தங்களது திருமணம் நடைபெற்றதாக கிருஷ்ணா போஸிடம் பேசிய எமிலி தெரிவித்தார். அவர்கள், தங்கள் இருவருக்கும் விருப்பமான ஆஸ்திரியாவிலுள்ள இடத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இருவரும் தங்களது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். எமிலி தங்களது திருமணத்தை தவிர வேறெந்த தகவலையும் கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. தனது அரசியல் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் சந்திக்க விரும்பாத காரணத்தினால் போஸ் தனது திருமண வாழ்க்கையை மறைந்திருக்கலாம் என்று முகர்ஜி நினைக்கிறார். வெளிநாட்டு பெண்ணை போஸ் திருமணம் செய்து கொண்டது அவரை பற்றிய மற்றவர்களின் பார்வையை மாற்றியிருக்கலாம்.

இந்திய பத்திரிகைகளுக்கு எழுதிய எமிலி

இந்தியாவிலுள்ள சில செய்தித்தாள்களுக்கும், இதழ்களுக்கும் வியன்னாவில் இருந்தபடியே எமிலி எழுதவேண்டுமென்று போஸ் விரும்பியதாக கிருஷ்ணா போஸ் கூறுகிறார். தி இந்து, மாடர்ன் ரிவ்யூ ஆகிய பத்திரிகைகளுக்கு எமிலி எழுதியிருந்தாலும் அக்கட்டுரைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்று போஸ் பலமுறை கூறியதாக தெரிகிறது. 1937 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி எமிலிக்கு சுபாஷ் எழுதிய கடிதத்தில், "இந்தியாவைப் பற்றி சில கட்டுரைகளை நீ எழுதியுள்ளாய். ஆனால், இந்த புத்தகங்களை உனக்கு வழங்குவதற்கு தேவையுள்ளதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நீ அவற்றை படிப்பதேயில்லை" குறிப்பிட்டுள்ளார்.

"நீ தீவிரமாக இருக்காத வரை, வாசிப்பதில் ஆர்வம் வராது. வியன்னாவில் நீ பல தலைப்பிலான நூல்களை பெற்றிருக்கிறாய். ஆனால், அவற்றை நீ தொடர்ந்து பார்க்கவில்லை என்று எனக்குத் தெரியும்."
மூன்று ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். இருவரின் அன்பின் விளைவாக 1942 ஆம் ஆண்டு நவம்பர் 29 இல் இவர்களின் மகளான அனிதா பிறந்தாள். இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது. அனிதா தனது கணவருடன் பல போர்களில் ஈடுபட்டிருந்ததுடன், துணிச்சலான வீரர் என்ற அடையாளத்தை பெற்று விளங்கினார். சுபாஷ் சந்திர போஸ் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியன்னாவிற்கு சென்று எமிலியையும், அனிதாவையும் சந்தித்ததே அவர்களின் கடைசி சந்திப்பாகும். ஆனால், சுபாஷ் சந்திர போஸின் நினைவுகளுடன் 1996 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி, தங்களது மகள் அனிதா போஸை ஜெர்மனியின் பிரபலமான பொருளாதார வல்லுனராக வளர்த்தெடுத்தார். இந்த கடினமான பயணத்திலும், சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்திலிருந்து எந்த உதவியும் பெறுவதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போரும் காதலும்

போராட்டக்களத்தின் நடுவே தலைவர்களின் காதல் பக்கங்கள்...!

காதல் என்ற வாழ்வியலின் ஓர் அழகிய உணர்வு. எல்லோரையும் வந்து தாக்கும் ‘அது’ உலகின் தலை சிறந்த தலைவர்களையும், புரட்சியாளர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இவர்கள் அதனை தன்னுடைய விடுதலைப் போராட்டத்துடன் இணைத்தே கொண்டு போயினர். போராட்டக்களத்தின் நடுவே தொடர்ந்தது இவர்களது காதல்!

ஜென்னி - மார்க்ஸ்:
ஜென்னி ஒரு செல்வந்தர் வீட்டு குழந்தை. இரண்டு வயதில் அவளது தந்தைக்கு பணி மாறுதல் பெற்று ஸ்ட்ரீவ்ஸ் பகுதிக்கு வந்தனர். ஜென்னியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஹேய்ன்ரிச் மார்க்ஸ். வக்கீல் தொழில் செய்பவர். ஜென்னிக்கு நான்கு வயது இருக்கும் போது 1818ம் ஆண்டு மே 5ம் தேதி ஹேய்ன்ரிச் மார்க்ஸுக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் தான் உலகின் மிக முக்கிய தத்துவக் கோட்பாட்டு தந்தை கார்ல் மாக்ஸ். மார்க்சும் ஜென்னியும் சிறு வயது முதலே ஒன்றாகவே இருந்தனர்.
பதினேழு வயதில் கார்ல்லுக்கும் ஜென்னிக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், இதனை அறிந்த கார்ல் மார்க்சின் தந்தை எங்கே தனக்கும் ஜென்னிக்கும் இடையிலான நட்பு பறிபோய்விடும் என்று பயந்தார். மார்க்ஸ் தனது மேற்படிப்புக்காக பெர்லினுக்கு சென்ற போதும் பல அறிவுரைக் கடிதங்கள் தந்தையிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது. ஆனால், ஜென்னி – மார்க்சின் காதல் யாரும் எட்ட முடியாத இடத்தில் பறந்து கொண்டு இருந்தது. ஜென்னி, மார்க்சை கரம் பிடிக்க ஏழு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து திருமணம் குறித்தான எல்லா கேள்விகளையும் தட்டிக் களித்தவாறு நாட்களை நகர்த்தினார் ஜென்னி. வேலை தேடினார் மார்க்ஸ்.

ஆனால், அவர் கையில் இருந்த உலக தத்துவங்களுக்கு இடையே அவருக்கு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதா? 1843ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு பாரிஸ் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரான்சில் பல்வேறு கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார் மார்க்ஸ். தொழிலாளர்களிடையே தொடர்ந்து பேசினார். அவரது கோட்பாடுகளை ஜென்னியிடம் விளக்குவார். அவ்வளவு வறுமையிலும் ஜென்னி தனது காதலனுடன் சந்தோஷமாக இருந்தாள்.
ஆனால், வருமானம் இல்லா காலகட்டத்தில் ஒரு குழந்தையுடன் எப்படி காலம் தள்ளினாரோ ஜென்னி. மார்க்ஸ் பிரான்சை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டார். அங்கிருந்து பெல்ஜியம் சென்றார். ஒரு நாள் அவர் சிலருடன் முக்கிய விவாதத்தில் இருக்கும் போது காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டார். ஜென்னி பதறினாள். சிலரைச் சந்தித்து தன் காதலனை எப்படியாவது வெளியே கொண்டு வர விரும்பினாள். உண்மையில் அவளால் அவரை பிரிந்து இருக்க முடியவில்லை. கடைசியில் அவளையும் சிறைபிடித்தனர். பல்வேறு மக்களின் போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றனர். மீண்டும் பிரான்சுக்கு போனார்கள். மீண்டும் நாட்டினை விட்டு வெளியேற உத்தரவு. அப்போது ஜென்னி கர்ப்பமாக இருந்ததால் அவளுக்கு மட்டும் போராடி விளக்கு வாங்கினார் மார்க்ஸ். மார்க்சினை பல்வேறு இன்னல்களுக்கு இடையே லண்டன் அனுப்பினார் ஜென்னி.
லண்டனுக்கு சென்ற பொது ஜென்னியை இன்னும் வறுமை வாட்டியது. குளிரும் வாட்டியது. வீட்டிற்கு அவர்களால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை. பல நேரங்களில் யாராவது வீட்டு வாடகை தருவார்கள். ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு சுகாதாரமற்ற பகுதிக்கு குடியேறினர். தொடர்ந்து அவர்களது சிறிய குழந்தை இறந்து போனது. அதனை அவள் இவ்வாறு குறிப்பிடுகிறாள், "குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை; அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை". வேறு ஒருவர் பணம் தர அந்தக் குழந்தையை புதைத்தனர். 1881ம் ஆண்டு டிசம்பர் 2ல் ஜென்னி கார்ல் மார்க்சிடம் இருந்து பிரிந்தாள். இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் அவள் மார்க்சை நேசித்தாள். அவரும் அவளை நேசித்தார். அவர்கள் காதலர்கள்!

சே - ஹில்டா:
இந்த உலகை ரசிக்கும் ஆசையுடன் சே சுற்றி திரிந்த காலத்தில் பல்வேறு லத்தின் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றார். அப்போதுதான் பெருவிற்கு செல்லும் போது குவாதிமாலாவில் ஹில்டாவைச் சந்தித்தார். ஹில்டாவும் பல்வேறு புரட்சிகர வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். பல்வேறு நாடுகளை சுற்றித் திறந்திருந்தார். இருவரும் ஒத்த கொள்கையாலும், ஒத்த போராட்டத்தாலும் இணைந்தனர். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது! பிறகு திருமணமும் செய்து கொண்டனர்.

பிரபாகரன் - மதிவதனி:
1983 ல் நடைபெற்ற ஜூலை படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். அதில் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்தனர். யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு இடம்பெயர்ந்த மாணவர்கள் கேட்க அதனை அரசு நிராகரித்து மாணவர்களை மீண்டும் தான் பயின்ற பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த சமயத்தில் தான் விடுதலைப்புலிகள் சார்பில் ‘கொலைக்களத்துக்கு போக வேண்டாம்’ என்று ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டனர். மாணவர்களிடையே மிகப்பெரிய போராட்டம் வெடிக்க நேரிடும் என்று கருதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட, நான்கு மாணவிகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ஜனவரி 9 1984ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர்.
ஆனால், ஜெயவர்தனே அரசு, மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஜனவரி 16ம் தேதி மாணவர்களை சோதித்த மருத்துவர், ஒரு மாணவியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். அன்று இரவே மாணவர்கள் காணாமல் போக, மாணவர்களின் உண்ணாநிலை புலிகள் பாசறையில் முடிக்கப்பெற்று, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியவந்தது.
"அரசுக்கு அமைதிவழி போராட்டம் காதில் கேட்காது. மாணவர்களின் உயிர் போகக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்" என்பதாக புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி படகின் மூலம் தமிழகம் கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மதிவதனி. சென்னையில் தங்கவைப்பட்டிருந்த மதிவதனி, ஹோலிப்பண்டிகையின் போது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்ற, அதற்கு பிரபாகரன் கடிந்து கொள்ள, மதிவதனி ஒரே அழுகை. அன்டன் பாலசிங்கத்துடன் பேசிவிட்டு செல்லும் போது சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். இருவருக்குமான காதல் மலர்ந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதிவதனியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.
அக்டோபர் 1ம் தேதி 1984ல் அவர்களது திருமணம் நடைபெற்றது. மதிவதனி மற்றும் பிரபாகரனின் உடல் வேறாயினும் உயிர் ஒன்றாகவே இருந்திருந்தது. இருவரின் காதலும் போராட்டத்துடன் இணைந்து நின்றது. எல்லாவிதமான நெருக்கடியான காலகட்டத்திலும் கூட தலைவரின் மனைவி என்ற எந்த சலுகையும் இல்லாமல் தான் வாழ்ந்தார் மதிவதனி. போர்க்களத்திற்கு இடையிலும் அந்தக் காதல் மக்களுக்கான போராட்டத்துடன் இணைந்தே இருந்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டும் அல்ல பல புரட்சியாளர்களின் காதல் இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்கான போராட்டங்களுக்கு இடையே நிகழ்ந்து இருக்கிறது. நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களைப் போலவே நாமும் போராட்டத்தைக் காதலிப்போம். சமூகத்தை காதலிப்போம். காதலை காதலிப்போம். ஆதலால் காதல் செய்வீர்!

பிரபாகரன் மதிவதனியின் காதல்!

நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காகவே இந்த பதிவு.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.
மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர்.

ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார்.
இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார். அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோதியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோதியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.
இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார். தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே தலைவர் பிரபாகரனும் மதிவதனியும்.

தேசியத் தலைவரின் வீடு தகர்ப்பு:

இதய இருப்பிடத்தின் சரிவு...!

போர் நிறுத்தக்காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் அங்கு மற்றெல்லா இடங்களையும் விட புதுக்குடியிருப்பில் சில அசாதாரண அனுபவங்களைச் சந்தித்திருக்கக் கூடும். வன்னியின் ஏனைய இடங்களைவிட புதுக்குடியிருப்பை மையப்படுத்திய பிராந்தியத்தில் புலிகளின் கண்காணிப்பு நடைமுறைகள் ஒப்பீட்டளவில் இறுக்கமாக இருந்ததை உணர்ந்திப்பார்கள். புலிகளுக்குத் தெரியாமல் ஓர் அணுகூட அசையமுடியாது என்ற நிலைமையே இப்பகுதியில் காணப்பட்டது. இத்தகைய கடுமையான கண்காணிப்புகளுக்கான காரணம், மக்கள் என்ற போர்வையில் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்தவர்களோ அல்லது அரச உளவாளிகளோ வேவுபார்க்க வரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கைதான்.
வன்னியின் ஏனைய இடங்களை விடவும் புதுக்குடியிருப்பு சார்ந்த இடங்களில் தமது கண்காணிப்பை இவ்வளவு இறுக்கமாகப் புலிகள் ஏன் நடைமுறைப்படுத்துகிறார்கள் ? என்ற கேள்வி அப்போது எல்லோர் மனங்களிலும் எழவே செய்தது.ஆனால் அதற்கான காரணமும் அவர்களுக்கு வெளிப்படையானதுதான். புலிகளுக்கு மட்டுமல்லாது, தமிழர்களுக்கே இதயமான தலைவர் பிரபாகரன் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியிலேயே வசிக்கிறார் என்பதுதான் அந்தக்காரணம்.
தலைவர் புதுக்குடியிருப்பில் இருக்கிறார் என்று தெரிந்தாலும் கூட, எந்த இடத்தில், எந்த வீட்டில் இருக்கிறார் என்பது அவரது வீடு படையினரால் கைப்பற்றப்படும் வரை அரச படைகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரியவரவேயில்லை. அவ்வளவு ஏன், மிக முக்கியமான தளபதிகள், தலைவரின் பாதுகாப்பு பிரிவினர் என்போரைத் தவிர மற்றைய போராளிகளுக்கு கூட தலைவரின் இருப்பிடம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. பழைய மந்திர தந்திரக் கதைகளில் வருவது போன்று ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி செல்லவேண்டிய ஒரு இடம் போலவே, தலைவரின் இருப்பிடம் குறித்த தகவலின் இரகசியமும் பேணப்பட்டது. இப்படி பார்ப்பதற்கு அரிதான தலைவரின் இருப்பிடம் குறித்து பல்வேறுவிதமான ஊகங்கள் மக்கள் மத்தியில் இருந்தன.
அடர்ந்த காட்டுக்குள், நிலத்துக்கு கீழே, ஏராளமான சுரங்கங்களைக் கொண்ட இடத்திலேயே அவர் இருப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் நினைத்ததில் அதிகம் உண்மையிருந்தது என்பதையே, கடைசியில் அவரது வீட்டைப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். ஓரளவு சனநடமாட்டம் குறைந்த இடத்தில், தலைவரின் வீடு அமைந்திருந்தது. வீட்டைச்சுற்றிலும் காவலரண்கள். அவை வெளிப்பார்வைக்கு காவலரண்கள் போல தோற்றமளிப்பதை தவிர்ப்பதற்காக மல்லிகை போன்ற கொடிவகைகளைப் படரவிட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு ஒவ்வொரு காவலரணும் ‘இரும்புக்கேடர்களால்’ கவசமிடப்பட்டிருந்தன.
ஏனைய வீடுகளைபோலவே முன்பக்கம் மல்லிகைப்பந்தலின் கீழ் ‘போர்ட்டிகோ’ அமைப்போடு அமைதியாகத் தெரிந்த அந்த வீடு, உள்ளே தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மத்தியரேகையாக இருந்தது. வழமையாக ஒரு பொதுமகனின் வீட்டின் அமைப்பை முதல் தளம் கொண்டிருந்தது. படையினரால் பச்சிளம் பாலகன் என்றும் பாராமல், பிஸ்கட்டை உண்ணக்கொடுத்துவிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட தலைவரின் இளையமகன் பாலச்சந்திரனின் விளையாட்டு இடம் இந்த முதல் தளம் தான். அவனின் விளையாட்டுப் பொருள்கள் சில அண்மையில் இந்த வீட்டைப்பார்வையிட படையினர் அனுமதித்திருந்த காலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முதல் தளத்தின் மையத்தில் கீழ்நோக்கி வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டுக்களில் இறங்கினால் நீங்கள் இன்னொரு உலகத்துக்குச் சென்றது போல உணரவேண்டியிருக்கும். இருளும் குளிரும் கலந்த சீதோஷ்ண நிலையில், இரண்டு தளங்கள் நிலத்தின் கீழ் இருந்தன. தளபதிகளுடனான சந்திப்பு, தாக்குதல் திட்டமிடல், கரும்புலிகளுடனான சந்திப்பும் இராப்போசனமும் என்பனவெல்லாம் இந்த நிலக்கீழ் தளங்களிலேயே நடைபெற்றிருந்தன. அதனால் ஒருதாக்குதல் குறித்த திட்டமிடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அந்தவீட்டை விமானங்கள் அதிசக்திவாய்ந்த குண்டைவீசி தகர்க்க முனைந்தாலும் கூட, உள்ளே இருப்பவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது.
ஆயினும், கிளிநொச்சியில், கிபிர் தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த பின்னர், தலைவரின் வீட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏனெனில் தமிழ்ச்செல்வன் விமானத்தாக்குதலில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பதுங்குகுழியில் இருந்த போதும், அந்தப்பதுங்கு குழியின் இருபக்க வாசல்களையும் குறிவைத்து தாக்கி,அதனை மூட செய்து, உடலில் எந்தவொரு காயமுமின்றி, மூச்செடுக்க முடியாமாலேயே தமிழ்ச்செல்வனை அரசபடைகள் கொன்றிருந்தன.
எனவே அவ்வாறான நிலையைத் தவிர்க்க, காற்று நிலக்கீழ் தளங்களுக்கு தாராளமாக வரக்கூடிய வகையில் பல வழிகள் உண்டாக்கப்பட்டன. அத்தோடு அவசரகாலத்தில் வெளியேறுவதற்கான சுரங்க வழிகள், ‘லிப்ட்’ வசதிகள் என்பனவும் உண்டாக்கப்பட்டிருந்தன. இப்படியெல்லாம் ஒரு கோட்டைக்கு நிகரான வலுவோடு அமைதியாக இருந்த அந்த வீட்டை விட்டு வெளியேற கடைசிவரை தலைவர் சம்மதிக்கவில்லை. ஆனால் உலககூட்டுச் சதியால் பேரினவாத சிங்களப்படை முன்னேறிக்கொண்டேயிருந்தது. தலைவர் வராமல் புலிகள் எப்படிப் போவார்கள்? புதுக்குடியிருப்பை படைகள் கைப்பற்றினாலும் தலைவரின் இருப்பிடத்தை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாதுதான். ஆயினும் எவ்வளவு நாட்களுக்குத்தான் எதிரியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பகுதியில் இருக்கமுடியும்? போரை வழி நடத்துவது யார்?
இந்த நிலையில் தான் , புலிகளின் வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு மாபெரும் முறியடிப்புச்சமரை நடத்தி படைகளை பழைய நிலைகளுக்கு விரட்ட தளபதிகள் முடிவெடுத்தார்கள். தன்னைக்காக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் புலிகள் இன்னும் மூர்க்கமாக போரில் இறங்கி தாய்மண்ணை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் அந்தவீட்டில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்தார் என்று போராளிகள் கூறுகிறார்கள். புலிகளின் சகல படையணிகளும், ஆயுதபலமும் ஒன்றிணைக்கப்பட்டு தளபதிகள் தலைமையில் புலிகள் பாயத்தயார். அந்தப்பாய்ச்சல் மட்டும் நினைத்தபடி நடந்திருந்தால், தாயகத்தின் தலைவிதி வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் இங்கும் துரோகம் விளையாடியது. எப்படியோ படைத்தரப்புக்கு புலிகளின் திட்டம் கசிந்துவிட்டது. இரவோடிரவாக ஆயிரக்கணக்கான படைகள் நாலைந்து வரிசையில் புலிகளைச் சூழ ’பெட்டி" அடித்து விட்டார்கள்.
அப்படியும் சோரவில்லை வீரப்புலிகள். வெறிகொண்டு பாய்ந்தார்கள். எல்லா வரிசைகளும் தகர்ந்து போக, தேசத்தை மீட்பதற்கான ஓயாத அலைகளாக புறப்பட எத்தனித்த சமயத்தில் தான் போரியல் மரபுக்கு முரணாக பொஸ்பரஸ் குண்டுகளை வகைதொகையாக ஏவியது பேரினப்படை. பாயத்துணிந்த மறவர்கள் எரிந்து, கருகி மாண்டு போனார்கள். அப்படி இருந்தும் கூட எஞ்சிய புலிகள் தலைவரை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக பாதுகாப்பான் இடத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். முள்ளிவாக்காலிலே பல்லாயிரக்கணக்கில் எம்மின உயிர்களைக் குடித்து போரில் வென்றதாக மார்தட்டியது சிங்களப் பேரினவாதப்படை. எங்கள் இனப்போராட்டத்தின் தலைவிதியைத் தீர்மானித்த தலைவரின் வீட்டை முதலில் தனது தளமாக மாற்ற யோசித்த படைத்தரப்பு, பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு சுற்றுலா மையமாக்க நினைத்தது. பொதுமக்களை பிரபாகரனின் வீட்டைப்பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட நாள்முதலாக கூட்டம் அலைமோதியது.
தங்களின் வெற்றியை பற்றிய விம்பமே அந்த வீட்டைப்பார்வையிடுபவர்களுக்கு ஏற்படும் என்பதே இராணுவத்தின் எண்ணம்.ஆனால் அதற்கு மாறாக தலைவரின் வீட்டைப் பார்வையிட்ட சிங்களவர்களிம் சரி, தமிழர்களும் சரி, வெளிநாட்டவர்களும் சரி எவரும் அந்த வீட்டை இராணுவத்தின் வெற்றிச்சின்னமாக கருதவில்லை. மாறாகப் புலிகலின் போரியல் ஆற்றலின் குறியீடாகவே கருதி, தம்முடைய ஆச்சரியங்களையும் வெளிப்படுத்தினர். இது புகைச்சலைக் கிளப்பியது அரசுக்கு. மக்களின் இந்த நம்பிக்கைகள் மீண்டும் புலிகள் பற்றிய ஞாபகமூட்டல்களை வளர்த்து, அதன் விளைவாக எப்போதும் உரிமைக்குரலோடு இருக்கும் தமிழர்களின் இருப்பு தொடரக்கூடும் என்று அது கருதியது.
மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தொழித்து தமிழ்மக்கள் மனத்திலிருந்து மாவீரர்கள் பற்றிய நினைவுகளைத் துடைத்தழிக்கலாமென்று நினைத்த பேரினவாத அரசு, தலைவரின் வீடும் தமிழ்மக்களுக்கான எழுச்சிக் குறியீடாக மாறிவிடுமென்று அஞ்சி அதையும் அழித்துவிடத் துணிந்தது. எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல் வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அரசின் கோபத்தைக் கிளறிவிட்டது. தேர்தலில் மரணஅடி வாங்கிய சிங்களப் பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் பொருமிக்கொண்டிருந்த காலத்தில்தான் தலைவரின் வீட்டைத் தகர்த்தழிக்கும் வேலையைத் தொடங்கியது சிங்களப்படை.
கண்ணிவெடியைச் செயலிழக்கச் செய்யப்போவதாக சொல்லி, தலைவரின் வீட்டைக் குண்டுவைத்துத் தகர்த்துள்ளது சிறிலங்கா இராணுவம். ஆனால் அந்த பகுதியில் கண்ணிவெடியகற்றல் பூர்த்தியாகி வாரக்கணக்காகி விட்டதென்றும், அதன் போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள்கள் யாவும் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட நிறுவனத்தால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்பதும் மக்களுக்கு தெரியும். ஆயினும் உண்மையை வெளிக்காட்டாமல் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மீளக்குடியமர்ந்த பின்னும் இடம்பெயர் வாழ்வு அவர்களை விட்டு நீங்கவில்லை. சரியாக மாலை 6.41க்கு எழுந்தது பேரோசை. எங்கும் அதிர்வலை. எங்கள் இனத்தின் நம்பிக்கையின் குறியீடாக இதயத்தின் இருப்பிடமாக இருந்த அந்த வீடு ஒற்றை வெடியில் தூர்ந்து, இடிந்து போனது.
ஆனால் வெறும் கட்டடங்களைத் தகர்ப்பதால் மக்கள் மனத்திலிருந்து அந்த எழுச்சி வடிவத்தைக் கலைத்துவிட முடியாது. மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைப்பதன் மூலமோ, நினைவுத் தூபிகளை இடிப்பதன் மூலமோ, தலைவரின் வீட்டைத் தகர்ப்பதன் மூலமோ, தனது கோபத்தையும் வெறியையும் சிங்களப் பேரினவாதம் தணித்துக் கொள்ளலாமே ஒழிய, தமிழ் மக்களின் மனங்களில் இந்த எழுச்சிச் சின்னங்களின் நினைவுகளையோ விடுதலைக்கான அவாவையோ அழித்துவிட முடியாது. விடியலுக்கான எமது பயணத்தில் விதைகளையும் விழுதுகளையும் தமது நெஞ்சிலிருத்திப் பயணிப்பர் தமிழ்மக்கள்.

பிரபாகரனின் உயரிய பண்புகள்...!

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}

{{user_data.book_status}}

Literature & Fiction | 12 Chapters

Author: TAMIZHDESAN IMAYAKAPPIYAN

Support the author, spread word about the book to continue reading for free.

PULI - MAKKAL KAPPIYAM PESUGIRADHU-3

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}