2.08 K Views

Puriyatha Mayakkam

Literature & Fiction | 43 Chapters

Author: Vinitha

2.08 K Views

agalya enbavalku naangu vayadhu irukkum pothe oru paiyan mel ierppu kondaal, aanal kaala pokil thaan therinthathu avanum aval uir thozhiyum virumbukiraargal endru, aval thozhi avalidam kaadhal kathai koorum pothu agalyaavaal sagikka mudiyaathu, appozhuthu avalidam irunthu thappikka aval arugil amarnthirupavanidam pesi kondu irupaal, avan thaan avaludaya kaarthik, kaarthik avanuke theriyaamal agalyavidam avan kaathalai kooriyavan, atharkku kaaranu....

1

2000 புத்தாண்டு அன்று சித்தூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் நான், என் தந்தை, என் அக்கா, அனைப்பக்கத்தில் உள்ள கோவிலுக்கு மோட்டார் பைக்கில் சென்றிருந்தோம். என் அம்மா, பாட்டி, எல்லாம் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அங்கு கோவிலை அடைந்தவுடன் கடவுளை தரிசித்துவிட்டு அணைக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அந்த அணையை நோக்கி போனோம். அந்த அணைக்குச் செல்லும் பாதை கல்லும், கண்ணாடியும் சிதைந்து கிடந்தது. என் தந்தை எங்கள் இரண்டு பேரையும் உட்கார வைத்து அந்த பாதையில் மெதுவாகச் சென்றார். நான் அந்த மோட்டார் பைக்கில் முன்னாடி உட்கார்ந்து இருந்தேன். என் தந்தயிடம் வேகமாக செல்லுங்கள் என்று கூறினேன்.

அதற்கு அவர் “சும்மா இரும்மா” என்று கூறினார். நான் அவர் கையைத் தட்டிவிட்டு, ஸ்பீட் பிரேக்கரை(ஆக்சிலரேட்டர்) வேகமாகத் திருவினேன். அப்பா அக்கா இருவரும் கீழே விழுந்துவிட்டார்கள். நான் மட்டும் அந்த ஸ்பீட் பிரேக்கரை திருவிக்கொண்டே இருந்தேன். அந்த வண்டி என்னை கண்ணாடியும் கல்லும் இருந்த பாதையில் கீழ் இருந்து மேல் வரை இழுத்துச் சென்றது. என் தலையில் ஒருபக்கம் தோல் தொங்கிக்கிடந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எல்லோரும் கதறி என்னை நோக்கி வந்தார்கள். அங்கிருந்த மக்கள் என்னை ஒரு காரில் ஏற்றுகிறார்கள். என் தந்தையும் ஏறினார். என்னை மருத்துவமனையில் அழைத்துச் சென்றிருந்தார்கள். செல்லும் வழியில் என் அம்மா, பாட்டி நடந்து வந்தார்கள். அங்கு காரை நிறுத்தியதும் என் அம்மா யார் என்று உள்ளே எட்டிப்பார்க்கிறாள். என்னை பார்த்ததும் கதறி அழுகிறாள்.

என் அம்மா எதற்கு அழுகிறாள் என்று தெரியவில்லை. நான் மயக்கக் கலக்கத்தில் இருந்தேன். அப்போது “எனக்குதானம்மா அடிபட்டிருக்கு, நீ ஏன் அழுகுற...? ” என கேட்க முயன்றேன். ஆனால் என்னால் அந்த நிலமையில் பேச முடியவில்லை. சிறிது நேரம் கழித்து மயக்கமடைந்து விழுந்தேன்.

கண் திறந்து பார்க்கும் பொழுது என்னைச் சுற்றி எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து சிரித்தேன். என் அம்மா நான் முழித்ததும் என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். பிறகு நான் தலை முடியை தொட்டுப் பார்த்தேன். என் தலை முழுவதும் கட்டுப் போடப்பட்டிருந்தது.

என் பாட்டி மருத்துவரிடம் “பிள்ளைக்கு முடி வருமா” என்று கேட்டால்.

அதற்கு அவர், “நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை... ஒவ்வொரு முடியை எடுத்துதான் தையல் போட்டோம். கண்டிப்பாக வளரும். நீங்கள் அதை நினைத்து அச்சம் அடைய வேண்டாம்” என்று கூறினார்.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

2

5 வாரத்திற்குப் பிறகு எனக்கு உடல்நிலை சிறிது குனமானபோது என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப திட்டம் போட்டார்கள்.

நான் “தலை வலிக்குது” என்று கூறி, ஒரு வாரம் ஓட்டினேன். அதற்கு மேல் என்னால் நடிக்க முடியவில்லை. எல்லோரும் நான் நடிக்கிறேன் என்று கண்டுபிடித்து விட்டார்கள். பிறகு என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது எனக்கு அடிபட்டதால் என்னுடைய கிளாஸ் டீச்சர் என் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார்கள்.

எனக்கு அடிபட்டதால் குணமாகும் வரை, என்னை மட்டும் ஒரு தனி நாற்காலியில் உட்கார வைப்பார்கள்.

நான் உட்கார்ந்ததும் வருணைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து சிரித்தான். அவனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் தப்பு செய்தால் கூட, எனக்கு அவனை மட்டும்தான் புடிக்கும். எனக்கு அப்பொழுது ஐந்து வயது.

நீங்கள் எல்லோரும் என்னிடம் கேட்கலாம். “உனக்கு அப்போதே அவனுடன் காதலா என்று” நான் காதல் என்று சொல்வதை விட, அவன் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது என்று கூறுவேன். ஆனால் அவனுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்று தெரியவில்லை.

வருண் என்னிடம் வந்து “வலிக்குதா” என்று கேட்டான்.

நான் “வலிக்கவில்லை” என்று கூறினேன். அவன் ‘சரி இனிமேல் எங்கேயும் போய் விழாதே” என்று கூறினான். நானும் சரி என்று கூறினேன்.

2 வருடத்திற்குப் பிறகு :

வருண் ஒருநாள் என் பக்கத்தில் உட்கார்ந்த பொழுது காவியா என்னை நோக்கி வந்து “இவனுக்கு என்னுடன் உட்காரத்தான் ஆசை” என்று கூறுவாள்.

நான் “இல்லை... என்னுடன் இருக்க பிடித்ததால்தான் என்னிடம் வந்து உட்க்காருகிறான்” என்று கூறுவேன்.

காவியாவுக்கும் வருண் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.

நான் ஒன்று கூறினால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்... காவியாவும் நானும் உயிர்த்தோழி. நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம். ஆனால் வரும் விஷயத்தில் மட்டும் சண்டை போடுவோம். மீண்டும் ஒன்று கூடுவோம்.

இந்த தடவை சண்டை போடும்போது காவியா“அவனிடிடமே போய் கேக்கலாம்” என்று கூறினாள்.

நானும் “சரி வா போய் கேக்கலாம்” என்று கூறினேன்.

காவியா அவனிடம் “உனக்கு என்னைப் பிடிக்குமா, அகல்யாவைப் புடிக்குமா” என்று கேட்டாள். அகல்யா என்பது நான்தான். அவள் அப்படிக் கேட்டவுடன் வருண் “எனக்கு இரண்டு பேரையும் புடிக்கும்” என்று கூறிவிட்டான்.

எனக்கு அப்பொழுது வருண் மீது முதன் முறையாக கோபம் வந்தது.

‘என்னை மட்டும் பிடிக்கும் என்று கூறலாமே,எதுக்கு அவளையும் சொல்லுறான்' என்று அவன் மீது கோபம் வந்தது.

1 வருடம் கழித்து,

நான் நான்காம் வகுப்பிற்கு சென்றுவிட்டேன். முதல் நாளன்று சென்றபொழுது வருணைக் காணவில்லை. நான் லீவ் எடுத்திருப்பான் என்று நினைத்தேன். ஆனால் இரண்டாம் நாளும் அவனைக் காணவில்லை.

நான் அவனுடைய நெருங்கிய நண்பன் சுரேஷிடம் “வருண் எங்கே” என்று கேட்டேன். அதற்கு சுரேஷ் “வருண் வேற ஸ்கூல சேர்ந்துவிட்டான்” என்று கூறினான். நான் எந்தப் பள்ளி என்று கேட்டேன். அவன் “மகாலக்ஷ்மி பள்ளி” என்று கூறினான்.

எங்கள் வீட்டில் நான் ஐந்தாவது முடித்ததும் அந்த மகாலட்சுமி பள்ளியில்தான் சேர்க்க முடிவெடுத்திருந்தார்கள். நான் அங்கு படிக்க போனதும் அவனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}

3

1 வருடம் கழித்து,

12 ஜூன் 2007 இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். இன்று மகாலட்சுமி பள்ளியில் எனக்கு முதல் நாள். நான் வருணைப் பார்த்துவிடுவேன் என்று நினைத்தேன்.

காவியாவும் நான் சேர்ந்த பள்ளியிலேயே சேர்ந்தால். அவளும் நானும் ஒரே வகுப்பறையிலேயே சேர்ந்துவிட்டோம். ஆனால் என்னால் வருணைப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் நான் சேர்ந்த பள்ளியில் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனி வகுப்பறைகள் இருந்தது.

எங்கள் ஊருக்கு மொத்தம் 4 பேருந்துகள் வரும். நான், காவியா செல்லும் பேருந்து நம்பர் 11 ஒருநாள் வருண் செல்லும் பேருந்தை அறிந்தேன். அவனுடைய பேருந்து நம்பர் 15 அவனுடன் நான் பேச முயன்றேன்.

ஆனால் எனக்கு தயக்கமாக இருந்ததால் என்னால் அவனிடம் பேச முயலவில்லை. எதற்கு அந்த தயக்கம் என்று தெரியவில்லை. ஒரு சில சமயம் “அவனுக்குத்தான் உன்னை தெரியுமே. போய் பேசு” என்று எனக்குள்ளே கூறிக்கொள்வேன். ஆனால் அவனிடம் செல்லும் போது யார் என்று தெரியாததுபோல் காட்டிக்கொள்வேன்.

ஒருநாள் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவனிடம் சென்ற பொழுது அவன் என்னைப் பார்த்தான். அவனே வந்து பேசுவான் என்று நினைத்தேன்.

ஆனால் பார்த்தும் பார்க்காதது மாதிரி நடந்து கொண்டான். நானும் அவனைக் கண்டும் காணாமல் வந்துவிட்டேன்.

2 வருடங்களுக்குப் பிறகு,

காவியாவும் நானும் ஒரே ஊருதான். ஒரு நாள் அவள் வீடு காலி செய்துவிட்டு பக்கத்து ஊரிற்கு சென்றார்கள். என் வீட்டாருக்கு நான் காவியாவுடன் சேருவது புடிக்காது. அவலுடன் சேரும்போது எப்பொழுதும் என் வீட்டில் உள்ளவர்கள் அவள் கூட சேராதே என்று கூறுவார்கள். ஒரு நாள் அவள் வீட்டிற்க்கும் என் வீட்டிற்க்கும் சிறிய பேச்சு சண்டை வந்தது,அது சொல்ல கூட நான் விரும்பல, அந்த அளவுக்கு அந்த சண்டை சின்ன பிள்ளை தனமாக இருக்கும்,நான் "உங்கள் சண்டை உங்களோட வச்சுக்கோங்க என்ட கொண்டு வராதிங்க" என்று கூறினேன்.

ஆனால் எதைக் கூறினாலும் என் வீட்டார்கள் அவலுடன் பேசுவதை மட்டும் திட்டிக்கொண்டே இருப்பார்கள்.

நான் அதை காதில் வாங்கிக் கொள்ளமாட்டேன். காவியா வேறு இடம் மாறும் செய்தியைக் கேட்டதும் நான் அவளைப் பார்த்து வருகிறேன் என்று கூறினேன். ஆனால் என் அம்மா என்னை விடவில்லை.

என் அப்பா வெளி ஊரில் வேலை பார்ப்பவர். நான் என் அம்மாவிடம் “இதுவே அப்பா இங்கிருந்திருந்தா அவர் விட்டிருப்பார். நீங்கள் மட்டும் எதுக்கு இப்படி சாவடிக்கிறீங்கன்னு” கோவத்தில் கத்திவிட்டேன்.

என் அம்மா என் தாடையில் “பளார்” என்று அடித்துவிட்டார். “வளர வளர வாயும் அதிகமாயிட்டே போகுது. கூட கூட பேசுற? பெரியவங்கள மதிக்கத் தெரியாதா” என்று கூறினால்.

நான் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. கீழே உட்கார்ந்துவிட்டு “நீங்க இப்ப விடலைனா என்ன. நான் ஸ்கூல அவளைப் பார்த்துக் கொள்வேன்” என்று கூறினேன்.

அதை கூறியவுடன் அடுப்பங்கரயிலிருந்து கரண்டி பறந்து வந்தது. அதை என் அம்மாதான் எறிந்தாள். நான் என் வாயை மூடிக்கொண்டேன்.

அடுத்தநாள் பள்ளிக்குச் சென்ற பொழுது காவியாவைப் பார்த்தேன். அவளிடம் புது இடம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன்.

அவளும் “பழைய இடம் மாதிரி இல்லை... இருந்தாலும் போகப் போக சரியாகிவிடும்” என்று கூறினால். அவளிடம் நான் நேற்று வீட்டில் நடந்ததைப் பற்றிக் கூறலாமா, வேண்டாமா என்று யோசித்தேன். அதை நான் இவளிடம் கூறினால் என்னைத் தப்பாக நினைத்துக் கொள்வாளா...? என்ற கேள்வி வந்தது. நான் அவளிடம் கூறாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்.

அவளிடம் ‘ எந்த பஸ்ல வர?' என்று கேட்டேன். அதற்கு அவள் “15” என்று கூறினால். அவள் அந்த நம்பரைக் கூறியவுடன் எனக்கு வருண்தான் நினைவுக்கு வந்தான்.

நான் “அப்போ நீ தினமும் வருணைப் பார்ப்பாயா...?” என்று கேட்டேன். நல்ல வேலை அவள் காதில் விழவில்லை. அவள் “புரியல” என்று கூறினால்.

நான் “என்ன கேள்வியைக் கேட்கிறாய் நீ... அவள் அவனைப் பார்த்தால் என்ன, பார்க்காமல் இருந்தால் உனக்கென்ன உன் வாயை அடக்கு என்று நினைத்துக்கொண்டேன்” அவளிடம் நான் ஒன்றும் இல்லை என்று கூறினேன்.

Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}

4

2 வருடத்திற்குப் பிறகு,

இன்று என் ஒன்பதாம் வகுப்பு முதல்நாள். வீட்டில் இருந்து கிளம்பி என் பஸ்சுக்காக காத்திருந்தேன். பஸ் வந்தது. என்னுடைய பஸ்ஸில் என்னுடைய ஸ்டாப்தான் முதல் ஸ்டாப்.

ஆனால் இன்று கூட்டமாக இருந்தது. உள்ளே ஏறிப் போனேன். காவியா உட்க்கார்ந்திருந்தால்.

அவளிடம் “ஏன் இந்த பஸ்ஸில் வறீங்க” என்று கேட்டேன்.

அவள் “பஸ் ரிப்பேர். இன்னும் 15 நாளைக்கு இந்த பஸ்சில்தான் வருவோம்” என்று கூறினால். நான் உடனே வருணைப் பின்னாடித் திரும்பி தேடினேன்.

என் பஸ்ஸில் முன் பகுதியில் பெண்கள், பின் பகுதியில் ஆண்கள் என்று உட்காருவோம்.

நான் தேடியதைக் காவியா பார்த்து “யாரை தேடுற?” என்று கேட்டாள்.

நான் “வருண் எங்கே என்று கேட்டேன்” காவியா “அவன் வேறு ஸ்கூல சேர்ந்துவிட்டான்” என்று கூறினாள்.

நான் அப்போது கடவுளிடம் “ஏன் என்னை மட்டும் இப்படி பாடாய் படுத்துற?. இந்த 15 நாட்க்கலாச்சும் அவனைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அதுக்கும் வழி இல்லாம ஆக்கிட்டியே” என்று கூறினேன்.

காவியா என்னிடம் “உன்கிட்ட வருண் பத்தி ஒரு விஷயம் சொல்லனும்னு” என்று சொன்னால்.

நான் “சொல்லு” என்றேன்.

அவள் “ஈவ்னிங் சொல்றேன்” என்று கூறினாள்.

நான் “சரி” என்று கூறினேன்.

அன்று பாடம் நடத்தும்பொழுதெல்லாம் “என்னவாக இருக்கும் ஒருவேளை அவன் என்னை விரும்புகிறான் என்று கூறப்போகிறாளா.என்னவாகயிருக்கும்... என்னவாகயிருக்கும்...என்னவாகயிருக்கும்... எப்போது ஈவ்னிங் வரும். ஏன் இன்னக்கி மட்டும் நாள் பொறும்மயா போது” என்று எனக்குள்ளேயே பித்துப் பிடித்தவள் போல் பேசிக்கொண்டேன்.

அப்போது கணக்கு டீச்சர் என்னை எழுப்பி “நான் இப்போ என்ன சொன்னேன்னு சொல்லு...?” என்று கேட்டாள்.

நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். அதற்கு கணக்கு டீச்சர் “இப்போ நீ சொல்லலைனா வெளிலதான் போயி நிக்கனும்னு சொன்னாங்க” .

Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[13].like_count}} {{global.chaps[13].like_text}}
Like what you read?
{{global.chaps[14].like_count}} {{global.chaps[14].like_text}}
Like what you read?
{{global.chaps[15].like_count}} {{global.chaps[15].like_text}}
Like what you read?
{{global.chaps[16].like_count}} {{global.chaps[16].like_text}}
Like what you read?
{{global.chaps[17].like_count}} {{global.chaps[17].like_text}}
Like what you read?
{{global.chaps[18].like_count}} {{global.chaps[18].like_text}}
Like what you read?
{{global.chaps[19].like_count}} {{global.chaps[19].like_text}}
Like what you read?
{{global.chaps[20].like_count}} {{global.chaps[20].like_text}}
Like what you read?
{{global.chaps[21].like_count}} {{global.chaps[21].like_text}}
Like what you read?
{{global.chaps[22].like_count}} {{global.chaps[22].like_text}}
Like what you read?
{{global.chaps[23].like_count}} {{global.chaps[23].like_text}}
Like what you read?
{{global.chaps[24].like_count}} {{global.chaps[24].like_text}}
Like what you read?
{{global.chaps[25].like_count}} {{global.chaps[25].like_text}}
Like what you read?
{{global.chaps[26].like_count}} {{global.chaps[26].like_text}}
Like what you read?
{{global.chaps[27].like_count}} {{global.chaps[27].like_text}}
Like what you read?
{{global.chaps[28].like_count}} {{global.chaps[28].like_text}}
Like what you read?
{{global.chaps[29].like_count}} {{global.chaps[29].like_text}}
Like what you read?
{{global.chaps[30].like_count}} {{global.chaps[30].like_text}}
Like what you read?
{{global.chaps[31].like_count}} {{global.chaps[31].like_text}}
Like what you read?
{{global.chaps[32].like_count}} {{global.chaps[32].like_text}}
Like what you read?
{{global.chaps[33].like_count}} {{global.chaps[33].like_text}}
Like what you read?
{{global.chaps[34].like_count}} {{global.chaps[34].like_text}}
Like what you read?
{{global.chaps[35].like_count}} {{global.chaps[35].like_text}}
Like what you read?
{{global.chaps[36].like_count}} {{global.chaps[36].like_text}}
Like what you read?
{{global.chaps[37].like_count}} {{global.chaps[37].like_text}}
Like what you read?
{{global.chaps[38].like_count}} {{global.chaps[38].like_text}}
Like what you read?
{{global.chaps[39].like_count}} {{global.chaps[39].like_text}}
Like what you read?
{{global.chaps[40].like_count}} {{global.chaps[40].like_text}}
Like what you read?
{{global.chaps[41].like_count}} {{global.chaps[41].like_text}}
Like what you read?
{{global.chaps[42].like_count}} {{global.chaps[42].like_text}}

{{user_data.book_status}}

Literature & Fiction | 43 Chapters

Author: Vinitha

Support the author, spread word about the book to continue reading for free.

Puriyatha mayakkam

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}