Educational & Professional | 15 Chapters
Author: Anna. Nagarathinam
The philosophy of Hegel and Feuerbach are described in this book in a simple way. It is clearly mentioned how the dialectics and materialistic aspects evolved from German philosophy. Although Hegel and Feuerbach made great contributions to the dialectics and materialism respectively, it is only Marx developed a holistic, scientific and dialectical materialist theory that was entangled in Hegel's dialectical idealism and Feuerbach ma....
ஜெர்மானியப் புரட்சி என்பது துப்பாக்கியாலும், மக்கள் திரட்சியாலும் வரப் போவதில்லை. மாறாக, அப்புரட்சி, தத்துவத்தாலும், கருத்துக்களாலும் நடந்தேறும். நம்முடைய காலம், ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் காலம் ஆகும். பிரெஞ்சு புரட்சியின் முடிக்கப்படாத பணிகள், ஜெர்மன் தத்துவத்தால் முடிக்கப்பட வேண்டும் - ஹெகல்

à®à¯à®°à¯à®®à®©à®¿
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனி பொருளாதார ரீதியாகப் பிளவுண்டு மிகவும் பின்னடைந்து இருந்தது. சமூக, பொருளாதாரப் பிற்போக்குத் தனத்தில் உழன்று கொண்டிருந்தது. ஹெகல் வாழ்ந்தக் காலம், ஜெர்மனிக்கு என்று தனியாக ஓர் அரசு இல்லாத காலமாகும். ஜெர்மனி, 1815 வரையிலும் ரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாக மட்டும் இருந்தது. ரோமானியப் பேரரசு, சிதறுண்டுக் கிடந்த சுமார் 300 பகுதிகளால் இணைக்கப்பட்ட ஒரு பேரரசாகும். அவற்றுக்குள் ஒற்றுமையில்லை. பிராந்தியரீதியில் ஜெர்மனி பல நாடுகளின் ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்தது. வடக்கில் இங்கிலாந்தும், மேற்கில் பிரான்சும், கிழக்கில் ஏகாதிபத்திய ருஷ்யாவும், தெற்கில் ஆஸ்திரிய-ஹங்கேரியும் அதிகார மையங்களாக இருந்தன. இந்த அதிகார மையங்களின் இராணுவங்கள், ஜெர்மனியின் குறுக்கும், நெடுக்குமாகப் பயணித்தவாறு இருந்தன. அப்போது ஜெர்மனிக்கு உதவ யாருமில்லை. 1815 இல் ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர், வியன்னா காங்கிரசில் 38 பகுதிகளை உள்ளடக்கிய ஜெர்மானியக் கூட்டரசு உருவாக்கப்பட்டது.
இங்கிலாந்தும், பிரான்சும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் பெரிய அளவில் ஓர் அறிவியல் மரபைத் தன்னகத்தே கொண்டிருந்தன. ஆனால் ஜெர்மனி, அத்தகைய ஓர் அறிவியல் மரபை அப்போது பெற்றிருக்கவில்லை. மேலும் இங்குச் சமூகம், தனிநபர், பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனைகள் வளர்ந்து இருக்கவில்லை. பிரஞ்சு மற்றும் பிரிட்டனைச் சார்ந்த சிந்தனையாளர்கள் அறிவியல் ஆய்வின்மூலம் பிரபஞ்சத்தின் விதிகளைக் கண்டறிய முடியும் என்று கூறினர். இதன்மூலம் பிரபஞ்சத்தில் தனிநபரும், சமூகமும் ஒற்றுமையாக வாழமுடியும் என்றும், மானுடம் விடுதலைப் பெறவியலும் என்றும் நம்பினர். ஆனால் ஜெர்மானியர்கள் இத்தகைய சிந்தனை மரபைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இவர்கள் வரலாற்றுச் சிந்தனையில் மேம்பட்டவர்களாக இருந்தனர். இவர்களைப் பொருத்தவரை வரலாறு என்பது சமூக நிகழ்வுகளின் தொடர் நிகழ்ச்சி போக்காகும்
18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறிவொளி இயக்கம் இங்கிலாந்திலும் பிரான்சிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஆனால் அது ஜெர்மனியில் குறைந்தளவே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோலப் பிரிட்டன் மற்றும் பிரஞ்சு அறிவொளி இயக்கத்தை ஒப்பிடும்போது ஜெர்மனிய அறிவொளி இயக்கம் பிற்போக்கானதாக இருந்தது. மேற்கத்திய அறிவொளி இயக்கம் மானுட இனத்தை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. ஆனால் ஜெர்மானியச் சிந்தனை மரபு மனிதனுக்கான மாண்பை உயர்த்திப் பிடித்தாலும், ஜெர்மானிய ஆன்மாவையே கொண்டாடியது. மேற்கத்திய அறிவொளி இயக்கம் பிரபஞ்சக் கோட்பாட்டில் திளைத்திருக்க, ஜெர்மானிய அறிவொளி இயக்கம், மரபுசார்ந்த தேசியத்திற்கு ஏங்கி நின்றது.
இந்த அறிவொளி இயக்கம் (enlightment) சில சிறப்பியல்புகளைக் கொண்டதாக இருந்தது. அவை 1) அறிவு என்பது மனிதனின் மிக முக்கியமான மற்றும் நேர்மறையான திறனாகும், 2) பகுத்தறிவின்மை மற்றும் அறியாமை ஆகியவற்றிலிருந்தும், பழமையானவற்றிலிருந்தும், பிடிவாதமான தன்மையிலிருந்தும், மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபட அறிவு உதவுகிறது.
ஜெர்மன் வரலாற்றில், வடக்கு ஜெர்மன் தாராளவாதம் மற்றும் தெற்கு ஜெர்மன் தாராளவாதம் என்ற இரண்டும் போக்குகள் இருந்தன. முதலாம் நெப்போலியன், ஒரு தாராளவாதச் சீர்திருத்தவாதி என்று பாராட்டப்பட்டவர். நெப்போலியன் அறிவொளி சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். ஏனென்றால் நெப்போலியன், பிரான்சில் முற்போக்கான கொள்கைகள் அமுல்படுத்தினார். பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து, ஜெர்மனியை விடுவித்த 1813 ஆம் ஆண்டில் நடைபெற்ற விடுதலைப் போர்களில் அவர் ஒரு சாம்பியனாக இருந்தார்.
1815 இல் ரோமானியப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர், வியன்னா காங்கிரசில் 38 பகுதிகளை உள்ளடக்கிய ஜெர்மானியக் கூட்டரசு ஒன்றை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. இருந்த போதிலும், விடுதலைப் போர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஜெர்மன் ஐக்கியத்தின் கனவுகள், வியன்னாவின் காங்கிரஸில் நீடித்து இருக்கவில்லை. ஜெர்மனி, இரண்டு பெரிய முடியாட்சிகளான பிரஷ்யா, ஆஸ்திரியா மற்றும் சிறிய துணை இராச்சியங்களுக்கிடையில் துண்டு துண்டாக்கப் பட்டன.
‘பிரஷ்யச் சீர்திருத்த இயக்கம்’ பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஸ்ஸியாவின் ஆரம்பத்தில் உருவான அரசியலமைப்பு, நிர்வாக, சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக விளங்கியது. கார்ல் ஃப்ரீஹெர் வோம் ஸ்டீன் மற்றும் கார்ல் ஆகஸ்ட் வான் ஹார்டன்பெர்க் ஆகியோர் இதைத் துவக்கி வைத்தனர். எனவே ‘ஸ்டீன்-ஹார்டன்பெர்க் சீர்திருத்தங்கள்’ என்று இது அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், ஹென்ரிச் வான் ட்ரெயிட்ச்கே போன்ற ஜெர்மன் வரலாற்றாசிரியர்கள் இத்தகைய சீர்திருத்தங்களை ஜெர்மனியின் ஐக்கியம் மற்றும் ஜேர்மன் பேரரசின் அடித்தளத்திற்கான முதல்படியாகக் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியில் தேசியவாத விருப்பங்கள் தோல்வியை அடைந்ததால், அதன் விளைவாக உள்நாட்டிற்குரிய சீர்திருத்தங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. அதனால், ‘ஸ்டீன் மற்றும் ஹார்டன்பெர்க்கின்’ சகாப்தம் முடிந்துவிட்டது.
பொதுவாக ஜெர்மனியானது அப்போது உள்நாட்டு அரசியல் பழமைவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு லூத்தரன் மற்றும் கால்வினிசப் பழமைவாதிகள் ஆதரவு அளித்தனர். இருப்பினும், ஜெர்மன் பிராந்திய ஒருங்கிணைப்பு நடக்கவில்லை. ஆயினும்கூட, 1830 ஆம் ஆண்டுகளில் பிரஸ்ஸியாவிலும், தெற்கு ஜெர்மனியிலும் ‘ஜெர்மன் தாராளமயப் போக்கு’ இன்னமும் கனன்று கொண்டிருந்தது. ஜெர்மனியைப் பொருத்தவரை, ஜெர்மனியமயமாக்கல் மிக முக்கியமான தேவையாக இருந்தது.
ஜெர்மானியமயமாக்கல் என்பது பரவலாக்கப்பட்ட முடியாட்சி இராச்சியங்களை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு தேசிய ஆன்மாவை வைக்க விரும்பியது. ஜெர்மானியமயமாக்கல் என்பது ஒரு தேசிய உணர்வைக் குறித்தது. இது ஒரு ஜெர்மன் தேசிய அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது இரண்டு போக்குகளை உள்ளடக்கியதாக இருந்தது. முதலாவது வட ஜெர்மன் தாராளமயப் போக்கு, இரண்டாவது தென் ஜெர்மன் தாராளமயப் போக்கு ஆகியன. பிரஷ்யாவால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட ‘வட ஜெர்மன் தாராளமயம்’ (North German Liberalism), அதன் தத்துவப் பாரம்பரியத்தின் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பிரஷ்யாவின் வளமான தத்துவ மரபுகள் ஜெர்மானியை முன்னணிக்குக் கொண்டுவந்தன.
ஜெர்மானியமயமாக்கலின் ஆதாரமாகத் தத்துவமாக ஹெகலியம் திகழும் என்று கருதப்பட்டது. ஆனால் ஜெர்மனியமயமாக்கம், ஒரு எதிர்மறை அம்சத்தைக் கொண்டதாக இருந்தது. அது பிரெஞ்சு கலாச்சார உள்ளுணர்வை ஜெர்மனியிலிருந்து விலக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதாவது, பொருள்முதல்வாதம், பகுத்தறிவுவாதம், புரட்சிகர அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் தாயகமாகப் பிரான்ஸ் இருந்தது. பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் எந்தவொரு ஊடுருவலையும் தடுக்கும் ஒரு தேசிய தடையைக் கட்டியெழுப்ப ஜெர்மனிமாக்கத்தைச் சிலர் முன்னெடுத்தனர். ஜெர்மனியமயமாக்கலின் மற்றொரு ஆபத்தான அம்சம், ஐரோப்பிய முன்னேற்றங்களிலிருந்து ஜெர்மனியைக் கலாச்சார ரீதியாகத் தனிமைப்படுத்தியதாகும். ‘தென் ஜெர்மன் தாராளமயம்’ (South German Liberalism) முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், அது ஒரு தேசிய உணர்வைக் கொண்டிருக்கவில்லை.
ஜெர்மன்மயமாக்கத்திற்கான ஓர் அரசு, ஒரு தேசம் ஆகியவற்றை வரையறுக்கக்கூடிய ஒரு தத்துவப் பாரம்பரியம் அதற்கு இல்லை. ஜெர்மன் ஐக்கியத்தை நோக்கிய இயக்கங்கள் யாவும் ஸ்தம்பித்திருந்த சூழ்நிலையில், 1830 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இதே ஆண்டுதான், ஜெர்மனியின் சமகால வரலாற்றின் தொடக்கமாகக் கருதப்பட்டது. ஏனெனில் இது உள்நாட்டுச் சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை ஆதரித்தது. இறுதியாக, போர்பன் சார்லஸ் எக்ஸ் தூக்கியெறியப்பட்டார். ஏங்கல்ஸ் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானியத் தாராளமயச் சீர்திருத்த வரலாற்றை மூன்று காலக் கட்டங்களாகப் பகுத்தார். முதல் காலம், ஃபிரடெரிக் தி கிரேட் சகாப்தம். இரண்டாவது காலம், விடுதலைப் போர்களின் சகாப்தம். மூன்றாவது சகாப்தம், 1830 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சியால் மீண்டும் உயிர் பெற்றது. முதல் சீர்திருத்தத்தின் இரண்டு கட்டங்கள், முடியாட்சியை மீட்டெடுத்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. துரதிர்ஷ்டவசமாக, மூன்றாவது மறுபிறப்பும், ஒரு பழமைவாத எதிர்வினையால் சிதைக்கப்பட்டது. இந்த இரு நாடுகளையும் கடந்து செல்லும் அறிவார்ந்த பண்பாடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. ஜெர்மனியில் அரசியல் சீர்திருத்தம் பிரெஞ்சுச் சிந்தனையோ, பிரெஞ்சு அரசியல் மாதிரிகளோ இல்லாமல் வெற்றிபெற முடியாது என்று கருதப்பட்டது.
இவ்வாறாக, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜெர்மனி, அதன் பொருளாதார மற்றும் அரசியல் பின்தங்கிய தன்மையைக் கடந்து, ஒரு முதலாளித்துவப் புரட்சியை நெருங்கியது; பிரான்சில் இருந்ததைப் போலவே, ஜெர்மன் சமூக பொருளாதாரப் புரட்சியானது ஒரு தத்துவ அடிப்படையை உருவாக்கியது.
இயற்கை மற்றும் சமூக அறிவியலின் சாதனைகள், மரபுரீதியான ஜெர்மன் தத்துவத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. வேதியியல் மற்றும் இயற்பியல் போன்ற துறைகள் உருவாகத் தொடங்கின உயிரினம் சார்ந்த ஆய்வு கணிசமான முன்னேற்றத்தை அடைந்தது. கணிதத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள், இயற்கையின் நிகழ்முறைகளைத் துல்லியமான அளவில் புரிந்து கொள்ள உதவின. சுற்றுப்புறச் சூழலால் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை நிலைப்படுத்துவதற்கான லாமர்க்கின் கோட்பாடு - அதாவது வானியல், புவியியல் மற்றும் கருவியல் கோட்பாடுகள், மனித சமூகம் குறித்தக் கோட்பாடுகள் - முன்னணிக்கு வந்தன. இதன் மூலம் தவிர்க்க முடியாத வகையில், வளர்ச்சிப் பற்றிய கருத்தும், எதார்த்தத்தைப் பற்றிய அறிதல் முறையும் உருவாயின. இந்தப் பின்னணியில், ஜெர்மனி தனது தத்துவத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டது.
18-ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெருமளவுக்கு இயக்கவியல் ரீதியானதாகவும் (Mechanistic), இயங்காவியல் ரீதியானதாகவும் (Metaphysical) இருந்தது. ஏனென்றால் அந்தக் காலத்தில் எல்லா இயற்கை விஞ்ஞானங்களுள் எந்திரவியல் (Mechanics) மட்டுமே வளர்ச்சிப் பெற்றிருந்தது - எங்கல்ஸ்
மெடாபிசிக்ஸ் (Metaphysics) என்பது மிகவும் பழமையான தத்துவப் போக்காகும். வரலாற்றில் இந்தப் போக்கைக் குறிக்கும் சொல்லானது, பல அர்த்தங்களைத் தாங்கி வந்திருக்கின்றது. இது பௌதீகத்திற்கு அப்பால் இருக்கின்ற விசயங்களைக் குறித்துப் பேசும் தத்துவப் போக்காக இருந்தது. இது ‘மீமெய்யியல்’ என்று அழைக்கப்பட்டது. இதை ‘மாறாநிலைவாதம்’ என்றும், ‘இயக்க மறுப்பியல்’ என்றும், ‘இயங்காவியல்’ என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இது அணுகுமுறைச் சார்ந்த தத்துவமாகும்.
இயங்காவியல் அணுகுமுறை, வரலாற்று ரீதியாக பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளது. பொதுவாக, இயங்கியலுக்கு எதிரான பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மெடாபிசிக்ஸ் என்பது ஒருதலைப்பட்சமான மற்றும் அருவமானப் பண்புகளைக் கொண்டது. அது, முழுமையில் இருக்கும் கூறுகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை முற்றொருமையாக்க முனைகிறது. சான்றாக, ஹெராக்ளிட்டஸ் இருப்புக்கான ஓர் அம்சத்தை மட்டும் வலியுறுத்தினார். அதாவது பொருட்களின் மாற்றம் குறித்துப் பேசினார். இவற்றை சோஃபிஸ்டுகள் முற்றிலும் சார்புத்தன்மைக் கொண்டதாக விளக்கினர். அதைப் போல, எலிய தத்துவவாதிகளும் ஹெராக்ளிட்டசின் கொள்கையை விமர்சித்தனர். அவர்கள் இருப்பு என்பது நிலைத்தத் தன்மை

஠ரிஸà¯à®à®¾à®à®¿à®²à¯
கொண்டது என்று கூறினர். இவர்கள் மாறாதது என்ற மற்றொரு தீவிரத்தன்மைக்குச் சென்றனர். இவ்வாறாக, கிரேக்கத் தத்துவ வரலாற்றில், சில தத்துவவாதிகள் உலகைப் பாய்ச்சலில் இருப்பதாகக் கண்டனர். இதற்கு மாறாக, மற்ற சிலர், அதை அசையாதப் பொருளாகக் கண்டனர்.
அதையடுத்து, அரிஸ்டாடில் என்ற தத்துவ அறிஞரிடமும் இத்தகையப் போக்கு இருந்தது. பிளேட்டோவின் ‘வடிவங்கள்’(Forms) பற்றிய தத்துவத்தை அளித்தார். இதை நிராகரித்துதான், அரிஸ்டாட்டில் வழங்கிய மெட்டாபிசிக்ஸின் தொடக்கப் புள்ளியாகும். பிளேட்டோவின் கோட்பாட்டின்படி, பொருள்கள் மாறக்கூடியவை, ஆனால் அந்த மாற்றங்கள் உண்மையானவை அல்ல; மாறாக, இத்தகைய கருத்து, நிரந்தரத்தன்மை மற்றும் மாறாத வடிவத்துடன் ஒத்திருக்கின்றன. மேலும் இந்த வடிவத்தை அறிவால் மட்டுமே உணர முடியும். இந்த உலகில் அழகாக இருப்பதாக உணரப்பட்ட ஒரு பொருள், உண்மையில் அழகான வடிவத்தின் ஒழுங்கற்ற வெளிப்பாடாகும். இந்தக் கோட்பாட்டிற்கு எதிராக, அரிஸ்டாட்டில் தனது வாதங்களை முன்வைத்தார். பிளேட்டோவின் கருத்துக்களைக் கவிதைத்தனம் நிறைந்தவை, ஆனால் அவை வெற்று மொழிகள் என்று அவர் நிராகரித்தார். அரிஸ்டாட்டிலின் முதல் தத்துவம் மெட்டாபிசிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. இது இருப்புநிலைப் பற்றியும், அதன் அருவமான குணங்கள் பற்றியும் ஆராயும் இயலாக உருவானது. ஒரு விஞ்ஞானி என்ற முறையில் அரிஸ்டாடில் பொருள் உலகின் யதார்த்தத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். அரிஸ்டாடிலின் கருத்துக்கள்தாம் பல நூற்றாண்டுகள் மிகவும் செல்வாக்குச் செலுத்தி வந்தது.
நவீன அறிவியல் உலகத்தில் இயங்காவியல் இன்னொரு வடிவத்தை எடுத்துக் கொண்டது. உண்மையான இயற்கை விஞ்ஞானம் 15-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கியது. தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல், இயற்கை சார்ந்த வேறுபட்ட நிகழ்வுப் போக்குகளையும், பொருள்களையும் திட்டவட்டமான இனங்களாக வகைப்படுத்தல். அங்ககப் பொருள்களின் அகநிலைக் கட்டமைப்பை அவற்றின் பன்முக வடிவங்களிலும் நுணுகி ஆய்தல் ஆகிய அணுகுமுறைகளை இயற்கை விஞ்ஞானம் கொண்டிருந்தது.
ஆனால், இந்த வகை ஆய்வுமுறையானது, இயற்கைப் பொருள்களையும் நிகழ்வுப் போக்குகளையும், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான முழுமையுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி நோக்கும் பழக்கத்தையும், அவற்றின் இயக்கத்தில் அல்லாது, ஓய்வான நிலையில் அவை அடிப்படையில் மாறிகள் (variables) என்ற நிலையில் அல்லாது, மாறிலிகள் (constants) என்ற நிலையில், வாழ்வில் அல்லாது, அவற்றின் மரணத்தில் வைத்து நோக்கும் பழக்கத்தையும் மரபுரிமையாக நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. அது ஒரு குறுகிய, இயங்காவியல் சிந்தனைப் பாங்கினைத் தோற்றுவித்தது என்று எங்கல்ஸ் கூறினார்.
அக்காலக்கட்டத்தில் தோன்றியப் பொருள்முதல்வாதக் கோட்பாடுகள் யாவும், கெப்லர், கலிலியோ, நியூட்டன் போன்றவர்கள் அறிவியல் துறையில் கண்டெடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகளையும், கருத்துக்களையும் அடியொற்றியே இருந்தன. உயிரியல் துறையில் இன்னும் பரிணாமவாதக் கோட்பாடு முழுமையாக வளரவில்லை. இதன் விளைவாக இயற்கைப் பொருள்களிலும், அவற்றின் இயக்கங்களிலும் எழுகின்ற மாற்றங்கள் யாவும் வெறும் அளவு மாற்றங்களே என்ற கருத்தே அப்போது மேலோங்கி இருந்தது. இத்தகைய கண்ணோட்டமே, சில நூற்றாண்டுகள் வரை தொடர்ந்தது.

நியà¯à®à¯à®à®©à¯
சொல்லப் போனால் வான்மண்டல, பூமண்டலச் சடப்பொருள்களின் எந்திரவியல் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருந்தது. சுருங்கச் சொன்னால், ஈர்ப்பு சக்தியின் (gravity) எந்திரவியல் மட்டுமே உச்சத்தில் இருந்தது. வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற அறிவியல்கள் கரு நிலையில் இருந்தது. அவை, முற்றிலும் எந்திரவியல் அடிப்படையிலான காரணங்களாலேயே விளக்கப்பட்டன. டெக்கார்ட்டேவைப் பொருத்தவரை விலங்கு என்பது ஓர் எந்திரம். அதைப் போலவே பதினெட்டாம் நூற்றாண்டுப் பொருள்முதல்வாதிகளுக்கு மனிதன் ஓர் எந்திரமாக தென்பட்டான் என்று எங்கல்ஸ் கூறினார். இவ்வாறாக, அனைத்துத் துறைகளிலும் எந்திரவியல் பார்வையே நிறைந்திருந்தது. இது தத்துவத் துறையிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.
இயக்கவியலும், கணிதவியலும் உலகளாவிய ஒன்றாகக் கருதப்பட்டன. இதுதான் அப்போது நிலவிய மிகவும் முன்னேறிய விஞ்ஞானங்களின் நிலைப்பாடாகும். அந்தக் காலத்தைச் சார்ந்த சிந்தனையாளர்கள் இயக்கவியலை முழு பிரபஞ்சத்தில் இருக்கும் மர்மங்களின் திறவுகோலாகக் கண்டனர்.
மேலும் இயற்கை என்பது வரலாற்றின் ஊடே வளர்ந்தது. அதற்குக் காலத்திற்கேற்ற வரலாறு உண்டு என்னும் தெளிவு அப்போது இல்லை. உலகங்கள், பொருள்கள், அவற்றின் இயக்கங்கள் யாவும் ஒன்றோடொன்றுத் தொடர்புக் கொண்டவை, ஒன்றோடொன்று வினைபுரிபவை, ஒன்று மற்றொன்றைச் சார்ந்து இருப்பவை போன்ற கருத்தோட்டங்கள் தோன்றவில்லை. அந்நிலையில் பொருள்களையும், அவற்றின் இயக்கங்களையும், செயல்பாடுகளையும் அந்தந்தத் துறைக்கு மட்டுமே உரியவையாகக் கருதி, தனிமைப்படுத்தி ஆராய்கின்ற போக்கே இருந்தது. இயக்கவியல் விதிகளை உயிரியல் துறைகளின் மீது செயற்கையாகத் திணிக்கின்ற நிலையே இருந்தது.
இருந்தபோதிலும், இயந்திர முறையின் பயன்பாடு, பௌதிக உலகத்தை அறிதலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம். இயற்கையான நிகழ்வுகளின் இயந்திரரீதியான கண்ணோட்டம், நியூட்டனின் கண்டுபிடிப்புகளின் சக்திவாய்ந்த செல்வாக்கால் பெரிதும் பலப்படுத்தப்பட்டது, ஏனெனில் அவர் முழுமையான கணித ஆதாரத்தைக் கொண்டு, எந்திரவியல் ரீதியிலான காரணத்தை (mechanical causality) நிறுவினார். இருப்பினும், எந்திரவியலுக்கு இயக்கம் மட்டுமே தெரியும். ஆனால் அதற்கு வளர்ச்சியைப் பற்றித் தெரியாது. அதனால்தான், அப்போதைய தத்துவவாதிகள் பயன்படுத்தும் சிந்தனை முறையானது இயங்காவியல் தன்மைக் கொண்டதாக இருந்தது.
Educational & Professional | 15 Chapters
Author: Anna. Nagarathinam
Support the author, spread word about the book to continue reading for free.
HEGELUM MARXUM
Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}
{{ (txt.comment_text.length >= 250 ) ? txt.comment_text.substring(0,250) + '.....' : txt.comment_text; }} Read More
{{ txt.comment_text }}
{{txt.timetag}} {{(txt.comment_like_count>0)? txt.comment_like_count : '' }}{{x1.username}} : {{ (x1.comment_text.length >= 250 ) ? x1.comment_text.substring(0,250) + '.....' : x1.comment_text; }} Read More
{{x1.comment_text}}
{{x1.timetag}} {{(x1.comment_like_count>0)? x1.comment_like_count :''}}{{x2.username}} : {{ (x2.comment_text.length >= 250 ) ? x2.comment_text.substring(0,250) + '.....' : x2.comment_text; }} Read More
{{x2.comment_text}}
{{x2.timetag}} {{(x2.comment_like_count>0)?x2.comment_like_count:''}}