95 Views

Ithazhthadam

Literature & Fiction | 19 Chapters

Author: Gavudham Karunanidhi

95 Views

Ithazhthadam is an excellent and matured love story  which makes the readers to feel a fresh breeze in their minds.

Chapter - 1

சதீஷ் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். குளிர் நரம்பில் ஊடுருவ அருகில் கை கால்கள் பரப்பியபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தண்டபாணியைப் பார்த்தான்.

‘எட்டி உதைக்கலாமா?’ மனதில் தோன்றிய எண்ணத்தை எண்ணி அவனுக்கு சிரிப்பு வந்தது. மணி பார்த்தான். அதிகாலை 4.30 AM. இதற்கு மேல் எங்கு தூங்குவது?

பால்கனிக்கு வந்தான். வண்ண விளக்குகளில் பனிப்பொழிவு பெங்களூருக்கு புதுவித எழிலைக் கொடுத்திருந்தது.

நின்று ரசித்தான்.

சதீஷ் தண்டபாணி இருவரும் நண்பர்கள். ரூம் மேட் கள். ரூம் மேட்கள் ஆனதற்குப் பின் நண்பர்கள் ஆனவர்கள்.

சதீஷ்க்கு சொந்த ஊர் ஈரோடு. கொல்லம்பாளையம். லோட்டஸ் ஹாஸ்பிடலுக்குப் பக்கத்தில் வீடு. அப்பா ஆறுமுகம் ஆசிரியர். ஒரு தங்கை லாவண்யா பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறாள். அம்மா சாரதா.

கடந்த நான்கு வருடங்களாக பெங்களூர் வாசம். ராஜாஜி நகரில் நான்காவது மாடியில் தண்டபாணியுடன்.

சதீஷ் பணிபுரிவது மல்லேஸ்வரத்தில்.

தண்டபாணிக்கு டின் ஃபாக்டரிக்குப் பக்கத்தில். வேலை.

ஜெர்கின் அணிந்தும் குளிர் ஊடுருவியதில் பற்கள் மெதுவாக தந்தியடித்தன.

ஜாகிங் போலாமா..ஆறு மணி ஆகட்டும் என்று யோசித்தான்.

சமையலறைக்குச் சென்றான். காஃபி போட்டான். சூடான காபியை எடுத்துக்கொண்டு பால்கனியில் வந்து நின்றான்.

கொஞ்ச நாட்களாக அவனுக்கு வாழ்க்கை போர் அடித்த மாதிரி உணர்ந்தான்.

தினசரி எழுந்து பணிக்குச் சென்று இரவு திரும்பி எதையாவது சமைத்து சாப்பிட்டு தூங்கி.. மீண்டும் மறுநாள் அதே சுழல்வது அவனுக்கு ஓர் இனம் புரியா சலிப்பைக் கொடுத்திருந்தது.

என்ன சலிப்பிருந்தாலும் இருட்டில் இப்படி நின்றுகொண்டு பெங்களூரின் அழகைக் கண்டால் புத்துணர்வாய் உணர்வான்.

இதோ இப்போதும் புதிதாக உணர்ந்தான்.

டிவி போட்டான். டிவி 9 சேனலை க் கொஞ்சம் நேரம் பார்த்தான். வேறு சேனல் திருப்பினான்.

‘அனிஷுகோ யாகோ இந்து.." முங்காரு மழ திரைப்படப் பாடல் . முங்காரு மழ கன்னடத்தில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடிய திரைப்படம். சதீஷும் இரண்டு முறை மெஜஸ்டிக் ஸாகர் தியேட்டரில் பார்த்துவிட்டு கலங்கிய கண்களுடன் வெளியே வந்தவன் தான்.

எல்லா காதலர்களையும் பார்க்கும்போது இவனுக்கும் ஓர் ஏக்கம் இருக்கும். ஆனாலும் இவன் யார் பின்னாலும் சுற்றியதில்லை.

"வர்றவ சரியான நேரத்தில் நிச்சயம் வருவா.." சதீஷ் சொல்ல..

"ஒருவேளை வயசானதுக்கப்புறம் வந்தா என்ன மாப்பிள்ளை பண்ணுவே.." தண்டபாணி கேட்டது நினைவிற்கு வர சதீஷ்க்கு சிரிப்பு வந்தது.

தண்டபாணிக்கு ஆள் இருக்கிறது. கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி.

விஷயம் தெரிந்த முதல் நாள் சதீஷால் நம்ப முடியவில்லை.

"எப்போடா...எப்படிடா.." என்ற இரு வார்த்தைகளை மட்டும் கேட்டு கேட்டு மாய்ந்து போனான்.

கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் சதீஷிற்கு தோன்றும்.

’நல்லாத்தானே இருக்கோம்.. ஏன் நமக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்குது?'

இப்போது எல்லாம் விதிப்படி அமையட்டும் என்று விட்டுவிட்டான்.

யோசித்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் எதார்த்தமாக மணி பார்த்தவன் 6.10 AM என்று காட்ட.. ஜாகிங் ஷூவை எடுத்து மாட்டினான்.

எது எப்படியானாலும் தினசரி ஒரு மணி நேரம் அவன் ஜாகிங் போவதை நிறுத்துவதில்லை.

தண்டபாணிக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவன் எழ ஏழு ஏழரை ஆகும். அதற்குள் சதீஷ் ஜாகிங் முடித்துவிட்டு வந்துவிடுவான்.

சதீஷ் இருக்கும் காம்ப்ளக்ஸ் க்கு.மிக அருகில் ஓர் வனப்பாதை இருக்கிறது. அதில் ஓடினால் அதிக புத்துணர்ச்சி அடைவான். அதில் ஓடுவர் மிகவும் குறைவு. இளைஞர்கள் மட்டும் அதுவும் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தும் பாதை அது.

சதீஷ் படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கினான்.

இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை.

புனித் ராஜ்குமார் மிரட்டலாகப் பார்த்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் போஸ்டரைக் கடந்தான்.

ஐந்து நிமிடங்களில் வனப் பாதையின் நுழைவாயில் வர காட்டு மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தான்.

இந்த வனப்பாதை தண்டபாணி தான் அறிமுகப்படுத்தி விட்டான்.

ஒருநாள் மாலை வேளையில் சதீஷ் வேலை முடித்து சீக்கிரமாக வந்த ஒரு பொழுதில்

தண்டபாணியும் அவன் காதலியும் இங்கிருந்து வெளியே வந்ததைப் பார்த்து திகைத்து நின்றான்.

அப்போதுதான் சதீஷ்க்கு இப்படி ஒரு பாதை இருப்பதே தெரிந்தது.

அதிகாலையில் நடைப்பயிற்சி செய்ய இளைஞர்கள் இதைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

அன்றிலிருந்து இந்தப் பாதையை சதீஷ் காலையில் ஜாகிங் ஓடவும் தண்டபாணி மாலையில் காதல் வளர்க்கவும் பயன்படுத்தத் தொடங்கினர்.

இருட்டு இன்னும் முழுதாக விலகவில்லை. சதீஷ் இன்னும் சற்று நேரம் பொறுத்து வந்திருக்கலாமோ ..யோசித்தவன்

சரி வந்ததிற்குப் பின் என்ன யோசனை என்றவன் குனிந்து ஷூ லேஸை சரியாகக் கட்டிக்கொண்டான்.

இருட்டு முதலில் மசமசப்பாய் தெரிந்தாலும் கண்களுக்குப் பழகியது. யாரும் இல்லை..நான் மட்டும் தான் போல் இன்று.. எண்ணியவன் ஓடத் தொடங்கினான்.

குளிர் காற்று முகத்தில் அறைந்தது சுகமாய் உணர்ந்தான்.

காட்டுமலர்களின் நறுமணத்தில் வீட்டில் அம்மா தோட்டத்தில் வைத்த மலர்களின் நறுமணத்தை கண்கள் மூடி உணர்ந்தான்.

சட்டென்று யார் மீதோ மோதிக்கொண்டான்.

எதிரில் யாரோ வந்திருக்கின்றனர். கவனிக்கவில்லை. சுதாரிக்கும் முன் எதிரில் வந்தவருடன் சேர்ந்து உருண்டான். அப்போது தான் தெரிந்தது எதிரில் வந்தது ஓர் இளம் பெண் என்பது.

சுதாரிக்க முனைந்த இருவரும் முடியாமல் இன்னும் கீழே பள்ளத்திற்கு உருண்டனர்.

அந்தக் குளிரில் அந்தப் பெண் அவன் மேலே உருண்டது அவனுக்கு கதகதப்பா இருக்க மகிழ்ந்த அவன் மனதை மனசாட்சி தட்டிக் கேட்க முயன்று முடியாமல் ஊமையாகியது.

ஒரு கையை கீழே வைத்து சமாளித்த சதீஷின் முகம் மேல் அப்பெண்ணின் முகமும் இருக்க இருவரும் எதிர்பாராத அந்த நொடியில் இருவரின் இதழ்களும் முத்தமிட்டுக்கொண்டன.

Like what you read?
{{global.chaps[0].like_count}} {{global.chaps[0].like_text}}

Chapter - 2

சதீஷ் சுதாரித்து எழுந்தான். கீழே விழுந்திருந்த அந்தப் பெண்ணுக்குக் கை கொடுக்க அவள் அவன் கரம் பற்றி எழுந்தாள். தன் உடையில் படிந்த மண்ணைத் தட்டி விட்டாள். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சதீஷ்.

தலைமுடியை லூஸ் ஹேர் ஸ்டைலில் விட்டிருந்தாள். லைட் ப்ளூ கலர் டி ஷர்ட் திக் ப்ளூ ஜீன்ஸ். கால்களில் ஷூ.

“ஸாரி..நான் கவனிக்கலை..” என்றவளை கண்கள் விரியப் பார்த்த சதீஷ் மலர்ந்து போய் கேட்டான்.

“நீங்க தமிழா?”

“இல்லைங்க..பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்கேதான்.. அப்பா கிருஷ்ணகிரி. அம்மா பெங்களூர். அதான் தமிழ் தெரியும்..” புன்னகையுடன் சொன்னவள்

“பார்ப்போமா?” என்று.விடை கொடுத்தாள்.

சதீஷ் உள்ளுக்குள் திணறினான்.

“ஒரு நிமிடம் மேடம்..” கூப்பிட திரும்பினாள்.

“உங்க பேர் என்ன?”

Like what you read?
{{global.chaps[1].like_count}} {{global.chaps[1].like_text}}
Like what you read?
{{global.chaps[2].like_count}} {{global.chaps[2].like_text}}
Like what you read?
{{global.chaps[3].like_count}} {{global.chaps[3].like_text}}
Like what you read?
{{global.chaps[4].like_count}} {{global.chaps[4].like_text}}
Like what you read?
{{global.chaps[5].like_count}} {{global.chaps[5].like_text}}
Like what you read?
{{global.chaps[6].like_count}} {{global.chaps[6].like_text}}
Like what you read?
{{global.chaps[7].like_count}} {{global.chaps[7].like_text}}
Like what you read?
{{global.chaps[8].like_count}} {{global.chaps[8].like_text}}
Like what you read?
{{global.chaps[9].like_count}} {{global.chaps[9].like_text}}
Like what you read?
{{global.chaps[10].like_count}} {{global.chaps[10].like_text}}
Like what you read?
{{global.chaps[11].like_count}} {{global.chaps[11].like_text}}
Like what you read?
{{global.chaps[12].like_count}} {{global.chaps[12].like_text}}
Like what you read?
{{global.chaps[13].like_count}} {{global.chaps[13].like_text}}
Like what you read?
{{global.chaps[14].like_count}} {{global.chaps[14].like_text}}
Like what you read?
{{global.chaps[15].like_count}} {{global.chaps[15].like_text}}
Like what you read?
{{global.chaps[16].like_count}} {{global.chaps[16].like_text}}
Like what you read?
{{global.chaps[17].like_count}} {{global.chaps[17].like_text}}
Like what you read?
{{global.chaps[18].like_count}} {{global.chaps[18].like_text}}

{{user_data.book_status}}

Literature & Fiction | 19 Chapters

Author: Gavudham Karunanidhi

Support the author, spread word about the book to continue reading for free.

Ithazhthadam

Comments {{ insta_features.post_zero_count(insta_features.post_comment_total_count) }} / {{reader.chap_title_only}}

Be the first to comment
Reply To: {{insta_features.post_comments_reply.reply_to_username}}
A-
A+
{{global.swiggy_msg_text}}