Share this book with your friends

Aanmeega Nivaaranam / ஆன்மீக நிவாரணம் அத்தியாயம் ஃபாத்திஹாவின் விரிவுரை

Author Name: Mohamed Ismail | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

அத்தியாயம் அல் ஃபாத்திஹா - இதன் பெயருக்குரிய பொருளின்படி, இது திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகும். சுருக்கமாக, அதே நேரத்தில் கருத்து ஆழம் செறிந்த இந்த அத்தியாயத்திற்கு ஒப்பான எந்த ஒரு அத்தியாயமும், இஸ்லாத்திற்கு முந்தைய வேதங்களில் இறக்கப்பட்டதில்லை. அனைத்து முஸ்லிம்களும், குறைந்து ஒரு நாளில் 17 தடவைகள் இதனை ஓதியாக வேண்டும். ஏனெனில் ஒரு நாளின் ஐந்து நேரத் தொழுகைளிலும் இதனை ஓதுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அநேக முஸ்லிம்கள் இதனை மனனம் செய்திருப்பர். அரபுலகத்தினர் பல அம்சங்களுடன் கூடிய, விரிவான ஒன்றைக் கூறுகையில், அதனை ‘அதன் தாய்’ என்று கூறுவார். இந்த அத்தியாயத்தையும், அவர்கள் ‘திருக்குர்ஆனின் தாய்’என்று கூறுகிறார்கள். இது முப்பதுக்கும் அதிகமான சிறப்புப் பெயர்களைக் கொண்டு அறியப்படுகிறது என்பது, இந்த அத்தியாயத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆனும் இதனை, ‘திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்’ எனச் சிறப்பிக்கிறது. இது உடல் மற்றும் ஆன்மீக நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது. திருக்குர்ஆனுக்கு ஆழம் காண இயலாத கடல் அளவிற்கு, என்றும் முடிவடையாத விரிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் அதனைத் தேடி அறிந்து கொள்ள வேண்டிய கல்வி இது. அத்தியாயம் அல் ஃபாத்திஹாவின் இந்த விரிவுரையானது, இந்த அத்தியாயத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள விரிவுரைகளில் ஒரு சிறு பகுதிதான். அதிகமானவை விடப்பட்டுள்ளன. மேலும் அதிகமானவை சுருக்கப்பட்டுள்ளன. எனினும், இதன் பொருளின் ஆழத்தையும், நம் அறிஞர்களின் முயற்சியின் எல்லையையும் உணரக்கூடிய வழிக்கு வாசகர்களை எடுத்துச் செல்ல இந்த நூல் உதவும்.  

Read More...
Paperback
Paperback 400

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முஹம்மது இஸ்மாயீல்

இந்நூலின் ஆசிரியர் முஹம்மது இஸ்மாயீல். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறை பேராசிரியாராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டின் ஆரம்பண்ணை என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலத்தில் இருக்கும் பிரபலமான இஸ்லாமிய நூற்களைத் தமது தாய் மொழியாம் தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு பயன் பெறச் செய்வதுதான் இவரது முக்கிய நோக்கம். இவரது படைப்புகள் பல இஸ்லாமியத் தமிழ்ப் பத்திரிகைளில் தொடராக வந்துள்ளன. இவரது படைப்புகள்: “விண்மீன்களின் வாழ்க்கையிலே” (நபித் தோழர்களின் சிறு வரலாற்று நிகழ்வுகள்), “திருக்குர்ஆன் அறிவியல்” (திருக்குர்ஆன் பற்றிய அறிவியல் ஞானம்), “ஷமாயில் திர்மிதி” (முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தோற்றம் மற்றும் குணநலன்கள் திர்மதியின் தொகுப்பு), “சுந்தர நபிகளார்  சிந்திய சிரிப்பு” (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் புன்னகைத்த நிகழ்வுகள்), “துஆ - விசுவாசிகளின் ஆயுதம்” (துஆவின் சிறப்புகள் மற்றும் அதன் ஒழுங்கு முறைகள்), அபு பக்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்கை வரலாறு போன்றவை. மேலும் ஆதில் ஸலாஹியின் “முஹம்மத் ஹிஸ் கேரக்டர் அன்ட் காண்டக்ட்” என்ற ஆங்கில நூல் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்குணங்கள் - நன்னடத்தைகள் பாகம் 1” தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு  இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்டால் 2019ல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Read More...

Achievements

+4 more
View All