Share this book with your friends

Amarar Kalkiyin Azhiyatha Kathai Manthargal / அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள் Ore Ulavial Aayvu / ஓர் உளவியல் ஆய்வு

Author Name: W.R. Vasanthan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பேராசிரியர் கல்கி அவர்களின் கதாபாத்திரங்கள் உயிர்த்தன்மையுடன் , காலத்தால் நினைவிலிருந்து அகலாததாய் இருப்பதற்குக் காரணம் என்ன என்பது பல்லாண்டுகளாக என் சிந்தையைத் துருவிய கேள்வி !

அன்னாரின் இலக்கியப் படைப்புக்களை இந்த வழியில்நுணுக்கமாக ஆராயப் புகுந்தபோது, அறிவியல்வழியில், உளவியல் அணுகுமுறையோடு அவர் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பண்பாக்கம் செய்திருப்பதே முதலில் என்சிந்தையில் இடறிற்று. அமரர் கல்கி அவர்கள் தம் வரலாற்று நாவல்களில் படைத்திருக்கும் மறக்க இயலாத கதாபாத்திரங்களின் பேரில் செய்யப்பட்ட உளவியல் ஆய்வே இது.

ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தவிர்க்க இயலாதவாறு ஒருஉளவியல் அடித்தளம் அமைக்கப்பட்ட மேதைமையை வெளிக்கொணரும் வகையில் இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் வெகுஆழமாக இவ்வாய்வு செய்யப்பட்டது. மேலும் பண்டைய தமிழ்ச் சங்க இலக்கியங்கள், இடைக்காலஇலக்கியங்கள், கம்பஇராமாயணம், மற்றும் பாரதியார் கவிதைகள் இவற்றுடன் கூடிய ஓர் ஒப்பீட்டு ஆய்வாகவும் இந்நூல் அமைந்துள்ளது. 

இவ்விலக்கிய ஆய்வுகள் ஓர் உண்மையைப் புலப்படுத்துகின்றன. காலங்கள் மாறினாலும் மனிதனின் அடிப்படைப் பண்புகள் மாறுவதில்லை என்பதே அது. ஆனால் ஒவ்வொரு மனிதனின் சுவைகளும், விருப்புகளும் மாறுபடுவதற்கு உளவியல் செல்வாக்கும், மரபுவழி நிலைபெற்ற மனச்சாய்வுகளுமே காரணங்களாகின்றன.

கல்கியின் கதாபாத்திரக் கட்டமைப்பு இந்த உளவியல் அடித்தளங்களைக் கொண்டிருப்பதாலேயே அவை என்றும் நிலைபெற்றிருக்கின்றன என்ற இவ் வுண்மைகள் இந்நூலில் கையாளப்பட்டிருக்கின்றன.

இந்நூலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் இடம் பெற்றிருக்கும் நுட்பமான அழகியபடங்கள். கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் தீட்டப்பட்டுள்ளமை.

Read More...
Paperback
Paperback 375

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.ர. வசந்தன்

இந்நூலாசிரியர் வி.ர.வசந்தன் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறவர். இதுவரைஇவரது 200 க்கும் அதிகமான சிறுகதைகள். 4 நாவல்கள், 2 நாடகங்கள், 2 அறிவியல் கட்டுரைத் தொகுப்புகள் நூல்வடிவம்பெற்றுள்ளன, நான்குமுறை தங்கப் பதக்கங்களும் இருமுறை வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் பிறபரிசுகளையும் வென்றவர்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், கிராமியப் பாடல்கள் ஆகியவற்றின் பேரில் ஈடுபாடுகொண்ட இவர் கதம்பம் என்ற இலக்கிய இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார், பேராசிரியர் கல்கியின் பேரில் ஆழ்ந்த அபிமானம் கொண்டிருப்பதோடு அவரது இலக்கியங்களை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தும் வருகிறார்.

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், இந்திய இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் எழுதுவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், தற்போது திருச்சிராப்பள்ளியில் வாழும் இவரது படைப்புகளை முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.

Read More...

Achievements