Share this book with your friends

ANBU ALARUGIRATHU (Novel) / அன்பு அலறுகிறது நாவல்

Author Name: Vindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

எப்பொழுது தூங்கினேனோ, அது எனக்குத் தெரியாது.

⁠ஒரு கனவு; அந்தக் கனவிலே கட்டழகி ஒருத்தி கனிவே உருவாய் வந்து நின்றாள்.

⁠"யார் அம்மா, நீங்கள்?"

⁠விரக்தியுடன் அவள் சிரித்தாள்.

⁠"ஏன் சிரிக்கிறீர்கள்?"

⁠"உண்மையாகவே என்னை நீங்கள் உங்களுடைய அம்மாவாக நினைக்கிறீர்களா?”

⁠"ஆமாம். இந்த உலகத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் நான் என்னுடைய அம்மாவாகத் தான் நினைக்கிறேன்; அதுதான் எங்கள் தமிழ்நாட்டின் பண்புங் கூட!"

⁠"நினைப்பது சரி; அதன்படி நடக்கிறீர்களா?”

⁠"நடக்கிறேன் அம்மா, நடக்கிறேன்!”

⁠உங்களுக்குத் தெரிந்த பெண் ஒருத்தி, உங்களுக்குச் சரிசமானமான வயதுடையவளாக இருந்தால்?"

⁠"அதனாலென்ன, வழிவழியாக வந்துகொண்டிருக்கும் பெண் குலமே தாய்மைக் குலந்தான், எங்களுக்கு!"

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விந்தன்

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி 

Read More...

Achievements

+15 more
View All