Share this book with your friends

Andhikaatrin Eeram / அந்திக்காற்றின் ஈரம்

Author Name: A. KARTIKAINATHAN | Format: Paperback | Genre : Poetry | Other Details

விழிகளுக்குப் புலப்படுகிற படைப்புகளும் காலநடப்புகளும் கவிதைகளுக்குக் கருப்பொருளாகிறது. எண்ணவோட்டங்களை எடுத்தியம்பிட வரிகளுக்குள்ளே பனிப்போர் நடத்தி, தெரிவுகண்டு, சொற்களின் வலிமையால் பொருந்தி வசப்படுத்துகிறது கவிதை.

கவிஞர். ஆ.கார்த்திகைநாதனின் கவிதைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆலோலம் பாடும் அலைகளைக் கடந்து, உலகத்தமிழர்களோடு உறவுப்பாலம் அமைக்கிறது. விடலைப்பருவத்தில் வெளிப்படும் காதல் உணர்வுகளை சில்லு சில்லாகப்பெயர்த்தும், தன்னகத்தே ஊருடுருவிய நினைவுகளைத் தண்டமிழ் சொற்களால் தடம்பார்த்தும், இயற்கையை ஆராதித்தும், செயற்கையை நீவியும், இயல்பை இனங்கண்டும், வாழ்வைப் போற்றியும், நல்வழிக்கு நடைப்பந்தல் அமைத்தும் மனதோடு படியும் அகப்பார்வையால் நம்மைத் தழுவிச்செல்கிறது இந்த ‘அந்திக்காற்றின் ஈரம்’.

 

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆ.கார்த்திகைநாதன்

கவிஞர் ஆ.கார்த்திகைநாதன் அவர்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கல்வித்துறையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாணாக்கர்களின் திறன்களை மேம்படையச்செய்யும் விதமாக தமது அறப்பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். முன்பாக, ‘நந்தவனம்’ (2007 ) வரம்பெற்ற மூக்குத்திகள் (2009) என்ற இரு கவிதைப் படைப்புகளைக் கொணர்ந்து அந்தமான் தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு அணி சேர்த்திருக்கிறார். கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற தமிழவைகளில் பங்கெடுக்கிறார். போர்ட் பிளேயர் அகில இந்திய வானொலியில் ‘இலக்கியச் சோலை’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சங்க இலக்கியத்தில் பொதிந்துள்ள மேன்மையான கருத்துகளை எளிய நடையில் பதிவிட்டு வந்திருக்கிறார். அந்தமான் தமிழர் சங்கம் மற்றும் தமிழ் இலக்கிய மன்றத்தின் உறுப்பினர். சென்னை தமிழ்ச் சங்கத்தின் ‘சாதனையாளர் விருது’ (2018),  நக்கீரர் தமிழ்ச் சங்கத்தின் ‘கலைத்தமிழ் விருது’ (2019) ஆகிய பாராட்டுகளைப் பெற்றுள்ளார் இந்நற்றமிழ் ஆர்வலர்.

Read More...

Achievements

+3 more
View All