Share this book with your friends

APPLE PASI (Novel) / ஆப்பிள் பசி நாவல்

Author Name: Saavi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மேஜைகளும் மற்ற சாதனங்களும் விதவிதமாய்க் குவிந்திருக்க, மேலே சில்க் பங்கா ஒன்று பெரிய ஊஞ்சல் போல ஆடியது.

"அண்ணே!" என்று கூறிய சிங்காரப் பொட்டுவுக்குச் சந்தோஷத்தில் நெஞ்சு விம்மியது. அவனையும் மீறித் தாவிப் போய் பரதன் வேடத்தில் ராமனைக் கட்டிக் கொள்வது போல் தழுவிக் கொண்டான்.

அப்படியே அவன் தோள் மேலே வளைத்துக் கை போட்டுக் கொண்டு யாரும் பார்க்காதபடி அடுத்த அறைக்குள் அழைத் துப் போய் விட்டான்.

"இந்தா சிங்காரம்! நம்மூர் மாதிரி உரக்கப் பேசாதே! நாட்டுப்புறம்னு நினைப்பாங்க! இப்படி உட்காரு. உன்னைக் காக்க வெச்சதுக்குக் காரணம் அவங்களை முதல்லே அனுப்பிச்சுட்டு உன்னோடு சாவகாசமாப் பேசணும்னுதான்."

இன்னும் உணர்ச்சி வசத்தில் இருந்த சிங்காரப் பொட்டு, "அண்ணே, நீங்க இப்படி இவ்வளவு பெரிய ஆளா வருவீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலேதான் நீங்க கல்கத்தா போறதை நான் தடுக்கலை. இப்போ உங்க வாழ்க்கை அடியோடு மாறிப் போச்சு! என் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது... எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க" என்று சொல்லி திடீரென்று முழங்கால் போட்டு சாமண்ணாவின் கால்களைப் பற்றினான்.

"இந்தா! இந்தா! சிங்காரம்! என்ன இதெல்லாம்?" என்று சாமண்ணா, பதற்றத்தோடு கால்களை உயரத்தில் தூக்கிக்கொள்ள, பிடிவாதமாய் அவன் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான் சிங்காரம்.

"உங்ககிட்டே ஒரு முக்கிய சமாசாரம் சொல்லனும் அண்ணே ! அதுக்குத்தான் கல்கத்தா வந்திருக்கேன்!"

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாவி

சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

Read More...

Achievements

+15 more
View All