Share this book with your friends

ARIVIYAL AGARATHI / அறிவியல் அகராதி

Author Name: A. K. Moorthy | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

1.       nitrogen balance - நைட்ரஜன் சமநிலை: இதனை நைட்ரஜன் நடுநிலை என்றும் கூறலாம். ஒர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு. வளருங் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி(+), நோயாளிகளிடத்து எதிர்க்குறி(-). (உயி)

2.       nitrogen cycle - நைட்ரஜன் (வெடி வளிச்) சுழற்சி: இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா) காற்றுவெளி நைட்ரஜனை நிலைப் புடுத்துகின்றன. இந்த வளியைத் தாவரங்கள், உறிஞ்சிப் புரதம் தொகுக்கின்றன. இதை விலங்குகள் உட்கொள்ளும் பொழுது, அது விலங்குப் புரதமாகின்றது. இறுதியாகத் தாவரங்களும், விலங்குகளும் மடிகின்றபொழுது, அவை எளிய நைட்ரஜன் ஊட்டமுள்ள சேர்மங்களாகச் சிதைகின்றன. நிலக்கரி, மரம் ஆகியவை எரிக்கப்படும் போதும், நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்கின்றது. ஆக, உயிர்த் தொகுதிகள் மூலம் நைட்ரஜன் மீண்டும் மீண்டும் சுழல்கிறது. இவ்வாறு பலநிலைகளில் தாவரங்களுக்குக் காற்று வெளி நைட்ரஜன் செல்லுதலும், தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மீண்டும் நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்லுதலுமே நைட்ரஜன் சுழற்சியாகும். இயற்கை நன்கொடைகளில் இதுவும் ஒன்று. (உயி)

3.       nitrogen fixation - நைட்ரஜனை நிலைப்படுத்துதல்: நைட்ரஜன் சேர்மங்களாகக் காற்றுவெளி நைட்ரஜன் மாற்றப்படும் வினை. பா. nítrogen cycle. (வேதி)

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ.கி.மூர்த்தி

பேராசிரியர் அ.கி. மூர்த்தி அவர்கள் அறிவியலை எளிய முறையில் அகராதிகளாக தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொடுத்த கொடையாளர்.

Read More...

Achievements

+15 more
View All