Share this book with your friends

AVAL ORU MOHANAM(Novel) / அவள் ஒரு மோகனம் நாவல்

Author Name: Poovai. S. Arumugam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அலகிலா விளையாட்டுடைய அப்பனே அம்மையப்பன் ஆகிப் பெண்மைக்கு வாழ்த்துரைத்து அனைத்து உலகிற்கும் முன் உரிமை பெற்ற முன் உதாரணம் ஆனான்!

அந்த அறநெறிமுறை மரபினில் உதித்த பாரதி, பாரதத் தமிழ்ச் சமுதாயத்தில், உயிரினைக் காத்து உயிரினைச் சேர்த்து உயிரினுக்கு உயிராய் இன்பமாகி, உயிரினும் ‘பெண்மை’ இனிக்கக் கண்டதில் வியப்பில்லை தான் !

அந்தப் பெண்மைக்குச் சத்தியத்தின் தருமமாகவும் தருமத்தின் உண்மையாகவும், உண்மையின் சத்தியமாகவும் விளங்குகிறாள் ரேவதி-டாக்டர் ரேவதி அவள் சுந்தரக்கிளி மாத்திரமல்லள்; சுதந்திரக்குயிலும் கூட!

ஒர் அதிசயம்!

டாக்டர் ரேவதிக்கு மணமகன் தேவையாம்!

செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பேசின!

ரேவதியின் மருத்துவமனையில் தோழிமார்கள் இருவர் ரேவதியை-ஊகூம், டாக்டர் ரேவதியை விமரிசனம் செய்கின்றனர்.

மஞ்சுளாவுக்கு டாக்டர் ரேவதியைப் பிடிக்காது.

ஆனால், பிருந்தாவுக்கு டாக்டர் ரேவதியென்றால், நிரம்பியதோர் ஈடுபாடு! அவள் சொல்லுவாள்: “டாக்டர் ரேவதின்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்; எப்படியாவது அவங்க திருமணம் நடக்கட்டும்! ரேவதி அம்மாவோட மனப்போக்கே தனி; தனித்தன்மையானது. அதைப் புரிஞ்சுக்கிடாதவங்க, ‘டாக்டர் ரேவதி அகம்பாவம் பிடிச்சவங்க அப்படின்னு சொல்லுவாங்க! நான் அறிஞ்சவரை, ரேவதி-டாக்டர் ரேவதி அன்புக்கு ரொம்ப ரொம்பக் கட்டுப்படுறவங்க! எதிலேயும் எப்பவுமே ஒரு நியாயம் வேணும்னு நினைக்கிறதும் நம்புறதும் எதிர்பார்க்கிறதும் தப்பா?’’

தோழி பிருந்தாவின் இதய ஒலிக்கு இதய ஒளி ஆனவள்தான் ரேவதி-டாக்டர் ரேவதி!

அதிநவீனமானதும், அநீதமானதுமான இன்றையக் கம்ப்யூட்டர் யுகத்திலே பெண் ஒருத்தி ‘மணமகன் தேவை’ என்பதாக நாளேடுகளிலே விளம்பரப்படுத்துவது கொச்சையான செய்தி அல்ல! - 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பூவை.எஸ்.ஆறுமுகம்

பூவை ஆறுமுகம் 1927ஆம் ஆண்டு சனவரி 31ம் நாள் தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தனது கல்வியை முடித்தபிறகு, ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலராக ஆனார். மேலும் “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.

இவர் இருனூற்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறு கதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகமானது, ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகமாகும். இவர் எழுதிய கீதை என்ற நாடகமானது தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All