Share this book with your friends

BHUVANA MOGHINI (Historical Novel) / புவன மோகினி சரித்திரப் புதினம்

Author Name: S. Lakshmi Subramaniam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒரு வேலி நன்செய்நிலம் 165 ரூபாய்க்கு விற்ற, கலம் நெல்லின் விலை பதினோரணாவாக இருந்த பொற்காலம் அவருடையது. மக்கள் குறையின்றி காவிரித்தாயின் மடியில் பயிர் செய்த பொன்விளையும் நாடாகத் தஞ்சைத் தரணி விளங்கிய காலம் அவருடையது. அந்தக் காலக்கட்டத்தில் தான் திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளும், திருவாரூரில் முத்துசாமி தீட்சிதரும், தஞ்சையில் சியாமா சாஸ்திரியாரும், தஞ்சையில் பரதநாட்டியத்துக்கு வடிவம் தந்த பொன்னையா, சிவானந்தம், வடிவேலு சகோதரர்களும் வாழ்ந்து இசையையும் நடனத்தையும் செழிக்கச் செய்தார்கள்.

     அந்தப் பொற்காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்து, தஞ்சையில் நாடகம் பயில வந்த கேரளத்துப் பெண்மணி புவனமோகினியைப் பற்றி இந்தச் சரித்திரப் புதினத்தைப் படைத்திருக்கிறேன். தஞ்சை மண்ணில் வளர்ந்து செழித்த இசை, நடனம், நாடகம், தெருக்கூத்து போன்ற கலைகள் இதன் பின்னரங்கில் வண்ணக்கோலமாக மிளிர்கின்றன.

Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்


     எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இயற்பெயர் ஆர்.சுப்பிரமணியம். இவர் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, நமது சுதந்திர தினத்தன்று இவரது முதல் சிறுகதை ‘காவேரி’ மாத இதழில் வெளிவந்தது.

     ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், தினமணி, கதிர், தீபம், அமுதசுரபி, இதயம் பேசுகிறது, மங்கையர் மலர், ஞானபூமி, மயன், காலைக்கதிர், உங்கள் நலம், ஹெல்த் போன்ற பத்திரிகைகளில் இவரது நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. இவரது சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறுகதைகள், 1500 கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

     கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்களை எழுதியுள்ளார்.

Read More...

Achievements

+15 more
View All