Share this book with your friends

CHILDREN LITERATURE (Rhymes) / குழந்தை இலக்கியம் பாடல்கள்

Author Name: Vaanidasan | Format: Paperback | Genre : Others | Other Details

1. மரக்குதிரை
ஒடாக் குதிரை ஒரு குதிரை!--வீட்டின்
உள்ளே இருக்குது மரக்குதிரை!
காடும் மேடும் ஓடாது!--வாயில்
கடிவாளம் காட்டத் தாவாது!

குனிந்த தலையை நிமிர்த்தாது!--வட்டக்
குளம்புக் காலைத் தாழ்த்தாது!
புனைந்த சேணம் மாற்றாது!--மண்ணில்
புரண்டு சோம்பல் ஆற்றாது!

புல்லும் கொள்ளும் கேட்காது!--கழுத்துப்
பூட்டுக் கயிறும் கேட்காது!
அல்லும் பகலும் கனைக்காது!--தம்பி
ஆட்ட ஆடும் சளைக்காது


2. அகல் விளக்கு
மண்ணால் ஆன விளக்கு
மாடத்(து) அகல் விளக்கு !
எண்ணெய் வார்த்தால் எரியும் !
இல்லை யேல்திரி கரியும்! ⁠

காலை படுத்துத் தூங்கிக்
கண்வி ழிக்கும் மாலை !
மாலை இருந்து காலை
வரையும் எரியும் வேலை! ⁠

தங்கை தூங்கும் போதும்,
தம்பி தூங்கும் போதும்
மங்கி எரிந்து விழிக்கும் !
வந்த இருளை ஒழிக்கும் ! ⁠

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர் வாணிதாசன்

கவிஞரேறு வாணிதாசன் (சூலை 22 1915 - ஆகத்து 7, 1974) புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் 'பாரதிதாசன் பரம்பரை' என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர். இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலூம் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் 'கவிஞரேறு', 'பாவலர் மணி' முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

Read More...

Achievements

+15 more
View All