Share this book with your friends

EKKOVIN KATHAL(Short Stories) / எக்கோவின் காதல் சிறுகதைகள்

Author Name: Kaviyarasu Mudiyarasan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"எக்கோவின் காதல்" என்ற இந்நூல், என் தந்தையார் அவர்களால், 1947 - 48 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். வெறுங் கதைகளாக இல்லாமல் சமுதாயச் சீர்திருத்த நோக்கில் புனையப்பட்டவை இவை. இச்சீர்திருத்தச் சிறுகதைகள், அக்காலத்திய இதழ்கள் பலவற்றில் வெளிவந்தன ஆகும்.1958இல் அச்சு வடிவாயிருந்த இந்நூலுக்கு என் தந்தை எழுதியிருந்த முன்னுரையை அப்படியே கீழே தந்துள்ளேன்

"தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதிக் கொண்டிருந்த என்னைக் கதை எழுதுமாறு நண்பர் அறிவழகன் திசை திருப்பி விட்டார். இது 1947 ஆம் ஆண்டு நடந்தது. இரண்டாண்டுகள் எழுதினேன். அப்போது பல்வேறு இதழ்களில் இக்கதைகள் வெளி வந்தன. சீர்திருத்தக் கருத்துகளுக்கு வலுவூட்ட வேண்டுமென்று கருதிக் கண்ணெதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டு இக்கதைகளைப் புனைந்தேன். மைதாம் அச்சு வடிவம் பெறுகின்றன. பின்னர் இயல்பாகவே என் மனம் விரும்பிக் கொண்டிருந்த கவிதையுலகிற்குத் திரும்பி விட்டேன். அக்கனவுலகம் ஒரு தனி இன்பம் தருவதால், அதனை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றிருந்த என் மொழி நடைக்கும், இன்றுள்ள நடைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணரலாம்."

அன்பன்,
முடியரசன்.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவியரசு முடியரசன்

வீறுகவியரசர் முடியரசன் (இயற்பெயர்: துரைராசு, அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். எனவேதான் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை' என்று போற்றினார். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

Read More...

Achievements

+15 more
View All