Share this book with your friends

En peyar tamizha? / என் பெயர் தமிழா?

Author Name: Prabhakaran | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

அகரக் காப்பியா, ஆலால நிலவன், இசையருவி, ஈரடி வெண்பா, உயிரோவியன்...

""பிரபாகரனை சந்தித்தீர்களா?'' என்று கேட்டபோது, ""தமிழ்ப்பணிக்காக கிளிநொச்சியில் இருந்த 2 வருட காலத்தில் 2 முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பணியை துவக்கிய காலகட்டத்தில் முதன்முறையாக பிரபாகரனை நான் சந்தித்தபோது மிகுந்த கம்பீரமாகவும் இயல்பாகவும் இருந்தார்.

என்னிடம், "உங்களுக்கான வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா அய்யா. ஏதேனும் வசதி குறைவாக இருந்தாலோ பிரச்சனைகள் இருந்தாலோ தாராளமாக என்னிடம் சொல்லுங்கள்' என்றார். மன நிறைவாக இருக்கிறது என்று கூறினேன்.

நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்பதால் மொழியைப் பற்றி மட்டுமே என்னிடம் பேசினார். மொழியின் வளர்ச்சி குறித்தும் மொழியைப் பாதுகாப்பது குறித்தும் பேசிய பிரபாகரன், "யுனெஸ்கோ நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் 50 ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்த் துள்ளனர்.

எதனை கண்டு அழியும் மொழியில் தமிழைச் சேர்த்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கு வந்து பார்த்திருப்பார்களாயின் அப்படி கூறியிருக்கமாட்டார்கள். தமிழீழம் கிடைத்துவிட்டால், தமிழை பாதுகாக்கவும் வளர்ச்சிக்காகவும் நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். தமிழை அழியவிட மாட்டோம்' என்றார். மொழி மீது அவருக்கிருந்த பற்று புரிந்தது.

இப்படிச் சொன்னவர் சட்டென்று, "என் பெயர் (பிரபாகரன்) தமிழ்தானே அய்யா?' என்றார். நான் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ "எனக்கு கரிகாலன்னு ஒரு பெயர் உண்டு. கரிகாலன் தமிழ் பெயர்தானே?' என்றார். உடனே நான், "மிக அழகான சரியான தமிழ்ப்பெயர்' என்றேன். மகிழ்ந்து சிரித்தார்.

Read More...
Paperback
Paperback 599

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரபாகரன்

புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரைநடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண, இலக்கிய அகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப்பயணங்களாகவும், கலாசாலைபோதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+15 more
View All