Share this book with your friends

Industrial scientist G.D.NAIDU / ஜி.டி.நாயுடு தொழிலியல் விஞ்ஞானி

Author Name: N. V. Kalaimani | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

"நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை - என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"
என்று, உலகியல் இயக்கத்திற்கு வாழ்வியல் சட்டத்தை வகுத்தளித்த தமிழ் மறை ஞானி திருவள்ளுவர் பெருமான், "நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இந்த உலகம்" என்று கூறியுள்ளார்.

அதற்கேற்ப, தனது வாழ்நாளெல்லாம் ஓடி, யாடி உழைத் துழைத்து; தமிழகத்தின் தொழில் அறிவுக்கு ஞானியாகத் திகழ்ந்த தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள், 04.01.1974-ஆம் ஆண்டு வரை நம்மோடு நடமாடி - காலத்தின் பசிக்கு நல்லமுதம் ஆனார்!

ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் ஆகின்றன - அவர் நம்மை விட்டு மறைந்து பிரிந்து, ஆனால், சுமார் எண்பது ஆண்டுகள் அந்த தொழிலியல் மேதை நம்மோடு வாழ்ந்து, நாடகம் பார்க்க வரும் கூட்டம் போல, சிறுகச் சிறுகச் செல்வத்தைச் சேர்த்து, அது நிலையில்லாத நீர்க்குமிழ் என்பதை உணர்ந்தும், நிலயைான - அறமான தொழிலியல், விவசாய இயல், கல்விப் புரட்சி இயல், சித்த வைத்திய இயல், விஞ்ஞானவியல் போன்ற பல்வியல்களில் நிலையான, வாழ்வியல் அறங்களைச் செய்து, நேற்று நான் இருந்தேன், இன்று மறைந்தேன் என்று கூறுமளவுக்குக் காலத்தின் புரட்சிக்கு விதையாக விளங்கியுள்ளார்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

என். வி. கலைமணி

கலைமணி (பிறப்பு: திசம்பர் 30, 1932) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். 1946 ஆம் ஆண்டு முதல் அண்ணாவின் எழுத்தாலும் பேச்சாலும் பேரன்பு கொண்டவர்​. ... 1952 ஆம் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நாடகம் நடத்தியவர்.

Read More...

Achievements

+15 more
View All