Share this book with your friends

IYOTHEE THASSAR SINTHANAIGAL / அயோத்திதாசர் சிந்தனைகள் (அரசியல் )

Author Name: Gnana Aloysius | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

அரசாங்கத்தோரால் குடி விருத்தியடைகின்றதா அன்றேல் இத்தேச நூதன மதத்தோர்களால் குடி விருத்தியடைகின்றதா
இந்திய தேசத்தில் இந்திரர் தன்மமாம் புத்ததன்மம் பரவியிருந்தவரையில் சமணமுநிவர்களால் குடிகள் யாவருக்கும் மது மாமிஷங்களை அகற்றி சீலத்தில் நிலைக்குமாறு போதித்து அவைகளையே ஓர் விரதமாகக் கொண்டொழுகும் வகையில் விடுத்திருந்தார்கள். அதனால் மனுமக்கள் யாவரும் சுத்த சீலக்கியான விருத்தியினின்று வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் பெருகி, குரு விசுவாசம் இராஜ விசுவாசத்தில் நிலைத்து அவரவர்கள் அறிவின் விருத்தியை கல்வியிலும் கைத்தொழிலிலும் விவசாயத்திலும் வளர்த்து சருவ சீவர்களையும் தங்களைப்போல் கார்க்குங் சீவகாருண்யமும் சுயக்கியானம் உண்டாகி தேசத்தைச் சிறப்புறச் செய்து வந்ததுமன்றி மக்களும் ஒற்றுமெயுள்ள வாழ்க்கையால் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகையாய சுகவாழ்க்கை காலத்தில் சில நூதன சாதியோர் யாசக சீவனமாகவே இத்தேசத்தில் வந்து குடியேறி தங்களது மித்திரபேத உபாயங்களினால் கல்வியற்றவர்களும் விவேகமற்றவர்களுமாயப் பெருங் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் தங்கள் வயப்படுத்திக் கொண்டு நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு கொலையையும் புலையையும் கட்குடியையும் அகற்றி வாழ்ந்திருந்த பௌத்தர்கள் முன்னிலையில் மாமிஷம் புசிப்பதற்கும் மயக்க பானங்களைக் குடிப்பதற்கும் பயந்து தங்கள் நூதன மதசார்பாகவே தங்கள் தேவனுக்குக் கொழுத்தப் பசுக்களும் கொழுத்த குதிரைகளும் கொழுத்த மனிதர்களுமே மிக்க பிரியம், ...

Read More...
Paperback
Paperback 799

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஞான அலாய்சியஸ்

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.

Read More...

Achievements

+15 more
View All