Share this book with your friends

Journalism then and today / இதழியல் கலை அன்றும் இன்றும்

Author Name: N. V. Kalaimani | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இளம் தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டி நூலாக - இந்த நூல் பயன்பட வேண்டும் என்பது எனது ஆசை!

ஒரு பத்திரிகையாளருக்கு என்னென்ன அநுபவங்கள் தேவையோ, அவற்றை ஓரளவுக்கு நான் வழங்கியுள்ளேன். பக்கங்களைப் புரட்டி, தலைப்புகளை மட்டுமே மேலோட்டமாகப் பார்ப்போருக்கு நான் கூறுவதன் உண்மை புரியும்.

என்னதான் எழுதினாலும், உண்மையை ஒப்பிப் பாராட்டுவோர் அத்திப் பூ போன்றவர்களே! இல்லையானால், “ஆனந்த விகடன்” பத்திரிகையில் “பாரதி உலகக் கவியல்ல; அவர் பாடலில் வெறுக்கத் தக்கவை உள்ளன” என்று “கல்கி” எழுதுவாரா?

இவ்வாறு எழுதிய அந்த நேரத்து மூத்தப் பத்திரிகையாளரான கல்கிதான், எட்டயபுரம் பாரதி மண்டபத்தை எழுப்பி விழா எடுத்திடக் காரணராகவும் இருந்தார். காலச் சக்கரம் எப்படி மாறி மாறிச் சுழல்கிறது பார்த்தீர்களா?

‘கல்கி’ எழுதியதைக் கண்ட பாரதிக்குத் தாசன் சும்மா இருப்பாரா? ஏந்தினார் எழுது கோலை! பாரதியைத் தாழ்வாக மதித்தவரைப் பார்த்து, “பாரதி உலக கவி, அவர் ஒட்டைச் சாண் நினைப்புடையாரல்லர், ஐயர் கவிதைக்கு இழுக்கும் கற்பிக்கின்றார். அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டா? பாரதி சிந்துக்குத் தந்தை; குவிக்கும் கவிதைக் குயில்; செந்தமிழ்த் தேனீ; இந்நாட்டினைக் கவிக்கும் பகையைக் கவிழ்க்கும் முரசு; நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ; திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன்; தமிழால் பாரதி தகுதி பெற்றார்; தமிழ், பாரதியால் தகுதிபெற்றது” என்றார்!

Read More...
Paperback
Paperback 360

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

என். வி. கலைமணி

இயற்பெயர்: அ.நா.வாசுதேவன்
புனைப்பெயர்:என்.வி. கலைமணி
சொந்த ஊர்:வடார்க்காடு மாவட்டம்,வந்தவாசி வட்டம், அமுடுர் சிற்றூர்.
பிறப்பு: 30 திசம்பர் 1932ஆம் ஆண்டு
தந்தை பெயர்: அ.கு.நாராயணசாமி, காவல்துறை (ஓய்வு)
வாழ்க்கை துணைநலம் புலவர்.T. உமாதேவி பிலிட், ஆதம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, பெண்பாற் புலவர்
மக்கட்பேறுகள்: வா. மலர்விழி, வா. அறிஞர் அண்ணா,வா.பொற்கொடி, வா. திருக்குறளார்
பெயரர்கள்: க. கணேஷ் கார்த்திக், க. அனிதா,வே.மகேஷ்,வே.ஜனனி
பணி:1950ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளர்
கல்வி புலவர்,எம்.ஏ (வரலாறு)

சாதனைகள்: அரசியல், வரலாறு, அறிவியல், இலக்கியம்,தமிழாய்வு,
நாடகம் சம்பந்தப்பட்ட 127 நூல்கள் எழுதியவை “சாம்ராட் அசோகன்”
வரலாற்று நாடகம் 30 நகர்களில் நடிகர் ஹெரான் இராமசாமி நடித்திட கதை
வசனம் எழுதியது: “இலட்சியராணி” என்ற நாடகம் கலைவாணர் NSK
தலைமையில் சென்னை, ஒற்றைவாடை கலையரங்கில் 6.4.1952 அன்றும்,
விழுப்புரம் நகரில் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்
திருக்குறளார் வீ. முனிசாமி எம்.பி., அவர்கள் 1952, சனவரி மாதம் 29,30
ஆகிய இரு நாட்கள் நடத்தியது. 1952ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் துறை,
அஞ்சல் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் சென்னை வந்தபோது ஐ.என்.ஏ திடல்
என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய காங்கிரஸ் தலைமை அலுவலகத்
திடலுக்குள் தன்னந்தனியாக நின்று கருப்புக்கொடியை அவரிடம் கொடுத்து
கைதாகி 2 வாரம் சிறை சென்றது. மற்றும் பல சாதனைகள் உண்டு

Read More...

Achievements

+15 more
View All