Share this book with your friends

KAMBAN SUYASARITHAM / கம்பன் சுயசரிதம் கட்டுரைத் தொகுப்பு

Author Name: Tho. Mu. Baskara Thondaiman | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

“கல்வியில் பெரியவன் கம்பன்”
“கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”

என்றெல்லாம் சின்னஞ்சிறு வயதிலேயே, பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கம்பன் யார் என்று தெரியாமலேயே, நாமும் கிளிப் பிள்ளை மாதிரி, பள்ளியில் படித்ததை சொல்லிக் கொண்டிருந்திருக்கிறோம். பின்னர், வளர்ந்து, பெரிய வகுப்புகளுக்கு வந்தபின்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை”

என்ற பாரதியின் பாடலைப் படிக்க நேர்ந்தபோதுதான், ஆகா! இந்தக் கம்பன், பெரிய ஆள் போலிருக்கிறதே, அதனால்தான், கம்பனுக்குக் கவிச்சக்கரவர்த்தி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், கற்றறிந்த பெரியோர்கள் என்று உணர ஆரம்பித்திருக்கிறோம். அப்படி என்னதான் இந்தக் கம்பன் பாடியிருக்கிறான், இத்தனை பேரும் புகழும் எப்படி வந்தது என்று, அவன் ஆக்கித் தந்த கம்பராமாயணத்தைப் படிக்க முனைகிறோம். படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான்.

Read More...
Paperback
Paperback 249

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் கொன்னார். முற்றிலும் உண்மை.

தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும்.

குற்றலமுனிவர் ரசிகமணி டி.கே. சி. யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப்படைப்புகளும் கலைப்படைப்புகளும் தமிழுக்கும் கலையுலகுக்கும் கிடைத்த ஆரிய பொக்கிஷங்கள்.

Read More...

Achievements

+15 more
View All