Share this book with your friends

KAPPIYAA 70MM- 2 / காப்பியா 70 MM - 2

Author Name: 'sembathai' Imayakappiyan | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

"நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்கு போன் போட்டு, ’சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!‘' என்று கேட்கிறார்’ என்று சொல்லிச் சிரித்தார்.”இப்படிச் சொல்லியிருந்தார் சத்யராஜ்.

எந்த ஊருக்குப் போனாலும் எத்தனை நேரம் ஆனாலும் தன் மகன் பிரபுவின் நினைவாகத்தான் இருந்திருக்கிறார் சிவாஜி. இந்த பேட்டியில் வெளிப்பட்ட தன் தந்தையின் அக்கறையை நினைத்து இப்போதும் கண் கலங்கி போகிறார் பிரபு. எல்லா மகன்களையும் போலத்தான் பிரபுவும் இருந்திருக்கிறார், அருகில் இருந்தவரை சிவாஜியின் அன்பையும் பாசத்தையும் புரிந்து கொள்ளாமலே...

பிரபுவுக்கு மட்டுமல்ல. பெரும்பாலான பிள்ளைகளுக்கு தன் அப்பாக்கள் தன் மீது கொண்டிருக்கும் அன்பு புரிவதே இல்லை. அது புரியும்போது அந்த உறவுநம்மோடு இருப்பதில்லை.

Read More...
Paperback
Paperback 1299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

'செம்பாதை' இமயக்காப்பியன்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All