Share this book with your friends

KODUGALUM KOLANGALUM (Novel) / கோடுகளும் கோலங்களும் நாவல்

Author Name: Rajam Krishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பயிர்த் தொழிலையும், பயிர்த் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளையும் மையமாக்கி ஏற்கனவே, நான் “சிேற்றில் மனிதர்கள்” என்ற நாவலை எழுதியுள்ளேன். அந்த நாவல் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றதுமன்றி, இரு பரிசுகளுக்கும் உரித்தாயிற்று. பாரதீய ஞானபீடம், இதை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இது மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

புரட்சிப் பெண்மணி மணலூர் மணியம்மா 1930களில் விவசாயத் தொழிலுக்காகக் கீழ்த் தஞ்சைப் பிரதேசத்தில் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 1953 இல் காலமான அவருடைய வாழ்க்கை வரலாற்றை- கிராமத்து எளிய விவசாயக்கூலி மக்களின் வாய் மொழியாகவே கேட்டறிந்து ‘பாதையில் பதிந்த அடிகள் எழுதும் போதும் இதே பயிர்த் தொழிலாளரையே எழுத்து மையம் கொண்டது.

இந்த நாவல் கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.

Read More...
Paperback
Paperback 245

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜம் கிருஷ்ணன்

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

Read More...

Achievements

+15 more
View All