Share this book with your friends

KUTRALA VALAM / குற்றால வளம்

Author Name: Raya. Sokkalingam | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

1.      தீண்டத்தகாதார் யார்?
தீண்டத்தகாதார் யார் என்பதைப்பற்றி ஈண்டு ஆராயலாம். தீண்டத்தகாகார் எனப் பிறப்புப்பற்றி ஒரு பிரிவார் ஹிந்துக்களுள் பெரும்பாலாரால் ஒதுக்கப்படுகின்றனர். அது பிழையென்றும் பிறப்பினால் தீண்டத்தகாதார் உண்டு என்று உரைத்தல் பேதைமை என்றும் பேசும் கொள்கைகொண்ட ஒரு கூட்டத்தார் இந்நாள் நம் நாட்டில் பெருகிவருகின்றார், காந்தியடிகள் கோலிய ஒத்துழையாமைக் திட்டத்திலும் தீண்டாமை விலக்கு ஒரு முக்கியமான உறுப்பாக அமைக்கப்பெற்றது. அத் தீண்டாமை விலக்கு என்பது பிறப்பினால் ஒரு பிரிவார் தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் பொருளற்ற காரியத்தை நிறுத்துதல் என்ற பொருள்கொண்டே தெடங்கப்பட்டது.

"தீண்டாமையை விலக்குதல் என்றால் தீண்டத்தகாதாராக யாருமே கொள்ளப்படக் கூடாதன்றோ? அங்ஙனமாக, 'தீண்டத்தகாதார் யார்?' என்ற வினா எழவேண்டுவதென்னை? தீண்டத்தகாதார் யார் என்ற வினாவிலிருந்தே தீண்டத்தகாதாரும் உளரென்று கிடைக்கின்றதே. இது தீண்டாமை விலக்கிற்கு முரணன்றோ?" என்று எவரும் வினவலாம். தீண்டத்தகாகார்எவரும் இல்லையென்பது என் கருத்தன்று. தீண்டத்தகாதார் உள்ர். தீண்டாமை விலக்கு என்ற கொள்கை எனக்கு உடன்பாடல்ல வென்று இது கொண்டு யாரும் கூறிவிட வேண்டாம். அக்கொள்கையை அதி தீவிரமாக வலியுறுத்துவோர் கூட்டத்துள் நானும் சேர்ந்தவனே. தீண்டாமை விலக்கு என்பதற்கு இப பொழுது தீண்டத்தகாதாராகக் கொள்ளப்படும் மூடக்கொள்கையை விலக்கல் என்பதே பொருள். அதுவேயன்றித் தீண்டத்தகாத செயல்புரியும் ஒருவரை விலக்குவதில் என்னே பிழை.

இந்நாள் இந்து சமூகத்தினரால் தீண்டத் தகாதாராக யார் கொள்ளப்படுகிறார்? வழிவழியாக வரும் ஒரு கூட்டத்தார். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இராய. சொக்கலிங்கம்

இராய. சொக்கலிங்கம் (இராய.சொ.) சிவகங்கை மாவட்டம் அமராவதிப்புதூரில் இராயப்பச் செட்டியாருக்கும் அழகம்மை ஆச்சிக்கும் மகனாக 1898 அக்டோபர் 30ஆம் நாள் பிறந்தவர். இராய. சொக்கலிங்கம் இளமையிலேயே தமிழார்வம் உடையவராக இருந்தார். குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பர் என்பவருடன் இணைந்து செட்டிநாட்டுப் பகுதியில் தமிழ்ப்பணியில் ஈடுபட்டார். 1917 செப்டம்பர் 10 ஆம் நாள் இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். விவேகானந்தர் படிப்பகத்தை நிறுவினர். அதன் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இச்சங்கத்திற்கு வருகைதந்த சுப்பிரமணிய பாரதியாயருடன் 1919 நவம்பர் 9 ஆம் நாள் தன் நண்பர்கள் சூழ ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். பாரதியார் இச்சங்கத்தைப் பற்றி ஹிந்து மதாபிமான சங்கத்தார் என்னும் தலைப்பில் ஏழு விருத்தங்கள் எழுதியுள்ளார்

Read More...

Achievements

+15 more
View All