Share this book with your friends

MATA HARI (Novel) / மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை)

Author Name: Nagarathinam Krishna | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விதிகளுக்கு வெளியே பெண்
ஆண்  விதிகளுக்கு வெளியே நின்றால் அவன் புரட்சிக்காரன். பெண் விதிகளுக்கு வெளியே நின்றால் கர்வம் பிடித்தவள். ஆண் தெருவில் இறங்கினால் அவன் போராட்டக்களத்தில் இறங்குபவன். பெண் தெருவில் இறங்கினால் அடங்காப் பிடாரி. ஆண்கள் வெவ்வேறு பெண்களிடம் தஞ்சசம் அடைந்தால் அது ஆணின் இயல்பு. பெண்கள் வெவ்வேறு ஆண்களிடம் நட்புபூண்டால்  அது கூடா ஒழுக்கம்.ஆண்கள் சமைத்தால்  அது உதவி. பெண்கள் சமைத்தால் அது கடமை.  ஆண் வேலைக்குப்போனால் அவன் குடும்பத் தலைவன். பெண் வேலைக்குப்போனால் குடும்ப ப் பொறுப்பில்லாதவள். ஆண்கள் – மதம், சமூக ஒழுங்கு, இவற்றின் பெயரால் அடக்குமுறை சட்டங்கள் இயற்றினால்  அது பாதுகாப்பு. பெண்கள் அந்தச் சட்டங்களை எதிர்த்தால் அல்லது அதனை மாற்ற முயன்றால் அவள் மாத்தா ஹரி. எல்லாப் பெண்களையும் மாத்தா ஹரி என்று குற்றம் சாட்டிக் குண்டால் துளைக்க ஆண்களின் துப்பாக்கிகள் காத்திருக்கின்றன. அதன் ஆணிவேர் அச்சமாய் இருக்கலாம், பெண்களின் மீது தனதே என்ற ஒரு சொத்துரிமைக் கண்ணோட்டமாக இருக்கலாம். சாவு அல்லது சுயம் இழந்த தற்கொலை வாழ்வு என முடிந்து போகும் பெண்ணுலகினை ஒரு புதுச்சேரி பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக நேர்த்தியுடன், இலக்கியச் சிறப்பும், வாசிப்பு அனுபவமும் ஒருங்கே கொண்ட நாவலாய் எழுதியிருக்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

Read More...
Paperback
Paperback 295

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். ... இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன.

Read More...

Achievements

+15 more
View All