Share this book with your friends

Mayilangi Mangaiyin Maragatha Petti / மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி

Author Name: 'Kaalachakram' Narasimhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மைசூருக்கும் மலபாருக்கும் இடையே இருந்த மிகப் பணக்கார சாம்ராஜ்யம்தான் மயிலங்கி. மயிலங்கி மன்னருக்கு ஒரே ஒரு மகள், ராணி அலர்மேல் மங்கம்மா. மகன் இல்லாத குறையைப் போக்க மகளை வீராங்கனையாக வளர்க்கிறார். தன்னைப் பெண் கேட்டு வரும் மைசூர் மன்னரை நிராகரிக்கிறாள் அலர்மேல் மங்கம்மா. அந்தக் கோபத்தில் மயிலங்கி மீது படையெடுக்கிறார் மைசூர் மன்னர். மற்றொருபுறம் ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் என மும்முனைத் தாக்குதலைச் சந்திக்கத் தயாராகிறது மயிலங்கி. இதனால் பயந்துபோகும் மயிலங்கி மன்னர், சொத்துகளை மறைத்துவைத்து, நேரம் வரும்போது மகளுக்குச் சொல்லலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திடீரென்று மரணப் படுக்கையில் விழும் மன்னர், மகளிடம் ரகசியச் சுவடி ஒன்றைக் கொடுத்துவிட்டு இறந்துபோகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

Read More...
Paperback
Paperback 559

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

‘காலச்சக்கரம்’ நரசிம்மா

‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றவர் நரசிம்மா. தன்னுடைய 48-வது வயதில் ‘காலச்சக்கரம்’ என்ற முதல் நாவலை வெளியிட்டார். அதன்பிறகு, அந்த நாவலின் பெயரே அவருடைய அடையாளமாக ஆகிப்போனது. ‘சங்கதாரா’, ‘பஞ்ச நாராயண கோட்டம்’, ‘கர்ண பரம்பரை’, ‘குபேரவன காவல்’, ‘அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா’ ஆகியவை இவரது புகழ்பெற்ற நாவல்கள். குடும்பத்துடன் சென்னை திருவான்மியூரில் வசித்துவருகிறார்.

Read More...

Achievements