Share this book with your friends

MUGAMILLAA KAVASAM / மு(அ)கமில்லா கவசத்தின் மு(அ)கம் PHYSICAL DISTANCE

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

கொரோனா காலத்து கதைகள், கட்டுரைகள், அநுபவங்கள்.

கொரானா காலத்து திருமணங்களும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்த காலமும்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்- மூத்தோர் நல்லோர் வழி திருமணங்கள் என பல சிறப்பான திருமணங்களையும் சிறப்பற்ற மனங்கோணிய திருமணங்களையும் நாம் பார்க்கிறோம். ஊரடங்கு திருமணங்கள் சற்று வித்தியாசமானது மட்டுமல்ல, நிறையவே வித்தியாசத்தை நமக்கு சொல்லுகின்றன. அவைகளுள் சிலவற்றை பார்ப்போம். நீங்களும் தொடர்ச்சியாக கதையுங்கள்.

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்துக்கு அருகில் நின்று கொண்டே இருவரும் தாலி கட்டிக் கொண்டு மணமக்களானர். மகிழுந்தில் பயணித்துக் கொண்டே இருவர் தாலி கட்டிக்கொண்டு மணமக்களானர். உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க வேண்டும் என, மணமகன் மட்டும் பெண்ணின் ஊருக்கு மிதிவண்டியில் 500 கிலோ மீட்டர் பயணித்து மணமகன் மணமகள் வீட்டை அடைந்து மணமக்களானர். தமிழகத்தில் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்ற மகன் திரும்பி வரும்போது ஒரு பெண்ணோடு வந்திருக்கிறார். அவன் அம்மா இது யார் எனக் கேட்க, இவள் என் மனைவி எனச் சொன்னாராம் மகன். பிறகு அம்மாவோ... மகன் மீது காவல் நிலையத்தில், என் மகன் திருமணம் செய்த விதம் சரியல்ல எனப் புகார் கொடுத்தாராம்.(தூத்துக்குடியில் மகன் அதிகமாக குடிக்கிறான் என ஆட்சியரிடம் ஒரு தாய் மனுக்கொடுத்தாராம்) கல்யாணமும் கருமாதியும் என்கிற விரக்தி சலிப்புச் சொற்றொடர் போல இன்று திருமண நிகழ்வில் 50 பேருக்கு தான் அனுமதி என்கிற நிலையும், கருமாதிக்கு அதைவிட குறைவான 20 பேருக்குத்தான் அனுமதி என்கிற நிலையும் நம்முடைய கலாச்சாரத்தை மட்டுமல்ல உலக கலாச்சாரத்தையும் சற்று ஆட்டம் காண வைத்தது. 

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All