Share this book with your friends

MUSLIMGALUM THAMIZHAGAMUM / முஸ்லீம்களும் தமிழகமும்

Author Name: S. M. Kamaal | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லீம்களது வரலாறு தொன்மையானது. ஏழாம் நூற்றாண்டின் முடிவில் அரபு நாட்டு இஸ்லாமிய வணிகர்கள் நமது கீழைக்கடற்கரையின் பல பகுதிகளில் கரையிறங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடக்கம் பெறுகிறது. அவர்களுடன் சமயச் சான்றோர்களும் இறைநேசர்களும் இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்னலமற்ற தொண்டும் தூய வாழ்வும் அமைதியான ஆரவார மற்ற நடைமுறைகளும் தமிழ் மண்ணில் இஸ்லாம் தழைத்து வளர்வதற்கு உதவியதுடன், தமிழகத்தின் அரசியல், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய புலங்கள் புதிய ஒளியும் உயர்வும் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளன.

இந்தப் புதிய தாக்கத்தை வரலாற்று அடிப்படையில் முறையாக ஆய்வு செய்தல் மிகவும் பயன் உள்ள ஒரு பணியாகும். இந்த நோக்கில் எங்களது அறக்கட்டளையின் இஸ்லாமிய கலை, பண்பாட்டு, ஆய்வுமையம் 1988ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டிக்கு “முஸ்லிம்களும் தமிழகமும்” என்ற தலைப்புப் பொருளினை அறிவித்தது. எழுத்தாளர் பலர் ஆர்வத்துடன் தங்கள் ஆய்வுரைகளை அனுப்பி இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அவற்றுள் சிறந்த ஆக்கமாக இராமநாதபுரம் டாக்டர் எஸ். எம். கமால் அவர்களது தொகுப்புரை தேர்வு செய்யப்பட்டது.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எஸ். எம். கமால்

சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் (1928 அக்டோபர் 15 – 2007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர். பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

Read More...

Achievements

+15 more
View All