Share this book with your friends

NADAGA MEDAI NINAIVUGAL ( Part 5&6) / நாடக மேடை நினைவுகள் (பாகம் 5&6)

Author Name: Pammal Sambandha Mudhaliyar | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

இந்நூல் நாடக மேடை நினைவுகள் என்ற நூலின் 5 மற்றும் 6ஆம் பாகமும் நான் கண்ட நாடகக் கலைஞர்கள் எங்கிற நூலும் அடங்கியது.

‘தமிழ் நாடகத் தந்தை’ என்றும், ‘நாடகப் பேராசிரியர்’ என்றும், ‘தமிழ் மேடை நாடகத்தின் சேக்சுபியர்’ என்றும் நாடகக் கலைவாணர்களால் போற்றிப் பாராட்டப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. கற்றவர்களால் நாடகக் கலை வெறுத்து ஒதுக்கப்பட்டது. இத்தகைய காலக் கட்டத்தில் பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் துறைக்குள் நுழைந்தார். தமிழ் நாடகத்திற்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் தந்தார். அவர் இதிகாச நாடகங்களையும், புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழில்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். அவர்கள் வரலாறு மற்றும் சமூக நாடகங்கள் நடிக்கத் தூண்டுகோலாக அமைந்தார்.

நாடக நடிகர்களைக் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட வழக்கத்தை மாற்றி, அவர்களைக் கலைஞர்கள் என்று சிறப்பாகக் குறிப்பிடும் நிலைக்கு உயர்த்தினார். தமிழ் நாடக வரலாற்றில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆங்கில நாடகங்களையும், வடமொழி நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து, அவற்றை மேடைகளில் நடித்துத் தமிழ் நாடகத்திற்கு ஒரு புது வடிவத்தைத் தந்தார். அவர் காலத்துத் தமிழ் நாடகங்களில் பாடல்கள் அதிகமாக இருந்தன. அத்துடன் பாடல்களின் விளக்க உரையாடல்கள் மிகவும் குறைந்த அளவில் இடம் பெற்றிருந்தன.

Read More...
Paperback
Paperback 270

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார் (பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.

முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.

1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்

Read More...

Achievements

+15 more
View All