Share this book with your friends

Nadakka Thavariya Varalaaru / நடக்கத் தவறிய வரலாறு நடக்கத் தவறிய வரலாற்றின் தொலைநோக்குக் கற்பனைக் கதை | Nadakka Thavariya Varalattrin Tholainoku Karpanai Kadhai

Author Name: Bharathi Masilamani | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சற்றுச்  சிந்தித்துப்  பாருங்கள், 1750ஆம் ஆண்டு துவங்கி , 1800 ஆம்  ஆண்டுகளில் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து  விரட்டி இருந்தால், இந்தியா மட்டுமல்ல உலகின் நிலைப்பாடு எவ்வாறெல்லாம் மாறி இருக்கும் என்பதைச்  சிந்தித்துப்  பாருங்கள்!

உலகில்  வல்லதிகாரம் (Imperialism) 200 வருடங்களுக்கு முன்னரே உடைந்திருக்கும். 

உலகில் அடிமைத்தனம் (Subjugation) 200 வருடங்களுக்கு முன்னரே ஒழிந்திருக்கும். 

1920 & 1945 ஆம் ஆண்டுகளில் நடந்த இரு உலகப் போர்கள் நடந்தே இருக்காமல் போயிருக்கலாம்  அல்லவா ?

இன்று அமெரிக்கா உலகிலேயே மிக முன்னேற்றம் அடைந்த வல்லரசு நாடாக இருப்பது போல் இந்தியாவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே (1900 ஆம் ஆண்டுகளிலேயே) உலக  வல்லரசு  நாடாகத்  திகழ்ந்து இருந்திருக்கக்  கூடுமே!

உலகில் இன்னும் என்னென்ன  மாற்றங்கள் வந்திருக்க கூடும் என்று கற்பனை செய்து பாருங்கள். கற்பனை செய்து  பார்க்கப் பார்க்க ஏராளம்! ஏகாந்தம்!

இவ்வாறு நடக்கத் தவறிய வரலாற்றின் கற்பனைக்  காவியம் தான் இந்தக்  கதை. 

இந்தக் கதையில் சொல்லும் எந்த நிகழ்வும் நிஜத்தில் நடக்கவில்லை. 

ஆனால் நடந்திருந்தால், ஆங்கிலேயனை பதினெட்டாம் நூற்றாண்டிலேயே விரட்டி அடித்துத் துரத்தி  இருந்தால், அதுவும்  ஒரு தமிழன், தமிழ் அரசன் ஆங்கிலேயனை வென்றிருந்தால், இந்தியா, உலகம்,  எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பாரதி மாசிலாமணி

பாரதி மாசிலாமணி ஆகிய நான்,”  மில்லேனியம் ஜெனரேஷன் “  என்று சொல்லக் கூடிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு சராசரி இந்தியக் குடிமகன். அதுவும் சென்னை, தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். அப்பா, அண்ணா  பல்கலைக்கழகப்   பேராசிரியர் / விஞ்ஞானி;  அம்மா,  தலைமைச் செயலக அரசு அலுவலர் / வீட்டின்  அதிபதி, மற்றும் எழுத்தாளர். சென்னையில் இருந்த பல  நடுத்தரக்  குடும்பங்களில் நாங்களும்….

1990  ஆம் ஆண்டு  பள்ளி படித்து , 2000 இல் கல்லூரி சென்று , நகரத்தில் வாழும், நடுத்தரக்  குடும்பத்தில் இருந்து வந்த 90% இளைஞன் போல் நானும் மேல் படிப்புக்கு அமெரிக்கா செல்ல,  பல தேர்வுகளை உழன்று, சுழன்று  படித்து, செவ்வனே மதிப்பெண்கள் பெற்று, அரைநொடி அதிர்ஷ்டத்தில் விசா (Visa) முத்திரை கிடைத்து, அமெரிக்கா சென்று மேல் படிப்புப்  படித்தவன். அதுவும் நியூ யார்க் (New York) நகரத்தில் முதுநிலைப் பட்டம் படித்ததில் (Masters) ஓர் கர்வம், ஓர்  மகிழ்ச்சி. படித்து முடித்ததும், அமேசான் டாட் காம் (Amazon.com) கம்பெனியின்  வேலை கிடைக்க, நியூயார்க்கிலிருந்து , சியாட்டில் (Seattle) நகரத்திற்குச்  சென்று 14 வருடங்கள் அமெரிக்காவில் இருந்தது, காலப்  பகடையில் விழுந்த தாயம்.  அதிர்ஷ்டம்! 

இந்த கதை கற்பனையில் மிதந்த உங்கள் அனுபவங்களை கேட்க்க ஆவலாக இருக்கிறேன். பகிருங்கள் vmbharathi.in@gmail.com என்ற இனிய தளத்தில்

Read More...

Achievements

+4 more
View All