Share this book with your friends

NANNOOL / நன்னூல் மூலமும் உரையும்

Author Name: Madhava Signaana Adigalar | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய பதினொன்றனுள் நூற்பெயர்க்குச் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்

முதல்நூல் முதல், தன்மை ஈறாகக் கூறிய ஏழும் பிறவுமாகிய காரணங்களானும்,இடுகுறியானும் நூற்குப் பெயர் வரும் என்றவாறு.

வரலாறு

முதல்நூலால் பெயர்பெற்றன ஆரியப்படலம், பாரதம் முதலாயின. கருத்தனால் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பியம் முதலாயின. அளவினால் பெயர்பெற்றன பன்னிருபடலம், நாலடி நானூறு முதலாயின. மிகுதியால்பெயர்பெற்றன களவியல் முதலாயின. பொருளால் பெயர்பெற்றன அகப்பொருள் முதலாயின. செய்வித்தோனால் பெயர் பெற்றன சாதவாகனம் முதலாயின. தன்மையால் பெயர்பெற்றன சிந்தாமணி, நன்னூல் முதலாயின. இடுகுறியால் பெயர்பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு முதலாயின. பிறவும் அன்ன.


நூற்பா: 50

(நூல்யாப்பு நான்குவகை)

தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் ||தொகுத்தல் விரித்தல் தொகை விரி மொழிபெயர்ப்பு

பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (50) ||என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப.

என்னுதலிற்றோவெனின், வாய்ப்பக்காட்டல் என்பதனால் போந்த சிறப்பில்லனவற்றுள் வழியின்வகை இத்துணையாம் என உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்

நூல் யாக்கப்படும் யாப்பு, தொகுத்து யாக்கப்படுவதூஉம், விரித்து யாக்கப்படுவதூஉம், தொகுத்தும் விரித்தும் யாக்கப்படுவதூஉம், மொழிபெயர்த்து யாக்கப்படுவதூஉம் என்று சொல்லத்தகும் இந்நான்கு கூற்றதாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உரைஞர்: மாதவச் சிவஞான அடிகளார்

சிவஞான முனிவர் (1753 - 1785) ; திருநெல்வேலி, தமிழ்நாடு) ஒரு சைவ மெய்யியலாளர் ஆவார். இவர் தமிழ் மொழியிலும், சமசுகிருத மொழியிலும் சிறப்புப் பெற்றவர். ஆனந்தக் கூத்தர் – மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்.முக்களாலிங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் , இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் என்பதால் சமசுகிருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.

இவரை ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர் என்றும் அழைப்பர்.

இவரை செங்குந்தர் மரபினர் அதிகளவில் பின்பற்றினர் இவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது பிள்ளையார்பாளையம் முனியப்ப முதலியார் அதிக அளவில் உதவி செய்தார்.

Read More...

Achievements

+15 more
View All