Share this book with your friends

ORU KOTTUKKU VELIYE (Samudram's first Novel) / ஒரு கோட்டுக்கு வெளியே சமுத்திரத்தின் முதல் நாவல்

Author Name: Su. Samudram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த நாவல் 1971ஆம் ஆண்டில் வெளியானது. ‘சோற்றுப் பட்டாளம்’ பிரசுரமான முதலாவது நாவல் என்றாலும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ தான் நான் முதல் முதலாவதாக ஆக்கிய புதினப்படைப்பு. அண்மையில் பெய்த பேய் மழை போல் ஒரு மழை அடித்த போது, செங்கை மாவட்ட உத்திரமேரூரில் அரசுப்பணி சார்பாகச் சென்றிருந்தேன். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் இந்த நாவலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. இப்போதும் நினைவைப் பசுமைப்படுத்துகிறது.

இந்த நாவலில் வரும் உலகம்மையும் மாயாண்டியும் சோகச் சுமையில் தவித்த போது நான் மாலை மாலையாகக் கண்ணீர் விட்டுக் கட்டிலில் குப்புறப்படுத்து அழுதிருக்கிறேன். இத்தகைய அனுபவம் என்னுடைய ஆத்மார்த்த குருவான ‘லியோ டால்ஸ்டாய்க்கு’ ஏற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன். இந்த நாவலுக்குப் பிறகு எத்தனையோ நாவல்களை நான் எழுதினாலும் இத்தகைய அழுகை அனுபவம் அதிகமாக ஏற்பட்டதில்லை. ஆனாலும் அண்மையில் அலிகளைப் பற்றிய ஒரு நாவலை நான் எழுதும் போது இப்படிப்பட்ட கசிந்துருகும் நிலைமை ஏற்பட்டாலும் அது உலகம்மை அளவுக்கு உயரவில்லை. இது முதிர்ச்சியோ, அல்லது மனதைக் காலம் மரக்கடித்து வருகிறதா, என்பது புரியவில்லை.

இந்த நாவல் சென்னை வானொலி நிலைத்தில் என் அரும்பெரும் நண்பரும் கோவை வானொலி நிலையத்தின் இப்போதைய இயக்குநருமான திரு. கணேசன் அவர்களால் நாடகமாக வடிவமைக்கப்பட்டுப் பின்னர் அகில இந்திய அளவில் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதினான்கு மொழிகளில் ஒலிபரப்பாயிற்று.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு. சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

Read More...

Achievements

+15 more
View All