Share this book with your friends

Oru Varungala Thalaivanin Ilamai Kalam / ஒரு வருங்காலத் தலைவனின் இளமைக்காலம் நன்றி: தலைப்புக்கு மட்டும் JEAN-PAUL SARTRE ழான் போல் சார்த்தர்

Author Name: N.M. DHANARAJ | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

மாணவர்களுக்கிடையே ஆயுதம் என்பது இப்பொழுது புதிதாகப் பரவிவரும் நோய்க்கிருமி. படிக்க வருபவனிடம் ஆயுதம் எதற்கு? ஆயுதம் இருந்தால் ஏதோ ஓரு தருணத்தில், கோபத்தில், உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விட வாய்ப்பு உண்டு. அப்படி ஓரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் இக்கதையில் ஓரு கொலை நிகழ்ந்து விடுகிறது. அந்தக் கொலையால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மூவர். மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பலர். ஓரு கத்தியை விலைக்கொடுத்து வாங்குவதில் ஆரம்பமாகும் கதை அந்தக் கத்தி முடிவில் எங்கே போகிறது என்பதுதான் கரு. 

வருங்காலம் நிலையில்லாமல் வாழ்க்கைக்கு ஓரு குறைந்த அளவு பொருளாதாரம் இல்லாமலும் அவசரத் திருமணம் செய்து கொள்வதன் ஆபத்தும் இதில் இருக்கிறது. இளம்வயதுக் காதல் என்பது ஓரு பருவ ஈர்ப்பு தான். இது காதலாகவும் மாறலாம் நட்பாகவும் நின்றுவிடலாம். இதனைப் புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சனைதான். ஆனாலும் இந்தக் கதையின் காதல் வலுவனாதாகவே இருக்கிறது. இருப்பினும் சோதனைகள் வேறு இடத்திலிருந்து வருகின்றன. அதன் சுழற்சிதான் இந்தக் கதையின் வேதனை மிக்க நிகழ்வுகள்.

Read More...
Paperback
Paperback 210

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

என்.எம். தனராஜ்

இது ஆசிரியரின் இரண்டாவது நாவல்.  முதல் நாவல் “இந்த இரவு எப்பொழுது விடியும்?” மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.  அத்தனைப் பிரதிகளையும் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககம் வாங்கிக்கொண்டது.  அன்றைய “தி இந்து” ஆங்கில நாளிதழ் இந்த நாவலைப் பாராட்டி விமர்சனம் எழுதி இருந்தது. 

இவருடைய பல சிறுகதைகள் தினமணிகதிர், குங்குமம், கல்கி, கண்ணதாசன் மாத இலக்கிய இதழ் ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன.

“ரங்கா பிச்சை எடுக்கிறார்” என்ற சிறுகதையை கண்ணதாசன் இலக்கிய இதழ் வெளியிட்டு அதன் மீது ஒரு திறனாய்வு போட்டியை வைத்தது.

Read More...

Achievements