Share this book with your friends

PAALUM PAAVAIYUM (Novel) / பாலும் பாவையும் நாவல்

Author Name: Vindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“காதலைப் பற்றி நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது!’ என்று நீங்கள் சாதிக்கிறீர்கள் என்னால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில், தமிழனும் தமிழச்சியும் தொன்றுதொட்டுக் காதலையும் போரையும் தவிர வேறு ஒரு பாவமும் செய்து அறியாதவர்கள்' "பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக்கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுதவேண்டும்?” என்று நீங்கள் கடைசியாகக் கேட்டிருக்கும் கேள்வி என்னைத் துக்கிவாரிப் போட்டது நான் என்னத்தைச் சொல்ல?காதல தோல்வியுறுவதற்குக்கூடக் காரணம் பொருளாதார நிலைதான்; அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான்; நமக்கும் சுட்டிக் காட்டுகிறான் கவிதைகளையொட்டி, காவியங்களையொட்டி “பொருளுக்கு அப்பாற்பட்டது காதல்” என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம் ஆனால் இன்றைய உலகத்தில் நாம் காண்பது என்ன?-பொருள் இல்லாவிட்டால் காதல் புகைகிறது, அல்லது காதலர்கள் மயானத்தில் புகைந்து விடுகிறார்கள்!-இதை நீங்கள் மட்டுமல்ல; உருவக் கவர்ச்சியின் காரணமாக ஏற்படும் காதலுக்கும் உள்ளக் கவர்ச்சியின் காரணமாக ஏற்படும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தம்முடைய கட்டுரையில் சாங்கோபாங்கமாக விவரித்திருக்கும் பதிப்பாசிரியர்கூட மறுக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்; அத்துடன், மனிதப் பண்பாட்டை உயர்த்தும் காதல் சில சமயம் கற்புக்கு அப்பாற்பட்டதாகி, அதன் காரணமாக அறிவுக்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது என்பதையும் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன்.

 சென்னை 

இப்படிக்கு விந்தன்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விந்தன்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி
 

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

Read More...

Achievements

+15 more
View All