Share this book with your friends

PAERAGATHIYATHIRATTU / பேரகத்தியத்திரட்டு மூலமும் உரையும்

Author Name: Sa. Pavaanantham Pillai | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இவ்வுலகின்கண் பற்பல மொழிகள் வழங்கப் பெறுகின்றன. அவற்றுள் சில ஒலிவடிவினைமட்டும் பெற்றிருக்கின்றன. பல ஒலிவடிவோடு வரிவடிவினையும் அடைந்துள்ளன. நம் தமிழ் மொழியோ ஒலிவடிவு, வரிவடிவு இரண்டனையும் பெற்று நிலவுகின்றது. தமிழ் மொழியின் வரலாற்றைக் கூற இரண்டு புராணக்கூற்றுக்கள் உள. அவைதாம்-

1. அகத்திய முனிவர் கச்சியம் பதியிலிருந்த வடமொழி வாணரோடு மாறுபட்டு, அம்மொழிக்கு இணையான மற்றொன்றனை யருளுமாறு முருகக்கடவுளை இரப்பு, அக்கடவுள், இவ்விரக்கம் அறிவின்பாலதாகலின் இவற்கருள் செய்தும் எனத் திருவுளங் கொண்டு, ஓர் இடத்தைச் சுட்டி, ‘அன்ப! இம்மூலைக்கண் உள்ளது; சென்று கொள்க’ எனலும், முனிவரர் விரைந்தோடி ‘தமிழ், தமிழ்!’ எனக்கூவி, அவ்வோலைச் சுவடிகளை வாரிக்கொண்டு வெளிப்போந்து, முருகக்கடவுளை வணங்கி விடைபெற்று, தமிழ் மொழியை இவ்வுலகின்கண் நிலவ வைத்தனர் என்ப.

2. சிவபெருமான் பார்வதியாரைத் திருமணங்கொண்ட காலத்து, முனிவர் அனைவோருந் திரண்டு, வடக்கின்கண்ணுள்ள இமயமலையை யடைதலும், வடதிசை பொறையாற்றாது தாழவும், தென்றிசை பொறையின்றி மேலெழவுங் கண்ட பெருமான் அகத்தியரை நோக்கி, ‘நீ விரைந்து சென்று, தென்றிசைக்கணுள்ள பொதியையில் தங்குக’ எனலும், முனிவர் அவ்வருண் மொழியைச் சிரமேற்கொண்டு, ‘எம்பெருமானே! தமிழ் மொழி தலைசிறந்து விளங்கும் அத்திசைக்கண் அடியேன் சென்று வாழ்ந்திருத்தல் எங்ஙனம்?’ என்று விண்ணப்பஞ்செய்து, அம்மொழியைச் சிவபெருமான் அருளப்பெற்று, சந்தனப்பொதியை யடைய, பூமி சமனுறக்கண்டு மகிழ்ந்து, ஆண்டே வதிந்து, தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து இலக்கணமும் செய்து வைத்தனர் என்ப. இவை போல்வன இன்னும் பல.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உரையும் பதிப்பும்: ச.பவாநந்தம் பிள்ளை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம், தமிழ்ச் சொல்லகராதி, யாப்பருங்கலம் மூலம் பழைய விருத்தியுரையுடன் 1, பேரகத்தியத் திரட்டு: மூலமும் உரையும் போன்ற தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர்.

Read More...

Achievements

+15 more
View All