Share this book with your friends

PALAIPURA (Novel) / பாலைப்புறா நாவல்

Author Name: Su. Samudram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சமகால நடப்புக்களை கலைக் கண்ணோடு மட்டும் பார்க்காமல் சில இடங்களில், நேரங்களில் கவலையோடும், தீர்வு கிடைக்குமா என்ற தேடலோடும் பார்க்கிற எந்த எழுத்தாளனுக்கும், எய்ட்ஸ் ‘ஒரு கதைப் பொருளாகலாம். ஆனால், மனிதகுலத்துக்கெதிரான அந்தப் பேராபத்து சிங்திக்கிற போது, ஏதோ பாலியல் வக்கிரங்களின் வெளிப்பாடு என்ற கிட்டப் பார்வையில்லாமல், அது ஒரு பெரிய சமூகச் சிக்கலின் வெடிப்பு என்று கருதுவதிலேயும், அதன் சகல ஆயுதங்களையும் செயலிழக் கச்செய்வதிலேயும், சு.சமுத்திரம், தனித்து ஜொலிக்கிறார்.

போதை மருந்துகளின்பேயாட்டம். அதை மறைந்திருந்து பொம்மலாட்ட மாய் இயக்கும் சமூகவிரோத சக்திகள் ஒரு புறம்.

கந்தல், குடிசை, கூழ், கூடப் பிறந்த வியாதி இவற்றைத் தந்ததோடு உழைப்புக்கும் பெப்பே'காட்டும் வறுமை மறுபுறம்.

ஆணாதிக்கப்போக்கின் அவலம் மூன்றாவது பரிமாணத்தில்.

இங்தப் பின்னணியில், பதுங்கிப்பாயும் ஆட்கொல்லியின் பிடர்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.ஆசிரியர்.

இங்கே கிராமம், நகரம் என்ற பூகோள வரையறைகள் பொசுங்கிப் போகின்றன. மெத்தப் படித்தவர்களின் சாதுர்யமும், சாமானியர்களின் பிள்ளை மனமும், துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

எப்போதும் சரசரக்கும் பட்டுப்புடவையில் சரள ஆங்கிலத்தில் சாமர்த்தியம் காட்டும் டாக்டர் சுமதியை, ஒரு சமூக விரோதியென கலைவாணி அடையாளம் காட்டுகிற போது இனியேது எனக்கு வாழ்வு’ என்று ஒதுங்கி, ஒடுங்கிவிடாமல், மற்றவர் வாழ்வை மதித்துக் காரிய மாற்றும் அவளது.துணிச்சல் தெரிகிறது. கிராமத்து புஷ்பமான கலைகசங்கி வீழ்வதைக் காண்கையில் நெஞ்சம் கலங்குகிறது.

Read More...
Paperback
Paperback 500

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு.சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

Read More...

Achievements

+15 more
View All