Share this book with your friends

PON VILANGU / பொன் விலங்கு

Author Name: Na. Parthasarathy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு நாவல் நிறைவெய்தியபோது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக் கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும்.

எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது தானே பெரியதொரு முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த நாவலை வெளியிட்ட கல்கி நிர்வாகிகளுக்கும், இது வெளிவருங் காலையில் இதனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட நண்பர் ஸோமாஸ் கந்தனார்க்கும், இதைப் புத்தகமாக வெளியிடும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பும் நன்றியும் என்றும் உரியதாகும்.

நா. பா.

Read More...
Paperback
Paperback 850

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

Read More...

Achievements

+15 more
View All