Share this book with your friends

PRATHAABA MUDHALIYAR SARITHIRAM / பிரதாப முதலியார் சரித்திரம்

Author Name: Vedhanayagam Pillai | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

Binding : Paperback 270 pages
Book Size : 6 x 9
 

பிரதாப முதலியார் சரித்திரம் மற்றும் சுகுணசுந்தரி சரித்திரம் ஆகிய இரண்டு நாவல்கள் அடங்கிய தொகுப்பு.

இந்தக் கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா. கதா நாயகன் இப் பக்கத்தவர்; நன்கு கல்வி பயின்றவர்; மகா புத்திசாலி; நகைச் சுவையுடனும் அறிவுச் சுடர் வீசும் வகையிலும் பேச வல்லவர். அவர் தனது பிறப்பு வளர்ப்பு, பெற்றோர், கல்வி பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்களை விவரிக்கிறார். கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன. அறத்துறை சம்பந்த கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நவீனத்தில் முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும், அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்'. இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்கள்; எல்லா விதமான நற்பண்புகளும் உடையவர்கள்; பெண் குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள். வாழ்க்கையில் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள் பிரகாசிக்கின்றன. தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல், அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க முன்வருகின்றனர். தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி பெற்று, புத்தி சாதுரியத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள். இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.

Read More...
Paperback
Paperback 550

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார்.[சான்று தேவை] தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார்.

1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.

Read More...

Achievements

+15 more
View All