Share this book with your friends

PUDUMAIPITHAN UDHIRTHA MUTHUGAL / புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

Author Name: Mullai Muthiah | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

‘கலைமகள்’ அதிபர் திரு. நாராயணசாமி ஐயர் அவர்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கு அடுத்தபடியாக புதுமைப்பித்தனை மதித்தார்! அலுவலகத்தில் புதுமைப்பித்தனிடம் சிலருக்கு வெறுப்பு இருந்தபோதிலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.

புதுமைப்பித்தன் எழுதிய “கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை ‘கலைமகளில்’ வெளிவந்த சமயம் தி. ஜ. ர அவர்கள் படித்து ரசித்துவிட்டு, அடுத்த பகுதி எப்போது வரும்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தி. ஜ. ர. ‘சக்தி’ ஆசிரியராக இருந்தார். என்னை வழியில் பார்த்து அடுத்த பகுதி வருவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டார். அப்போதுதான் புதுமைப்பித்தனை அறிந்தேன்.

அடுத்த சில நாட்களில் புதுமைப்பித்தனே 'முல்லை' பதிப்பகத்துக்கு வந்துவிட்டார்! அவருடைய வருகையே உற்சாகமாக இருக்கும். வரும்போது சிரித்துக்கொண்டே வேலை எல்லாம் தடைப்பட்டுவிட்டதோ? என்று கூறுவார். இதுவே முதல் அறிமுகம். பிறகு அடிக்கடி சிரிப்பொலியுடன் வருவார்.

அப்போது 'வேலன், வேடன், விருத்தன் என்று என்னைக் குறிப்பிடுவோர், அதாவது பிரிண்டர், பப்ளிஷர் ஆசிரியர் என்பதை அப்படி நகைச்சுவையோடு குறிப்பிடுவார். இப்படியாக தொடர்ந்தது எங்களது தொடர்பு.

அவர், பல சமயங்களில் பணம் கேட்கும்போது தயங்காமல் கொடுத்து இருக்கிறேன். அதற்கு அவராகவே சில கதைகளை உரிமை எழுதி நீங்கள் அச்சிட்டு வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

மேற்படி கதைகளை ‘விபரீத ஆசை’ என்ற பெயரில் வெளியிட்டேன்.

வேடிக்கை மனிதர் புதுமைப்பித்தனோடு உரையாடும் போது கூறிய சுவையான முத்துக்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முல்லை முத்தையா

பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திருமிபினார். 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாகி பாரதிதாசன், கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.

Read More...

Achievements

+15 more
View All