Share this book with your friends

PUTHIYADHOR ULAGAM (Eezham Novel) / புதியதோர் உலகம் ஈழத்து நாவல்

Author Name: Govindhan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இன்று பன்முகத்துவக் குரல் என்பது எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக படைப்பினுள் ஒலிக்கிறதோ அதனைச் சார்ந்தே நாவலின் அழகியல் வெற்றி, அல்லது முழுமை என்பது கணிக்கப்படுகிறது. மாவோவின் முரண்பாடுகளைப் படித்தவர்களுக்கு, மார்க்சீயப் பகுப்பாய்வின் அடிப்படையான இயங்கியலை அறிந்தவர்க்கு, பக்தின் பேசுகிற பன்முகக்குரல் குரல் எனும் கருத்தாக்கத்தின் வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது புரிந்து கொள்ள முடியாதது அல்ல. புதியதோர் உலகம் நாவல் முதல் பக்கம் முதல் இறுதிப் பக்கம் வரையிலும் மனிதர்களுக்கிடையிலான உறவையும் முரணையும் உணர்ச்சிவசமான உரையாடலாகக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழ நேர்ந்த சூழல் அவர்களது நடத்தைகளில் கருத்தியல் முரண்கள்-உறவுகளாக நாவல் முழுக்க உரையாடலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதர்கள் மற்றும் கருத்தியல் உறவுக்கும் முரணுக்கும் இடையிலான எண்ணற்ற கிளைப் பாதைகள் நாவலில் பிரிந்து செல்கின்றன.

இன்று வாசிக்கும்போது, கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்ததாக மட்டும் அல்ல, முழு உலக விடுதலைப் போராட்ட அனுபவங்கள் குறித்த விசாரணையாகவும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இந்த ஒரேயொரு காரணத்துக்காக மட்டும், ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த ஒரேயொரு நாவலை உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்றால் அதற்கென கோவிந்தனின் நாவலையே நான் பரிந்துரை செய்வேன்.

Read More...
Paperback
Paperback 340

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கோவிந்தன்

கோவிந்தன் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டபடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராக (குமாஸ்தா) பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.

Read More...

Achievements

+15 more
View All