Share this book with your friends

Ramayanam thodangi vaiththa ore Kelvi / ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி

Author Name: Sathyanandhan | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

காவியச் சுவைக்காகவோ பக்திரச அடிப்படையிலோ அன்றி மிகவும் கொண்டாடப் படும் ராமாயண கதாபாத்திரங்களின் முரண்கள் என்ன எனும் ஆய்வே இந்நூல். கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், துளஸிதாஸரின் ராமசரித மானஸ் ஆகிய‌ மூன்றும் நூல்களும் "தனிமனிதனா? சமுதாய அங்கமா? எது ஒருவரின் அடையாளம்?" என்ற ஒரே கேள்வியின்கீழ் ஒப்பாய்வுக்குட்படுகின்றன. அதில் காப்பியத்தின் முக்கிய கதாபாத் திரங்களின் பல்வேறு முரண்கள் வெளிப்படுவதால் நமது தொன்மத்தை நாம் மேலும் மேம்பட்ட புரிதலுடன் அணுக முடிகிறது. திண்ணை இணைய தளத்தில் தொடராக வெளிவந்து வரவேற்பைப் பெற்ற‌து.  


 

Read More...
Paperback
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சத்யானந்தன்

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய (தேனீ) மேடை விருதுகள் 2019ல் பாரதிதாசன் நினைவு- மூத்த படைப்பாளர் விருதைப் பெற்றுள்ள கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி) இருபத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாக காலச்சுவடு,  தீராநதி,  சதங்கை,  கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையதளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார். நவீன புனைகதைகள்,  நாவல்கள்,  கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைக்கும் இவரது ’தப்பு தான்’ சிறுகதை போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி- 2019 யில் இரண்டாம் பரிசை வென்றது. இவரது ‘சிறகுகளின் சொற்கள்’ சிறுகதையின் ஆங்கில வடிவம் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கிலத் தொகுப்பான Unwinding ல் சேர்க்கப்பட்டது. 2019ல் வெளியான காலச்சுவடின் ‘தாடங்கம்’ சிறுகதைத் தொகுதி உருவம் மற்றும் உள்ளடக்கத்தில் புதிய தடங்களைக் கண்டதற்காக கவனம் பெற்று காலச்சுவடின் வெளியீடான 'தாடங்கம்' சரவணன் மாணிக்கவாசகத்தின் நூறு நூல்களுள் இடம் பெற்றுள்ளது. வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாக தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார். புது பஸ்டாண்ட் நாவல் 2020ன் கவித்துவமும் நவீனத்துவமான வடிவத்துக்கான நாவலாக கவனம் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக படைப்பாக்கத்தில் இருக்கும் சத்யானந்தன் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய Shoulders என்ற சிறுகதை HydRaWவின் 2020 ஆண்டுத்தொகுப்பிற்குத் தேர்வாகி சேர்க்கப்பட்டது. இவரது மேய்ப்பன் சிறுகதை அரூ இணைய விஞ்ஞானப் புனைவுகளுக்கான போட்டியில் இறுதி 15 கதைகளுள் ஒன்றாகத் தேர்வானது. தப்புதான் என்னும் சிறுகதை மாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. தொடர்ந்து ஆங்கிலத்திலும் பல தொகுப்புகளில் இவரது சிறுகதைகள் இடம் பெற்றன. இரு மொழியிலும் எழுதி வருகிறார்.

Read More...

Achievements