Share this book with your friends

Rendu Manasu / ரெண்டு மனசு

Author Name: Pushpa Chandran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

உயிர் ஒன்றுதான் ஆனால் அதில் எழும் எண்ணங்கள் எண்ணற்றவை.  மனிதன் வாழும்வரை எண்ணங்கள் தோன்றியபடியே இருக்கிறது.  நல்ல மனம் கெட்ட மனம் என்று எதாவது இருக்கிறதா? சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும்தான் மனிதனின் எண்ணங்களை மாற்றுகிறது. ஒரு மழைத் துளியைப் போல சுத்தமான மனம் யாருக்கும் கிடையாது. அதே மழைத் துளி கீழே விழுந்ததும் அசுத்தம் அடைகிறது. அதைத்தான் சூழ்நிலை என்கிறோம். வாழ்க்கையும் அப்படித்தான்! ஒருவனின் உயிர் சந்தோஷமாக பிரிகிறது என்றால் வாழ்க்கையில் திருப்தி அடைந்திருக்கிறான் என்று அர்த்தம். அது எல்லோருக்கும் நடந்துவிடாது. ஏழை எப்போதும் ஏழையாகவே இருந்துவிடுவதில்லை, அது போலத்தான் பணக்காரணும்! நல்ல வாழ்க்கை பயணத்திற்கு ஆண்டவனின் அருளும் வேண்டும்.  

Read More...
Paperback
Paperback 325

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

புஷ்பா சந்திரன்

கதாசிரியரின் இயற்பெயர் சுபாஷ் சந்திர போஸ். புஷ்பா சந்திரன் என்கிற புனைப்பெயரில்  தூர்தர்ஷனுக்காக எழுதி  வெளிவந்த ‘மனசு  மாறிப்போச்சு”  என்கிற  இரண்டு வார தொடர், சென்னை மயிலாப்பூர்  அகாடமியில் இருந்து  சிறந்த  கதாசிரியர்  விருதினை 1996ஆம் ஆண்டு வழங்கியது. ‘நான் நீ  நீங்கள்  என்ற தலைப்புடன் எய்ட்ஸ் விழிப்புணர்வு  பற்றிய நாடகம்  பல  முறை தூர்தர்ஷனில்  ஒளிபரப்பப்பட்டது. அதில் கதாசிரியர் , கதை திரைக்கதை வசனம் எழுதி டைரக்ஷனும் செய்து  கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அவரது ‘கூட்டை தேடும் பறவைகள்” என்னும் தொடர் வேலை பார்க்கும்  பெண்கள் படும் சிரமங்களை எடுத்து சொல்வதாக வெளி வந்தது. தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியிலும் அங்கீகரிக்கப்பட்ட  நடிகராகவும் அன்றைய காலக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். 

            இந்திய விமானப்படையில் குறிப்பாக 1965 ஆம் ஆண்டு  நடந்த பாகிஸ்தான் போரிலும் 1971-ஆம் ஆண்டு நடந்த  பங்களாதேஷ்  போரிலும் எல்லைப் பகுதிகளில்  பணிபுரிந்தமைக்காக ஆறு மெடல்களை பெற்றிருக்கும் அவருக்கு  ‘குளோபல் பீஸ் யுனிவர்ஸிட்டி” GLOBAL PEACE UNIVERSITY  யானது DOCTOR OF HUMANITY என்ற பட்டத்தை  2019 ஆம் ஆண்டு வழங்கி கௌரவப் படுத்தியுள்ளது.

            இறுதியாக BSNL டிபார்ட்மெண்டில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

Read More...

Achievements