Share this book with your friends

SAETRIL MANIDHARGAL / சேற்றில் மனிதர்கள் நாவல்

Author Name: Rajam Krishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வரப்புயர நீருயர நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் தொழில் என்றே பொருள்படுவதாக இருந்தாலும். தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. சுழன்று மேர்ப்பின்ன துலகம் என்றும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். நாங்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும் என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது. இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது. அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும். அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக்கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும். எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். 

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன்

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.

Read More...

Achievements

+15 more
View All