Share this book with your friends

SIRU ( SARI) THEIVANGALUM KULA THEIVANGALUM II / சிறு( சரி) தெய்வங்களும் குல தெய்வங்களும் II

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

“பலவேசமுத்து துணை” என்று ஒருநாள் ஒரு ஆட்டோவில் பார்த்தநொடியிலிருந்து சிந்தனை தொடங்கியது. என்ன இது, பலவேசமுத்து என்று ஒரு பெயர், இப்படியெல்லாம் கூட சாமிக்குப் பெயர் இருக்குமா, இந்தப் பெயருக்கு என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் பலதும் மனதில் ஓடின. இப்பெயரை வைத்திருந்தால் ஏதேனும் சாமியாக இருக்கும். அதற்கு ஏதேனும் ஓர் விளக்கம் கட்டாயம் இருக்கும் எனவும் நினைத்தேன். பொதுவாகவே குலதெய்வங்களைக் கும்பிடுவோர் வரலாற்றை அறிந்துகொள்வதில்லை. அப்படியே வரலாற்றை அறிந்து, பதிப்பித்து நூலாகக் கொண்டு வந்தாலும் அவை குறிப்பிட்ட வட்டாரத்தைத் தாண்டிக் கிடைப்பதில்லை என்பதாலும் இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கடினமாக இருந்தன.
இப்படியாக நாள்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் கடைக்குப்போய் பொருள் வாங்கும்போது அங்கு படத்தில் பலவேசமுத்து, சுடலைமுத்து, பேச்சியம்மனுடன் அருள் பாலித்தார். ஆகா கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வார்களே அது இது தானோ என்று நினைத்துக்கொண்டே சாமி இருக்கும் கோயில் எங்கே இருக்கிறது என விசாரித்தேன் பழனிக்கு அருகில் என்று சொன்னார்கள். தங்களுடைய குலதெய்வம் என்றும் சொன்னார்கள் கடையில் இருந்தவர். ஆனால் பெயரைப் பற்றிய விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
இணையத்தில் தேடினேன். பலவேசமுத்து தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்திருக்கும் பாதக்கரை சாமிகள் கோயிலில் பாதக்கரையானுடன் ஆதிநாராயணரும் பலவேசமுத்துவும் வீற்றிருக்கீறார்கள். அருகில் சிவனும் பார்வதியும் தனியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள் என்று தெரிய முடிந்தது.

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

புலம்பெயர்வாழ்வில்தமிழகப்பார்வையைஉரைநடையாகவும், காதல்கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல்களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கணஇலக்கியஅகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப்பயணங்களாகவும், கலாசாலைபோதகனாகவும், முற்போக்கில்லாகற்போக்குவிருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும்பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+15 more
View All