Share this book with your friends

sudhanthirathin suyamvaram / சுதந்திரத்தின் சுயம்வரம் தினம் தினம் புது வரம்

Author Name: Udhayakumar Kangesanthurai | Format: Paperback | Genre : Poetry | Other Details

இயற்கை தன்  இல்லமான இந்த உலகத்தில் தினம் சமைக்கும் கவிதைகளில் சில இங்கு தமிழ் ஓசைகளில் சிலையாகியிருக்கிறது. மறந்துபோன நிலாச்சோறு நினைவுகளையும், பள்ளிக்கூட குறும்புகளையும், பாட்டியிடம் கதை கேட்ட ஆர்வத்தையும் ஆசுவாசமாய் அசைபோட தமிழ் சாமரம் வீசுகின்றது. மண்ணை பிரிந்த சோகமும், தனிமை காட்டும் ஞானமும், சின்ன சின்ன ஆசையும் சிங்காரம் கட்டி தமிழ்ப்பாட்டியோடு செல்லம் கொஞ்சுகிறது. 

அதிகாலை மற்றும் அந்திமாலை வானம் தரும் வரங்களும், பகலிரவு அயராது இயற்கை வகுத்த நியதிகளும், மேக வாசல் தாண்டி வாசல் வந்த மழைகளும், பூமியென்று பூத்து நின்ற புனிதமும் தமிழ் பூசிக்கொண்டு இங்கு தாளம் போட்டு பாடுகின்றன. அன்னையின் அன்பும், தாலாட்டின் கனிவும், காதலின் அழகும், குழந்தையின் குழைவும், குடும்பத்தின் உறவும் தமிழ் கவிதைத்திருவிழாவில் தேர்மீது உற்சவம் வருகிறார்கள்.

பம்பரம் போல சுழன்றோடிக்கொண்டிருக்கும் கம்பியூட்டர் காலத்தில் இந்த படைப்பு வாசிக்கும் அனைவரையும் ஒரு கணம் நிதானித்து தங்களின் வேர்களை நோக்கியும், தங்கள் பூர்வீக மண்ணின் வனப்பு மிகுந்த வாழ்க்கை குறித்தும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
அதிகாலை சூரியனாய், சன்னலோர மழையாய், தாயின் தாலாட்டாய் இந்த கவிதைகள் தமிழ் வாசம் வீசும் வாசகர்களின் மனம் குளிர, முகம் மலர, நினைவுகள் வருடி சுகமளிக்கட்டும்.

இந்த பானையில் இருந்து சில பருக்கைகள்:

"உனக்கு விழா
தினம் எடுக்கிறது
தனக்கென வாழாத வானம்"

"ஒரு குருவியின்
பாடலோடு
குளிர்காலை
கும்மியடிக்கிறது"

"முத்தாரம் தீட்டயிலே முழுமதியே நீ உறங்கு
முத்துப்பல் சிரிக்கையிலே முகவடிவே நீ உறங்கு"

"ஏர்க் காட்டில் போறவளே
என் காட்டில் பயிர் இல்லையோ"

Read More...
Paperback
Paperback 320

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

உதயகுமார் காங்கேசன்துறை

ஐயா திரு.உதயகுமார் காங்கேசன்துறை அவர்கள் கருத்தாழமிக்க அழகிய ஆன்மீக தேவார பாடல்களையும், ஞான தத்துவ பாடல்களையும், சிறு கதைகளையும், காதல், குடும்பம் மற்றும் பல வாழ்வியல் சார்ந்த கவிதைகளையும் எழுதியுள்ளார். இலங்கையில் உள்ள காங்கேசன்துறை என்ற ஊரில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வரும் இவர் சிறு வயது முதலே தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவராக இருந்துள்ளார்.

இவரின் கவிதைகள் இலங்கை வானொலியின் ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிமுகமானவை. இலங்கையின் வீர கேசரி, ஜெர்மனி இங்கிலாந்து நாடுகளில் அவ்வப்போது பிறப்பெடுத்த இலக்கிய சஞ்சிகைகளான தூண்டில் தேன், அலை ஓசை, சிந்தனை, புலம் ஆகியவைகளில்  அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.  காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் உயர்தர விஞ்ஞான பிரிவில் மாணவராக இருந்த காலங்களில் கலைப்பேரரசு திரு. பொன்னுத்துரை அவர்களின் நாடகங்களில் நடித்துள்ளார், இவை அகில இலங்கை பாட சாலைகளுக்கான தமிழ் நாடக போட்டியில் பலமுறை முதற்பரிசை பெற்றுள்ளன.
1989ம்  ஆண்டில் ஐரோப்பாவில் வெளியான இலக்கிய பத்திரிகைகளில் சிறந்த  கவிதைக்கான முதற்பரிசை பெற்றுள்ளார். 90ம் ஆண்டுகளில் ஜெர்மனியிலுள்ள அரசு நாடக நிறுவனங்களில் நடித்துள்ளார், தமிழிலும் ஜெர்மனியிலும் நகைச்சுவை நாடகங்கள் எழுதி இயக்கி நடித்துள்ளார்.
சராசரி இல்லற வாழ்க்கையில் இருந்துகொண்டே மெய்ஞ்ஞான நிலையை அடைந்த இவர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள போதிலும் தன்னை அடையாளப்படுத்தி கொள்வதிலும்  அங்கீகாரப்படுத்தி கொள்வதிலும்  ஆர்வமில்லாதவராக  இருந்துள்ளார்.

Read More...

Achievements