Share this book with your friends

TAMIL NAMES / காப்பியாவின் தமிழ்ப் பெயர்கள்

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

தமிழ்க் குழந்தைகட்குச் சமயம் சார்ந்த பிறமொழிச் சொற்கள் பெயர்களாகச் சூட்டப்படுவது நெடுங்கால வழக்கமாக இருந்தது. சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுவித்துத் தமிழர் என்னும் இனவுணர்வுடன் வாழ மக்களை நெறிப்படுத்திய தமிழீழ அரசு, இன அடையாளத்தை வலுப்படுத்தத் தமிழர் அனைவரும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவதே தக்கது என உணர்ந்தது.

குழந்தைகட்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தத் திட்டமிட்ட தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்ப் பெயர்க்கையேடு ஒன்றை வெளியிட்டது. அந்தக் கையேட்டில் பத்தாயிரம் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் தனித்தனியே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. பத்தாயிரம் ஆண் - பெண் பெயர்களைக் கொண்ட கையேடுகள் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. மருத்துவ மனைகளில் குறிப்பாக மகப்பேறு மருத்துவமனைகளில் அந்தக் கையேடு வைக்கப்பட்டிருந்தது.

குழந்தை பிறந்தவுடன், பெற்றோர் அந்தக் கையேட்டிலிருந்து தமக்கு விருப்பமான பெயரைத் தெரிவு செய்து பிள்ளைக்குச் சூட்டுவர். குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டதற்கான சான்றிதழை மருத்துவர் வழங்குவார். அந்தச் சான்றிதழுடன் தமிழீழ வைப்பகம் சென்றால், தமிழ்ப் பெயரை உடைய அந்தக் குழந்தையின் பெயரில் ஆயிரம் உருபா வைப்புச் செய்யப்படும். அந்தப் பணம், குழந்தைக்குப் பதினெட்டு அகவை நிறைந்தவுடன் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். அந்தத் திட்டம் ‘தமிழமுதம்’ என்ற அழகிய தமிழ்ப் பெயரைத் தாங்கியிருந்தது.

Read More...
Paperback
Paperback 899

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஐந்து முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All